கெடல்வேண்டின் கேளாது செய்க

குறள் 893
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு
[பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை]

பொருள்
கெடல் கெடு - கேடு; வறுமை; தவணை; எல்லை.

கெடல் கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

வேண்டின் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

கேளாது - -, 9 v. [K. M.kēḷ.] tr. 1. To hear, hearken, listen to;செவிக்குப் புலனாக்குதல். சொல்லுநபோலவுங் கேட்குநபோலவும் (தொல். பொ 513). 2. To learn, be instructed in; பாடங்கேட்டல் ஒரு குறி கேட்போன்(நன். பொது 42). 3. To ask, inquire, question,catechise; வினாதல் என்னை நீ கேட்கையாலே (கைவல். 20). 4. To investigate; விசாரித்தல் களவு போனமை எங்ஙனே என்றுகேட்டு (Insc.) (சோழவ. 66).5. To request, solicit, crave; வேண்டுதல் படிக்கப்புத்தகம் தருமாறுகேட்டான். 6. To be informed of;கேள்விப்படுதல். தருதி நீ யெனக் கேட்டேன் (பாரத.கன்ன. 238). 7. To require, demand, claim; உரிமை கொண்டாடிக் கொடுக்கச்சொல்லுதல். 8. Toavenge, punish; தண்டித்தல் தீயரைத் தெய்வங்கேட்கும். 9. To effect a remedy, cure, as medicine;நோய்முதலியன நீக்குதல் செயச் செய வூறுகேளாது. . . அரவுகான்ற வேகம் மிக்கிட்டதன்றே (சீவக. 1274).10. To bid, offer, inquire the price of; விலைகேட்டல். 11. To accept, agree to; ஏற்றுக்கொள்ளுதல் கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் (குறள், 643

செய்க - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

அடல் - வலிமை; வெற்றி போர் கொலை பகை மீன்வகை.

வேண்டின் -வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

ஆற்றுதல் - āṟṟu-   5 v. intr. 1. To becomestrong, powerful; வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள், 493). 2. To be possible; கூடியதாதல். ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி. 75). 3. Tobe sufficient; போதியதாதல். தட்டுமுட்டுவிற்று மாற்றாது (பணவிடு. 225). 4. To escape, obtain deliverance, survive; உய்தல் (பிங்.) 5. To be equalto, to compare with; உவமையாதல். வையகமும்வானகமு மாற்ற லரிது (குறள், 101).--v. tr. 1. To

ஆற்றுபவர் - வலிமையானவர்

கண்  - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இழுக்கு - குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு

முழுப்பொருள்
ஒருவர் கெடவேண்டும் என்று நினைத்துவிட்டால் யாரையும் (அதாவது பெரியவர்களை, அனுபவசாலிகளை, சான்றோர்களை, அறிஞர்களை) கேட்காமல் (அவர்களிடமும் விசாரிக்காமல், விவாதிக்காமல்) செய்தாலே போதும். அப்படி கேட்காமல் செய்தால் அவர்கள் கெட்டுப்போவார்கள்.  அதுவே ஒருவர் அழியவேண்டும் என்றால் தான் பழகுகின்ற பெரியவரிடத்தே சான்றோரிடத்தே தவறு செய்தாலே போதும். அவர்கள் அழிந்து விடுவார்கள்.

ஏன் கெட்டுப்போவார்கள் எனில் அனுபவம் இல்லாமல் ஒரு காரியத்தை செய்யும் பொழுது அதில் தவறுகள் ஏற்பட பல வாய்ப்புகள் உண்டு. பிறரை ஆலோசிக்காமல் செய்தால் அந்த தவறுகளில் இருந்து தப்பிக்க முடியாமல் கெட்டுப்போவார். இடர்கள் வந்த பின்பு சென்று பெரியவரை ஆலோசிப்பது பல நேரங்களில் தாமதமாகிவிடும்.  இழந்தவை இழந்தவையே.

அதுவே பெரியோரிடத்தில் இருக்கும் பொழுது தவறு செய்தால் அழிந்துவிடுவார்கள். தவறு செய்தால் அதனை திருத்துவதற்கு தானே பெரியோர் இருக்கிறார்கள். அப்படி என்றால் நாம் எப்படி அழிந்து போவோம்? ஒரு செயலை செய்யும் பொழுது தவறு வந்தால் அது இயற்கை.  பெரியோரிடம் கேட்டு அச்செயலை செய்தாலும் தவறுகள் நடப்பதும் இயற்கையே. ஆனால், பெரியோரிடம் விவாதித்தும், கேட்டும் கற்றுணர்ந்தும் நாம் செய்யாமல் (அல்லது கற்றுணராமல்) குற்றம் இழைத்தால் அவர்களை காப்பாற்ற முடியாது. அவர்கள் அழிந்து போவார்கள். அத்தகையவர்களை பெரியோர்களும் இகழ்வர்.

உதாரணமாக மகாபாரதத்தில் கர்ணன் தான் பிராமணன் என்று விஸ்வாமித்ரரிடம் பொய் சொல்லி ப்ரம்மாஸ்திரம் தன்னை கற்றுக்கொள்வான். ஆனால் பெரியோரிடம் பொய் சொல்வது இழுக்கு. விஸ்வாமித்ரர் உண்மையை அறிந்த பின்பு கர்ணனுக்கு சாபம் இடுவார். அதனால் பிரம்மாஸ்திரம் பயனற்றதாகிவிடும்.  குருஷேத்திரத்தில் அவன் உயிரும் அழியும்.  அதேபோல் துரியோதனன் பெரியோர் (சான்றோர் - பீஷ்மர், கிருஷ்ணன்) சொல்லை கேட்காமல் பகையை வளர்த்து போரை உருவாக்கி இறுதியில் போரிலே மாய்வான். அதுவே பாண்டவர்களில் தம்பி மார்கள் எல்லோரும் அண்ணன் சான்றோன் தருமனின் பேச்சை மதிப்பார்கள், பாண்டவர்களும் கிருஷ்ணன் சொல்லையும் மற்ற சான்றோர் சொல்லையும் கேட்டு நடப்பார்கள். அதனால் அவர்களுக்கு கேடு நடக்காது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு - வேற்று வேந்தரைக் கோறல் வேண்டிய வழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர்மாட்டுப் பிழையினை; கெடல் வேண்டின் கேளாதுசெய்க - தான் கெடுதல் வேண்டினானாயின், ஒருவன் நீதிநூலைக் கடந்து செய்க. (அப்பெரியாரைக் 'காலனும் காலம் பார்க்கும் பாராது -வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய - வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தர்' (புறநா.41) என்றார் பிறரும்.நீதி நூல் 'செய்யலாகாது' என்று கூறலின், 'கேளாது' என்றார்.).

மணக்குடவர் உரை
தான் கெடுதல் வேண்டுவனாயின், பெரியாரைக் கேளாதே ஒருவினையைச் செய்க. தன்னைக் கொல்ல வேண்டுவனாயின், வலியுடையார் மாட்டே தப்புச் செய்க.

மு.வரதராசனார் உரை
அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் தான் அழிய எண்ணினால் பிறரை அழிப்பதைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம், நீதிநூல்கள் சொல்லும் வழிகளையும் எண்ணிப் பாராமல் பிழை செய்க.

No comments:

Post a Comment