தெரிந்துணரா நோக்கிய உண்கண்

குறள் 1172
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
தெரிந்து - அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்

உணரா - உணரார் - அறியார்; மூடர்

நோக்கிய - நோக்கியநோக்கம் - கண்களால்நோக்குகை.

உண்கண் - மைதீட்டியகண்.

பரிந்து - பரிந்துபேசு-தல் - parintu-pēcu-   v. intr. பரி¹- +. 1. To plead, intercede, vindicate,advocate one's interests; ஒருவற்காக ஏற்றுப்பேசுதல். 2. To speak with feeling, solicit withearnestness; அன்போடு கூறுதல் பரிந்துபேசியொன்று கொடுத்தாய் (அருட்பா, v, அருட்பிர. 98). 

உணராஉணரார் - அறியார்; மூடர்

பைதல் - இளையது; சிறுவன்; குளிர்; துன்பம்.

உழத்தல் -  செய்தல்; பயிலுதல்; பழகுதல்; முயலுதல்; வெல்லுதல்; வருந்துதல்; பட்டனுபவித்தல்; துவைத்தல்.

உழப்பது - வருந்துதல்

எவன்? - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்

முழுப்பொருள்
இந்த மைதீட்டிய அழகிய கண்கள் தானே அன்று தலைவனை பற்றி ஆராயாமல் என்னிடம் காண்பித்தது.  இதனால் இன்ன விளைவுகள் வரும் என்று உய்த்துணராது, அவன் அழகைக் கண்டு பருகி, காதலில் ஆழ்ந்தது இக்கண்கள். ஆனால் தலைவன் இன்று பிரிந்து இருக்கும் உண்மையை உணராமால் எனக்கு பரிந்து பேசாமல் கூச்சமே இல்லாமல் இந்த கண்களும் என் துன்பத்தில் வருந்தி அழுகிறதே ? என்னுடைய இந்த நிலைமையே இந்த கண்களால் தானே. கண்கள் தான் இதற்கு காரணம் என்று உணராமல் ஏன் இந்த கண்கள் அழுகிறது ?


ஒப்புமை
2) ”பைதல வாகிப் பசக்குவ மன்னோஎன்
நெய்தல் மலரன்ன கண்” (கலி.142:22-3)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) தெரிந்து உணரா நோக்கிய உண்கண் - மேல் விளைவதனை ஆராய்ந்தறியாது அன்று காதலரை நோக்கி நின்ற உண்கண்கள்; பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன் - இன்று இது நம்மால் வந்ததாகலின் பொறுத்தல் வேண்டும் எனக் கூறுபடுத்துணராது துன்பம் உழப்பது என் கருதி? (விளைவது: பிரிந்து போயவர் வாராமையின் காண்டற்கு அரியராய் வருத்துதல், முன்னே வருவதறிந்து அது காவாதார்க்கு அது வந்தவழிப் பொறுத்தலன்றேயுள்ளது? அதுவும் செய்யாது வருந்துதல் கழிமடச் செய்கை என்பதாம்.)

மணக்குடவர் உரை
முன்பு அவர் நல்லரென்று தெரிந்து உணர்ந்து நோக்கிய உண்கண்கள் இப்பொழுது வருத்தமுற்று, நல்லரென்று உணராவாய், துன்பமுழப்பது எற்றுக்கு? இது கண்ணினறியாமையைத் தோழிக்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.

சாலமன் பாப்பையா உரை
வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?.

No comments:

Post a Comment