ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

குறள் 725
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு
[பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை]

பொருள்
ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

கற்க - கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி, படித்தல்

அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

அஞ்சா - அஞ்சாமல்  - பயப்படுதல்

மாற்றம் - சொல்; விடை; வஞ்சினமொழி; மாறுபட்டநிலை; பகை; கழுவாய்; வாதம்

கொடுத்தற் - கொடுத்தல் -  ஈதல்; பெற்றெடுத்தல்; பங்காடுதல்; விற்றல்; உடன்படுதல்; சாகக்கொடுத்தல்; திட்டுதல்; அடித்தல்; ஒருதுணைவினை

பொருட்டு -  காரணம்; மதிப்பிற்குரியது; மேம்பட்டது, நிமித்தமாக.

முழுப்பொருள் 
ஒரு அவையில் பேசும் முன்பு பேசுப்படுபவற்றின் தன்மை அறிந்தும் கற்றும், அவையின் தன்மையை அறிந்தும் அதற்கு ஏற்றவாறு பேசவேண்டும். சான்றோர் கூடியுள்ள அவை ஆயினும் அல்லது பகைவரின் அவை ஆயினும்  அவர்களுடைய மாட்சிமைக்கு மதிப்பு அளித்தும் விளைவுகளை நன்கு உணர்ந்து  பேசினாலும், அவர்களுக்கு அஞ்சாமல் பேசவேண்டும். அவர்கள் எதிர்கேள்விகள் கேட்டாலும் அதற்கு மதிப்புடன் பதில் கூறவேண்டும் / விவாதிக்க வேண்டும். 

விவாதங்களில் தக்க பதில்களைக் கூறுவதற்குத் தேவையான சொற்பொருள், மற்றும் விவாதங்களுக்கான வழிமுறை இலக்கணம் இவற்றை அவ்வவைகளில் பேசுபவர் கற்று அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு கற்றால் தான் அஞ்சாமல்  கருத்துக்களை முன் வைக்கவும் விவாதங்களில் ஈடுபடவும் ஏதுவாக இருக்கும்.

இவ்வறிவை தருக்கம், நியாயம் என்று வடமொழி நூலார் கூறுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆற்றின் அளவு அறிந்து கற்க - சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க; அவை மாற்றம் கொடுத்தற்பொருட்டு - வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு. (அளவை நூல், சொல் நூல் கற்றே கற்க வேண்டுதலின், அதற்கு அஃது ஆறு எனப்பட்டது. அளக்கும் கருவியை 'அளவு' என்றார், ஆகுபெயரான். அவர் சொல்லை வெல்வதொரு சொல் சொல்லலாவது, நியாயத்து வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும் முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப் பிழையாமல் கற்க என்பதாம், இதனான் அதன் காரணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.

மு.வரதராசனார் உரை
அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.

Thirukkural - Management - Public Speaking - Fear of speaking 
Thorough or proper learning for a person is gaining the ability to put across his views convincingly and courageously in the presence of educated people. One’s learning should help one gain the skills to debate in an open house, insists on Kural 725.

Learn grammer and dialects that you may
Be fearless in dispute

No comments:

Post a Comment