இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

குறள் 654
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இடுக்கண் - மலர்ந்தநோக்கமின்றிமையல்நோக்கம்படவரும்இரக்கம்; துன்பம் வறுமை

படினும் - படிதல் - அடியிற்றங்குதல்; பரவுதல்; வசமாதல்; கையெழுத்துத்திருந்திஅமைதல்; கீழ்ப்படிதல்; குளித்தல்; கண்மூடுதல்; அமுங்குதல்; கலத்தல்; வணக்கமுடன்கீழேவிழுதல்; நுகர்தல்; பொருந்துதல்.

இளிவந்த - இளிவு - இழிவு; இகழ்ச்சி இழிதகவு அருவருப்பு அவலச்சுவைநான்கனுள்ஒன்று; நிந்தை

செய்யார் - பகைவர்; செய்யமாட்டார்கள் 

நடுக்கு - நடுக்கம்; மனச்சோர்வு.
நடுக்கம் - நடுங்குகை; மிக்கஅச்சம்; துன்பம்; கிறுகிறுப்பு.

அற்ற - அல்லாத

காட்சி - பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.

யவர் - அவர்

முழுப்பொருள் 
தனக்கு எவ்வளவு துன்பங்கள் இடையூறுகள் சோதனைகள் வந்தாலும் (வந்து நெடுங்காலம் சூழ்ந்தாலும்) மனசோர்வான காலத்திலும் நடுக்கம் அற்ற ஐயம் அற்ற தெளிவான அறிவை உடையோர் (எக்காரணத்திற்காகவும் காழ்ப்பாலும் வஞ்சத்தாலும் கோபத்தாலும் விரத்தியாலும்) இழிவான செயல்களை நடுக்கமற்ற சிந்தனைகளையும் தெளிவுடைய அறிவுடையவர்கள் ஒருபொழுதும் செய்யமாட்டார்கள். அதுவே மேன்மை உடையார்க்கு அழகு. 

கோபத்தில் (இழிவான செயல்களை) செய்தேன் அது மனித இயற்கை/சுபாவம், நானும் மனுஷன் இல்லையா? என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டமாட்டார்கள். துன்பமோ நெடுங்காலம் துன்பம் இருந்ததனால் வந்த சோர்வோ தவறு செய்வதற்கான பலவீனமான சந்தர்ப்பங்களாக கூடாது என்கிறார் திருவள்ளுவர்.

அதற்கு ஒருவர் தன் ஆத்மஷக்தியை வளர்த்துக்கொள்வது மிகவும் உதவும். அதனை வளர்ப்பது ஒரு தவமாகும். ஆனால் எல்லோராலும் முடிந்த ஒன்றாகும்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் - தாம் இடுக்கணிலே படவரினும், அது தீர்தற்பொருட்டு முன் செய்தார்க்கு இளிவந்த வினைகளைச் செய்யார்; நடுக்கு அற்ற காட்சியவர் - துளக்கம் அற்ற தெளிவினை உடையார். (சிறிதுபோழ்தில் கழிவதாய இடுக்கண் நோக்கி, எஞ்ஞான்றும் கழியாத இளிவு எய்தற்பாலது அன்று என்பதூஉம், அஃது எய்தினாலும் வருவது வரும் என்பதூஉம் தெளிவர் ஆகலான் , 'செய்யார்' என்றார்.).

மணக்குடவர் உரை
துன்பம் வரினும் இழிவாகிய வினைகளைச் செய்யார் துளக்க மற்ற தெளிவுடையார். இது பிறரால் இகழப்படுவன செய்யற்க வென்றது. இதனையும் கடிய வேண்டு மென்பது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
அசைவற்ற ‌தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.

English Meaning - As I taught a kid - Rajesh
A knowledgeable person with clarity, a wise person will never do or support wrong things even amidst difficult situations, hurdles, testing times, depression times despite occsilations in mind and dilemma. It is easy to give an excuse that I did it in anger, out of depression, difficult situation etc. Or another common excuse is I am also human. But, wise people won't give such lame execuses. Hence, one has to develop their inner strength so that it protects us from doing wrong things during tough times.

Questions that I ask to the kid
What does a wise person not do during difficult times?
One has an oscillatory mind during difficult times. Who does what? How can one avoid it?

No comments:

Post a Comment