வாரி பெருக்கி வளம்படுத்து

குறள் 512
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை
[பொருட்பால், அரசியல், தெரிந்துவினையாடல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வாரி - வருவாய்; விளைவு; தானியம்; செல்வம்; மூட்டைகளைக்கட்டவுதவும்கழி; கூரையினின்று வடியும் நீரைக்கொண்டு செல்லுங்கால்; தோணிப்பலகை; மடை; சீப்பு; குப்பைவாருங்கருவி; தடை; மதிற்சுற்று; செண்டுவெளி; பகுதி; நீர்; வெள்ளம்; கடல்; நீர்நிலை; நூல்; திருமகள்; வீணைவகை; இசைக்குழல்; யானையகப்படுத்தும்இடம்; யானைகட்டுங்கயிறு; யானைக்கோட்டம்; வாயில்; கதவு; வழி; முறையில்என்னும்பொருளில்வரும்சொல்.

வாரி-த்தல் - vāri-   11 v. tr. vṛ. 1.To hinder, obstruct; தடுத்தல். (சூடா.) 2. Toasseverate, swear; ஆணையிட்டுக் கூறுதல். (யாழ்.அக.) 3. To conduct, drive, as a horse; நடத்துதல். பரிமா வாரித்த கோமான் (இறை. 13, உரை,பக். 91).

பெருக்கி - சுக்கிலம்; பெருக்கிக்காட்டுவது.

வளம் - செல்வம்; செழுமை; மிகுதி; பயன்; வருவாய்; நன்மை; மாட்சிமை; தகுதி; அழகு; பதவி; புனல்; உணவு; வாணிகப்பண்டம்; வெற்றி; வழி; பக்கம்.

படுத்து - வலிமை; திறமை.
படுத்தல் - செய்தல்; நிலைபெறச்செய்தல்; சேர்ப்பித்தல்; வளர்த்தல்; உடம்பிற்பூசுதல்; அழித்தல்; பரப்புதல்; தளவரிசையிடுதல்; ஒழித்தல்; வீழச்செய்தல்; எழுத்துகளின்ஒலியைத்தாழ்த்திக்கூறுதல்; கிடத்தல்; பறையறைதல்

உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண் (iṭukkaṇ   s. (இடுங்குக்+கண்) distress, affliction, straits, adversity, துன்பம்.).

உற்றவை -
ஆராய்வான் - ஆராய்தல் - சோதித்தல்; சூழ்தல் தேடுதல் சுருதிசேர்த்தல்

செய்க - ceykai   v. n. act, action, deed, performance, தொழில்; 2. artificial productions, செயற்கை, (opp. to விளைவு & இயல்பு; natural produce); 3. moral deeds, கிரியை; 4. a course of good conduct; 5. expedient, contrivance, means; 6. (prov.) forest land newly broken up and cultivated; held by grant or permission from government.

வினை - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முழுப்பொருள்
ஒரு செயலை செய்வதற்கான வழிகளை ஆராய்வது வாரி என்று கூறுகிறார் திருவள்ளுவர். அதேபோல் வாரி என்ற சொல்லுக்கு விளைவு, செல்வம் என்றும் அர்த்தம். ஆதலால் விளைவுகளை ஆராய்வது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

இதற்கு இன்னொரு வகையிலும் பொருள் கொள்ளலாம் ஒரு செயலை செய்யும் பொழுது அதனுடைய விளைவை அறிய ஒரு வெள்ளோட்டமாக சிறிய ஒரு சோதனை செய்து பார்க்கலாம் (வணிக மேலாண்மையில் Pilot testing, A/B Testing என்று கூறுவர்)

பெருக்கி என்றால் ஒரு செயலின் விளைவுகளை பெருக்குதல் என்று பொருள்.

வளம் என்றால் பயன், மாட்சிமை, செல்வம் என்று பொருள். படுத்து என்றால் நிலைபெறச்செய்தல். செல்வத்தை நிலம்பெற செய்தல். செல்வம் நிலைபெறாது (குறிப்பு: நிலையாமை) என்றாலும் ஈன்ற செல்வத்தை விரையம் செய்யாமல் இயன்ற அளவு திறமையால் தக்கவைக்க முடியும்.

வந்த செல்வத்தினால் இருக்கும் உண்மையையும் அதில் உள்ள துன்பங்களையும் ஆராய்வது. உண்மை என்னவென்றால் செல்வம் நிலைபெறாத ஒன்று. ஆதலால் அதனை தக்க வைக்க அதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வழிகளை ஆராய்தல். வந்த செல்வம் விளைவு நமக்கு மமதையும் சோம்பலையும் செருக்கையும் கொடுக்கும். ஆதலால் அதையெல்லாம் ஆராய்ந்து அவற்றில் சிக்காமல் (சிக்கினால் தேங்கிவிடுவோம். செல்வம் வந்த வேகத்தில் சென்று விடும், (போக்கும் அதுவிளிந் தற்று)) செய்து கொண்டு இருக்கிற செயலை அல்லது வேறு பெரிய செயலை மேன்மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் 

ஆதலால் ஒரு செயலை பற்றி முழுமையாக ஆராய்ந்து, அதை செயல் படுத்த சிறந்த வழிகளை கண்டடைந்து, அச்செயலின் விளைவுகளை அறிந்து, (வெள்ளோட்டமாக சோதனை செய்து பார்த்து), செயலினை செய்யவேண்டும். அவ்வாறு செய்து நல்விளைவுகளை பலமடங்கு பெருக்கி வளம் செழிக்க செய்யவேண்டும். வெற்றியின் மமதையும் சோம்பலிலும் செருக்கிலும் சிக்காமல் அவ்வளம் நிலைபெறச் செய்யவேண்டும். அவ்விளைவினால் அல்லது அச்செல்வத்தினால் வரக்கூடிய ஆக்கப்பூர்வமான சாத்திக்கூறுகளையும் அதனால் வரக்கூடிய கேடுகளையும் அறிந்து கேடுகளை தவிர்த்து அச்செயலை செய்யவேண்டும். அவ்வாறு தெரிந்து வினையாட வேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை


“செயல் துன்பத்தை அளிக்கிறதென்றால் அதிலிருந்து இன்பமும் எழக்கூடும். செயலாற்றும் முறை மட்டுமே பிழையென்றிருக்கும்” என்று இளைய யாதவர் சொன்னார். 

பரிமேலழகர் உரை
வாரி பெருக்கி - பொருள்வரு வாயில்களை விரியச் செய்து, வளம் படுத்து - அப்பொருளால் செல்வங்களை வளர்த்து, உற்றவை ஆராய்வான் -அவ் வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவன், வினைசெய்க - அரசனுக்கு வினை செய்க.
(வாயில்களாவன: மேல் இறை மாட்சியுள் 'இயற்றலும் ' (குறள்,385) என்புழி உரைத்தனவும், உழவு,பசுக்காவல், வாணிகம் என்னும் வார்த்தையுமாம். செல்வங்களாவன. ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன. இடையூறுகளாவன: அரசன், வினை செய்வார், சுற்றத்தார்,பகைவர், கள்வர் என்று இவரான் வரும் நலிவுகள்.).

மணக்குடவர் உரை
பொருள் வருதற்கு இடமானவற்றை முன்பு நின்ற நிலையிற் பெருக்கி, அவ்விடங்களி லுண்டாகும் பயனை முன்பு நின்ற நிலையிலுண்டாக்கி, அவ்விடத்துற்ற மிகுதி குறைவுகளை ஆராயவல்லவன் வினை செய்வானாக. பொருள் வருதற்கிடமாவது நிலம் முதலான இடம்: அதனைப் பெருக்குதல்- பொருளும் இன்பமும் உண்டாகச் செய்தல்.

மு.வரதராசனார் உரை
பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக

English Meaning - As I taught a kid - Rajesh
Who should do a work?
A person who can analyze a thing deeply and widely and can skillfully execute can do a work. 
How should one do a work?
Analyze the following 1) Find out the ways in which we can do a work 2) Find out the ways in which we can scale a work or grow/expand our knowledge/wealth/skills/work etc 3) strength/solidify the existing knowledge/wealth/resources 4) find out the hurdles/challenges in completing the task or retaining the knowledge/wealth.
Skillfully execute the task based on the knowledge gain from 1,2,3,4

Finding out ways to do a work also means a) explore different ways of doing a work b) deciding the best/optimal way to do a work under given limitations by running a pilot study or by A/B testing or by SWOT analysis 

Finding out ways to scale a work - doing a work for a smaller number (say 10 or 100) is different from doing a work for a bigger number (say 1 lakh or 1 million or 1 billion). One has to identify the challenges in scaling a work

Strengthening a work/knowledge is important - Consistency is key for success. Sustaining in excellence is key for long term success

Finding out challenges/hurdles will help prevent huge loss, disasters etc

Questions that I ask to the kid
Who should do a work? and how should one do a work? 

No comments:

Post a Comment