அந்தணர் நூற்கும் அறத்திற்கும்

குறள் 543 
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்
[பொருட்பால், அரசியல், செங்கோன்மை]

பொருள்
அந்தணர் - அந்தணர்வாக்கு antaṇar-vākku   n. id. +. The Vēdas; வேதம். (சிந்தா. நி. 156.)
அந்தணன் -  வேதத்தின் அந்தத்தை அறிபவன்; அழகிய தட்பத்தினையுடையவன், செந்தண்மையுடையவன்; பெரியோன் முனிவன் கடவுள் பார்ப்பான் சனி வியாழன்

நூற்கும் - நூற் - nūṟ   [in combin. for நூல்.] See நூன்; நூலின் உட்பகுதியாய் முடியும் உறுப்பு; நூற் பொருளினது நோக்கம்; நூலின் இறுதி.

அறத்திற்கும் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

ஆதியாய் - ஆதி - தொடக்கம்; தொடக்கமுள்ளது; காரணம் பழைமை கடவுள் எப்பொருட்கும்இறைவன்; சூரியன் சுக்கிரன் திரோதானசக்தி; காண்க:ஆதிதாளம்; அதிட்டானம் ஒற்றி காய்ச்சற்பாடாணம் மிருதபாடாணம்; நாரை ஆடாதோடை குதிரையின்நேரோட்டம்; மனநோய்

நின்றது - நிலைத்தபொருள்; தாவரம்; எஞ்சியது.

மன்னவன் - maṉṉavaṉ   n. மன்னு-. 1.See மன்னன். முறை செய்து காப்பாற்று மன்னவன்(குறள், 388). 2. Indra; இந்திரன். மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் (சிலப். 5, 173).
கோல்

மன்னன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

கோல் - கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி.

முழுப்பொருள்
அந்தணர் நூல் என்றதால் ஒரு வருணத்தாருக்கும் மட்டுமான நூல் என்று பொருளில்லை. அந்தணர் ஓதுவது என்றும், இறைவனையே அறவாழி அந்தணன் என்று வள்ளுவரே சொல்லுவதால், இறைவன் அளித்த மறைமொழி என்று கொள்ளுதலே நன்றாகும்.

வேதம் என்கிற மறைநூல் அல்லது பொதுவாக இறைவன் அளித்த மறைநூல்கள் மிகவும் முக்கியமானவை. அவை மனிதன் பின்பற்ற வேண்டியவற்றை கூறும் நூல்களாகும். அத்தகைய நூல்கள் பின்பற்றுவதற்கு தேவையானது நல்ல ஆட்சியாகும். அதாவது மன்னனின் செங்கோல். ஏனென்றால் ஆட்சி நிர்வாகம் ஒழுங்காக இருந்தால் தான் மக்கள் அமைதியாக இருப்பார்கள். அவர்களும் மறைநூல்களை கற்று அறிந்து உணர்ந்து பின்பற்ற முடியும். ஆட்சி சரியாக இல்லையென்றால் மக்களின் துன்பங்கள் அதிகமாக இருக்கும். வேலை இருக்காது, பஞ்சம் இருக்கும், திருட்டு இருக்கும், அச்சம் இருக்கும். இப்படி பல இன்னல்களை சந்தித்தால் மக்களால் எப்படி மறைநூல்களை கற்கக்கூடிய மனம் இருக்கும்? ஆதலால் மன்னவனின் செங்கோல் ஆட்சி எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் உள்ளது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது, மன்னவன் கோல் - அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல். 
(அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி அந்தணர் நூல் என்றார். 'மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்' (மணி. 22 208 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப் பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.

மு.வரதராசனார் உரை
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.

No comments:

Post a Comment