ஆற்றாரும் ஆற்றி அடுப

குறள் 493
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]

பொருள்
ஆற்றுதல் வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றாரும் -  வலிமை அற்றவர்

ஆற்றி ஆற்றுதல் வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அடுப - அடுதல் - கொல்லுதல்; தீயிற்பாகமாக்குதல்; சமைத்தல் வருத்துதல் போராடுதல் வெல்லுதல் காய்ச்சுதல்; குற்றுதல் உருக்குதல்

இடன் - அகலம்; நல்லநேரம்; இடப்பக்கம்இருப்பவன்.

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

போற்றார் - பகைவர்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

போற்றிச் - துதிச்சொல்வகை; துதித்தல், புகழ்மொழி; கோயிற்பூசைசெய்யும்மலையாளநாட்டுப்பார்ப்பனன்; பாட்டன்.

செயின் - செய்தால் / செய்ய வேண்டும்

முழுப்பொருள்
"ஆற்றாரும் ஆற்றி அடுப" என்றால் வலிமை அற்றவர்கள் ஒரு செயலை ஆற்றி பகைவரை வெல்ல முடியும் (அல்லது தனது இயலாமையை வெல்ல முடியும்) என்கிறார் திருவள்ளுவர். எப்படி? செயலில் வரக்கூடிய இடர்களை அறிந்து அச்செயலை செய்வேண்டிய தக்க நேரத்தையம் இடத்தையும் அறிந்து பகைவரின் திறனை மதித்து அச்செயலை முழுகவனுத்துடன் செய்தால் அப்பகைவரை (அப்போரில் அல்லது தனது இயலாமையை) வெல்ல முடியும். இங்கே நேரத்தின் முக்கியத்துவத்தை கோடிடுகிறார் திருவள்ளுவர்.

ஆதலால் தன்னை வலிமையாய் கருதுபவர் தன் பகைவர் வலிமையில்லாதவர் ஆயினும் தன்னுடைய வீழ்ச்சிக்கும் தளர்வுக்கும் சோர்வுக்கும் காத்திருந்து தன்னை தாக்குவார் என்பதை உணர வேண்டும்.  ஆதலால் எப்பொழுதும் தன்னை எத்தகைய சூழலுக்கும் ஆயுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆற்றாரும் ஆற்றி அடுப - வலியர் அல்லாதாரும் வலியாராய் வெல்வர், இடன் அறிந்து போற்றிப் போற்றார்கண் செயின் - அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினை செய்வாராயின்.
('வினை' என்பதூஉம் 'தம்மை' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. காத்தல், பகைவரான் நலிவு வராமல் அரணானும் படையானும் காத்தல். இவற்றான் வினை செய்வாராயின் மேற்சொல்லிய வலியின்றியும் வெல்வர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
வலியில்லாதாரும் வலியுடையராய் வெல்வர்: பகைவர்மாட்டு வினைசெய்யும் இடமறிந்து தம்மைக் காத்து வினை செய்வாராயின்.

மு.வரதராசனார் உரை
தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்.

சாலமன் பாப்பையா உரை
பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

No comments:

Post a Comment