ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்

குறள் 834
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
[பொருட்பால், நட்பியல், பேதைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஓதி - அறிவு; கல்வி; ஓதுபவன்; ஓந்தி; செறிவு; பெண்மயிர்; நெருங்கித்தாக்குகை; அன்னம்;

உணர்ந்தும் - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

பிறர்க்கு - piṟar   n. id. Outsiders, strangers;அன்னியர்

உரைத்தும் - urai-   v. tr. [K. ore, M. ura.]1. To tell, say, speak; சொல்லுதல் (திவா.) 2.To sound; ஒலித்தல் (திவா.)

தான் -படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

அடங்குதல் - அமைதல்; நெருங்குதல் கிடத்தல் கீழ்ப்படிதல் சுருங்குதல் நின்றுபோதல் படிதல் மறைதல் புலன்ஒடுங்குதல்; உறங்குதல்

அடங்காப் - கீழ்படியாத, நெருங்காத

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.
பேதையின்

பேதையின்  -  பேதையை விட 

பேதையார் - பேதை என யாரும்

இல் - யாரும் இல்லை

முழுப்பொருள்
“கற்கக் கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று முன்பே தெளிவாக சொல்லியிருக்கிறார் வள்ளுவர். கற்கத்தக்கவற்றைக் கண்டு, அவற்றைக் குற்றமில்லாமல் கற்று, பின்பு கற்றவற்றின் கருத்துக்கேற்ப நல்வழிகளில் நின்று ஒழுகுதல் வேண்டும்.

ஒருவர் நூல்கள் பலவற்றை கற்றுத் தேர்ந்து இருப்பார்கள், கற்றவற்றை தர்க்கத்தினாலோ அல்லது அனுபவத்தினாலோ உள்ளமும் உணர்ந்து இருப்பார்கள், தான் கற்றவற்றை பிறர்க்கு உரைத்தும் இருப்பார்கள். ஆனால் தன்னுடைய வாழ்விலே அதனை பின் பற்றாமல் அதன் அப்படி நடக்காமல் இருக்க மாட்டார்கள். அவர்களை விட அறிவில்லாதவர்கள் பேதைகள் யாரும் இல்லை. ஏனெனில் அறிவை பெறாதவர்கள் அறிவிலிகள் (பேதைகள்) ஆனால் அறிவை பெற்றும் அதன் படி ஒழுகாதவர்களை போன்ற பேதையை விட பேதை யாரும் இல்லை.

இங்கே காந்தியை பற்றி கூற வேண்டும். காந்தி நூல்கள் பலவற்றை கற்றவர் அல்ல.  அவர் லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் (Leo Tolstoy 's War and Peace ), பகவத் கீதை போன்ற சில நூல்களை மற்றும் பயின்றார். மற்றவர்களைப்போல காந்தி கற்பதில் ஆர்வம் காட்டியவரல்ல. கற்றவற்றைத் தன் வாழ்க்கையாக ஆக்கிக்கொள்வதில் ஆர்வம் காட்டியவர். ஆகவேதான் அவரது சமகாலப் பேரறிஞர்களின் நூற்றில் ஒரு பங்கு நூல்களைக்கூட காந்தி வாசித்ததில்லை. ஆனால் வாசித்த ஒவ்வொரு கருத்தையும் அவர் தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு பரிசீலனை செய்தார். அவற்றை தன் வாழ்க்கையில் முழுமையாகக் கடைப்பிடிக்கமுடியுமா என்று பார்த்தார். அந்தப் பிடிவாதமான சுயபரிசோதனைதான் காந்தியை உருவாக்கியது.

நிறவெறிக்கு எதிரான திட்டவட்டமான போராட்டங்கள் வழியாக காந்திய சிந்தனை காந்திக்குள் கரு வடிவம் கொண்டது. இயற்கையுடன் இணைந்த மேலான வாழ்க்கை பற்றிய இலட்சியம் வழியாக காந்தியம் ஒரு தரிசனமாக ஆகியது. உண்மையை பலப்பல பக்கங்கள் கொண்டதாக மட்டுமே அணுகவேண்டும் என்ற பிரக்ஞை வழியாக காந்தியம் நம் காலகட்டத்தின் மிகப்பெரிய தத்துவநிலைப்பாடாக மாறியது. எந்நிலையிலும் அகிம்சையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற உறுதி வழியாக காந்தியம் மானுடம் இதுவரை உருவாக்கிக் கொண்ட மிகச்சிறந்த அரசியல் நடைமுறையாகத் திரண்டுவந்தது. காந்தி செயல் வீரர் ஆனார். கர்மயோகி ஆனார். ஆனால் வாழ்வில் பல நூல்களை கற்று அதன் படி நடக்காத பல அறிவிலிகள் உலகில் உண்டு. அப்படி பேதையாக இருக்காதே.

சிறுபஞ்சமூலப் 22 பாடல் வரி, “பேதைக்குரைத்தாலும் செல்லா துணர்வு” என்கிறது.இது ஒப்புக்கொள்ளக்கூடியதே இருப்பினும், ஓதி உணர்ந்தவனே பேதை இயல்பினனாக இருப்பின், என்ன பயன்?

கம்பனின் கவிநயம், இவ்வாறு சொல்லுகிறது இக்குறளின் கருத்தையே:

நற்பெருங் கல்விச்செல்வம் நவையறு நெறியை நண்ணி
முற்பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி முற்றிப்
பிற்பயன் உணர்தல் தேற்றாப் பேதை” (கம்ப களியாட்டுப் படலம் 6)

தந்தையே ஆயினும் தானடங்கான் ஆகுமேல் (இனியவை 8)

ஓதலும் ஓதி உணர்தலும் (அறநெறி 147)



மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஓதி - மனமொழி மெய்கள் அடங்குதற்கு ஏதுவாய நூல்களை ஓதியும்; உணர்ந்தும் - அவ்வடக்கத்தான் வரும் பயனை உணர்ந்தும்; பிறர்க்கு உரைத்தும் - அதனை அறியலுறப் பிறர்க்கு உரைத்தும்; தான் அடங்காப் பேதையின் - தான் அவையடங்கி ஒழுகாத பேதைபோல; பேதையார் இல் - பேதையார் உலகத்து இல்லை. (உம்மை முன்னும் கூட்டப்பட்டது. இப்பேதைமை தனக்கு மருந்தாய இவற்றால் தீராமையானும், வேற்று மருந்து இன்மையானும், 'பேதையின் பேதையார் இல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பேதையது தொழில் பொதுவகையான் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.).

மணக்குடவர் உரை
நூல்களைக் கற்றறிந்தும் அவற்றைப் பிறர்க்கு இசையச் சொல்லியும், தான் அடங்குதலைச் செய்யாத பேதையார்போலப் பேதையார் உலகத்தில் இல்லை.

மு.வரதராசனார் உரை
நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who has learnt all scholarly / professional books wholeheartedly by reciting, who has understood and realized the real meaning, who has taught and preached to others, yet if he doesn't follow or stand by his teaching is considering the stupidest because there is no stupid person than him. Because this stupidest person knows what to do through learning/teaching but doesn't do/follow.

Questions that I ask to the kid
Who is the stupidest person? why?

No comments:

Post a Comment