நயந்தவர் நல்காமை சொல்லுவ

குறள் 1232
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]

பொருள்
நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக்கண்டதலைவிதனதுஆசைப்பாடுகூறும்புறத்துறை.

நயந்தவர் - நயந்தோர் -nayantōr   n. id. (பிங்.) 1.Friends, companions; மித்திரர். 2. Husband,as one who loves; கணவர்

நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல்.

ஆமை - கூர்மம்; ஓர்உயிரினம்; ஒருநோய்; மணம்

நல்காமை - விரும்பாதவர்

சொல்லுவ - colluvāṉ-kuṟippu   n. சொல்¹- +. Speaker's aim or intention;கூறுவோன் கருத்து

போலும் - போன்று

பசந்து - pacantu   n. U. pasand. 1.Elegance; beauty; attractiveness; fineness;நேர்த்தி. பசந்தெனவே சென்று (கவிகுஞ். 2). 2.A superior kind of Mango fruit; உயர்ந்த மாம்பழம் உன்னிடத்தில் என்ன பசந்திருக்கிறது.

பசத்தல் - பசுமையாதல்; காமத்தால்மேனிபசலைநிறமாதல்; ஒளிமங்குதல்; மங்கிப்போதல்; பொன்னிறங்கொள்ளுதல்.

பனி - குளிர்ந்துவிழுந்துளி; காண்க:பனிக்கட்டி; குளிர்:குளிர்ச்சிநீர்:கண்ணீர்; மழை; மஞ்சு; இனிமையானது; அச்சம்; நடுக்கம்; நோய்வகை; சுரம்; துன்பம்.

வார்  - நெடுமை; கடைகயிறு; தோல்வார்; நுண்மை; நேர்மை; வரிசை; உயர்ச்சி; நீர்; தோல்; முலைக்கச்சு; துண்டு.

வாரும் - வார்-தல் - vār-   4 v. intr. 1. To flow,trickle; ஒழுகுதல். நெய்வார்ந்தனைய திண்கோல்(சீவக. 1697). 2. To spread, overflow; வெளிவிடுதல். நெடுநீர் வார்குழை (நெடுநல். 139). 3. Tobe long; நெடுமையாதல். வார்மயி ருளரினள் (அகநா. 102). 4. To be upright; நேராதல். வார்ந்திலங்கு வையெயிற்று (குறுந். 14). 5. To rise high;உயர்தல். (பிங்.) 6. To be in order; to bearranged in order; ஒழுங்குபடுதல். மணல்வார் புறவில் (மலைபடு. 48). 7. To form milk, as grain;நென்மணி முதலியன பால்கட்டுதல். ஐவன வெண்ணெல் பால்வார்பு கெழீஇ (மலைபடு. 114). 8. Topeel off; உரிதல். பீலி வார்ந்து (அகநா. 69).--tr. 1.To comb, as hair; மயிர் கோதுதல். வாருறு வணரைம்பால் (கலித். 58). 2. To know; தெரிதல்.(சது.)

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
தலைவியை முன்பு காதலித்த தலைவர் இப்பொழுது அன்பு பாராட்டாமல் இருக்கிறார். இதனால் தலைவி (பசலை நோயினால்) துன்புற்றாள். இந்த துன்பத்தை அவளுடைய கண்கள் ஒளியிழந்து கண்ணீர் சொட்டி இவ்வுலகிற்கு கூறுகின்றன.

முன்பு விரும்பியவர் இப்பொழுது நம்மை விரும்பவில்லை என்றால் தலைவியின் மனம் மட்டும் வருந்தவில்லை. அவளுடைய உறுப்புகளும் துன்பத்தில் வருந்தி அதன் நலன் கெடுகிறது. 

மேலும் 
இலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர்
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே
துலங்கு முறுவல் செயக் களிகூருஞ் சுழல்புனல்போல்
கலங்கும் பொழுது தெளியுஞ் சொன்மானைக் கருதினர்க்கே

எனும் சரசுவதி அந்தாதி (கலித்துறை பாகம் 6) சரசுவதியைத் துதிப்பவர் நிலையைக் கூறுகிறது

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) பசந்து பனி வாரும் கண் - பசப்பெய்தன்மேல் நீர் வார்கின்ற நின் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் - நமமால் நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவ போல நின்றன; இனி நீ ஆற்றல் வேண்டும். (சொல்லுவ போறல்: அதனை அவர் உணர்தற்கு அனுமானமாதல். 'நயந்தவர்க்கு' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை
முன்பு நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுவனபோ லாகாநின்றன: பசப்புற்று நீர்சொரிகின்ற கண்கள். இது தலைமகள் ஆற்றாமை கண்டு இக்கண்ணீர் அலராகா நின்றதென்று அவள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி கூறியது.

மு.வரதராசனார் உரை
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.

சாலமன் பாப்பையா உரை
பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!

No comments:

Post a Comment