கோட்டுப்பூச் சூடினும் காயும்

குறள் 1313
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று
[காமத்துப்பால், கற்பியல்,  புலவி நுணுக்கம்]

பொருள்
புலவிநுணுக்கம் - pulavi-nuṇukkam   n. id. +. Sulks of a wife on flimsy grounds; அற்பகாரணத்தைக்கொண்டு தலைவி ஊடுகை. (குறள், 132,அதி.)

கோட்டுப் - - நெற்கூடு; சீட்டாட்டத்தில் எல்லாப் பிடிகளையும் பிடித் துவெல்லுதல். kōṭṭu   III. v. t. bend, make crooked, வளை VI; 2. paint, எழுது; 3. build, construct, கட்டு.

பூச் - ஒர்உயிர்மெய்யெழுத்து(ப்+ஊ); அழகு; கொடிப்பூ; கோட்டுப்பூ, நீர்ப்பூ, புதற்பூஎனநால்வகைப்பட்டமலர்; தாமரைப்பூ; பூத்தொழில்; சேவலின்தலைச்சூடு; நிறம்; நீலநிறம்; பொலிவு; மென்மை; யானையின்நுதற்புகர்; யானையின்நெற்றிப்பட்டம்; கண்ணின்கருவிழியில்விழும்வெண்பொட்டு; விளைவுப்போகம்; ஆயுதப்பொருக்கு; தீப்பொறி; நுண்பொடி; தேங்காய்த்துருவல்; சூரியனின்கதிர்படுதற்குமுன்னுள்ளபூநீற்றின்கதிர்; இலை; காண்க:முப்பூ; இந்துப்பு; வேள்வித்தீ; கூர்மை; நரகவகை; பூப்பு; பூமி; பிறப்பு.

கோட்டுப்பூ - மரக்கொம்புகளில்  தோன்றும் பூ.

சூடினும் - சூடுதல் - அணிதல்; பெயர்முதலியனதரித்தல்; கவிதல்; வளைந்துபோதல்.

காயும் - காய்தல் - உலர்தல்; சுடுதல்; மெலிதல்; வருந்தல்; விடாய்த்தல்; வெயில்நிலாக்கள்எறித்தல்; எரித்தல்; அழித்தல்; விலக்குதல்; வெறுத்தல்; வெகுளுதல்; கடிந்துகூறுதல்; வெட்டுதல்

ஒருத்தியைக் - காதலியை

காட்டிய - காட்டுதல் - காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல்

சூடு - வெப்பம்; அரிக்குவியல்; சுடப்பட்டது; சுடுபுண்; சூட்டுக்குறி; ஒற்றடம்; கோபமுண்டாக்குதல்; கோபம்; உணர்ச்சி; விலையேற்றம்; கண்ணோய்வகை; வடு.
சூடு - cūṭu  கிறேன், சூடினேன், வேன், சூட, v. n. To wear, commonly on the head, அணிய. (c.) 2. To be crowned, crested, to adorn one's self, கிரீடஞ்சூட. (p.) 3. To bear, sus tain, be invested with a name, நாமஞ்சூட. 4. v. a. (coast usage.) To brand cattle, brand as a medical operation, மாடுமுதலியவற் றைச்சுட.

நீர் - நீங்கள்
நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

முழுப்பொருள்
ஒரு கட்டுப் பூவினை தலைவன் தலைவியின் தலையில் ஆசையாய் சூடினாலும், (என்றும் இல்லாமால் இன்று ஏன்) என் தலையில் சூடினாய்? வேறெந்த சிறுக்கிக்கு (பெண்ணுக்கு) இந்த பூக்களைச் சூட என் தலையில் வைத்து ஒத்திகை பார்க்கிறாய் என்று தலைவி தலைவனிடம் கடிந்து கூறினாளாம். பெண்கள் காரணமே இல்லையென்றாலும் அற்ப காரணங்களை தேடி தலைவனிடம் ஊடல் செய்வார்கள். அதில் ஓர் இன்பம் அவர்களுக்கு.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு, நீவிர் கூடியொழுகா நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது? என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.) கோட்டுப்பூச் சூடினும் - யான் கோடுதலைச்செய்யும் மாலையைச் சூடினேனாயினும்; ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற்காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளாநிற்கும்; இத்தன்மையாட்கு ஒரு காரணம் வேண்டுமோ? ('கோடு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். பூ - ஆகுபெயர், வளையமாகச் சூடினும் என்பதாம்; 'கோட்டம் கண்ணியும் கொடுந்திரையாடையும்' (புறநா.275)என்றார் பிறரும். இனி, 'அம்மருதநிலத்துப் பூவன்றி வேற்றுநிலத்துக் கோட்டுப்பூவைச் சூடினேனாயினும், ஈண்டையாள், பிறளொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணிகாட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளும்', எனினும்அமையும்.).

மணக்குடவர் உரை
பக்கப்பூச் சூடினும் ஒருத்திக்குக் காட்டுதற்காகச் சூடினீரென்று சொல்லிக் காயும். பக்கப்பூ- ஒப்பனைப்பூ. கோட்டுப்பூ சூடினீர் என்பதற்கு வளைப்பூச்சூடினீரெனினுமாம். இது கோலஞ்செய்யினும் குற்றமென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள்.

No comments:

Post a Comment