முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும்

குறள் 492
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]

பொருள்
முரண் - பகை; போர்; வலிமை; பெருமை; மாறுபாடு; காண்க:முரண்டொ(தொ)டை; முருட்டுக்குணம்; கொடுமை; மாணிக்கக்குற்றங்களுள்ஒன்று.

சேர்ந்த - சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

மொய்ம்பன் - moympaṉ   n. மொய்ம்பு.Warrior; வீரன். வாளி . . . மொய்ம்ப ரகங்களைக்கிழித்து (கம்பரா. முதற்போ. 145).

மொய்ம்பு - moympu   n. prob. மொய்¹-.[K. muyvu.] 1. Strength, valour, prowess;வலிமை. முரண்சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் (குறள்,492). 2. Shoulder; தோள். பூந்தாது மொய்ம்பினவாக (கலித். 88.)

மொய்ம்பினவர்க்கும் - தன் வலிமையால் உலகை வெல்ல நினைப்பவர்கள்

அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

சேர்ந்து சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

பலவும் - ஒன்றுக்குமேற்பட்டவை

தரும் - தருதல் - trutl   v. noun. Giving, &c. See தா, v.,கொடை

முழுப்பொருள்
பகைவரை தன் வலிமையால் வெல்ல வேண்டும்  என்று நினைப்பவர்கள் அரசர்கள். அப்பொழுது போரில் இருதரப்பிலும் பல உயிர் சேதங்கள் ஆகக்கூடும். அப்போது அரசர் தன்பக்கம் பற்றிய உயிர் சேதங்களை பற்றி பெருவாரியாக கவலை பட மாட்டார். 

ஆனால் அந்த அரசர் தன் நாட்டை வளமாக ஆக்குவார். அதனால் பெருமையும் அடைவார். ஒரு பக்கம் வளம் சேர்த்தாலும். இன்னொரு பக்கம் அவர் பல உயிர்பலியிற்கு காரணமும் ஆகிறார். இது (வளம் சேர்த்தமையால் பெருமையும் போரினால் உயிர்பலியும் (அதனால் வெற்றியும் வாகையும்)) ஒரு முரண் ஆகும். அதனால் தான் முரண்சேர்ந்த மொய்ம்பினவர் என்கிறார் திருவள்ளுவர்

இத்தகைய அரசர்கள் பகைவரை வெல்லும் திறன் இருந்தாலும் தன்னுடைய நாட்டின் (உள் ) பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தன்னுடைய படையின் (அதனுள் உள்ளடங்கிய அனைத்தையும் உதாரணமாக ஒற்றர்கள், மதிவயூகிகள்) திறமையை உறுதி செய்யவேண்டும். அப்படி தனது திறனையும் தனது நாட்டின் பாதுக்காப்பையும் தனது படையையும் ஒருசேர வலிமையாய் வைத்துக்கொள்ளும் அரசருக்கு பல வெற்றிகள் பலனாய் கிட்டும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும், அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும்.
(மாறுபாடாவது: ஞாலம் பொது எனப் பொறா அரசர் மனத்தின் நிகழ்வதாகலானும், வலியுடைமை கூறிய அதனானும்,இது பகைமேற் சென்ற அரசர் மேற்றாயிற்று. உம்மை - சிறப்பு உம்மை. அரண் சேராது ஆம் ஆக்கமும் உண்மையின்,ஈண்டு ஆக்கம் விசேடிக்கப்பட்டது. 'ஆக்கம்' என்றது அதற்கு ஏதுவாய முற்றினை. அது கொடுக்கும் பயன்களாவன: பகைவரால் தமக்கு நலிவின்மையும், தாம் நிலைபெற்று நின்று அவரை நலிதலும் முதலாயின.).

மணக்குடவர் உரை
பகை கொள்ளும் வலியுடையவர்க்கும் அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம் பலபயனையுந் தரும். இது பகைவரிடம் அறிதலே யன்றித் தமக்கு அமைந்த இடமும் அறிய வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.

No comments:

Post a Comment