செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்

குறள் 411
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை
[பொருட்பால், அரசியல், கேள்வி]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்

செல்வம்  - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்(சுவர்க்கம்), ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

செல்வத்துள் - எல்லா செல்வங்களிலும்

செல்வம் - செல்வம் எனப்படும்

செவிச்செல்வம் - கேள்வியறிவாகிய ஐசுவரியம்

அச்செல்வம் - அந்த செல்வம்

செல்வத்துள் - செல்வங்களிலும்

எல்லாம் - எல்லாவற்றிலும்

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு

முழுப்பொருள்
முந்திய அதிகாரத்தில் கல்வியின் சிறப்பை திருவள்ளுவர் கூறியிருப்பார். ஆனால் முறையான கல்வியானது அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கிடைத்தும் விடாது ஏனெனில் நன்கு கற்று உணர்ந்து தெளிந்து பிறர்க்கு கற்பிக்கும் ஆற்றல் கொண்ட குருமார்களும் மிக குறைவே. அது மட்டும் அல்லாமல் ஒருவருக்கு கற்கும் வாய்ப்புகள் இடம், சூழல், பொருளாதார நெருக்கடிகளால் வாய்க்காமல் போகும். 

ஆனால் நமது சமுதாயத்தில் கல்வியினை பல வடிவங்களாக செதுக்கியுள்ளனர். அவற்றில் சில - கதை சொல்லி வடிவங்கள் - கதாகாட்சேபம், நாட்டாற்கலைகள் (உதாரணம்: கூத்து, வில்லுப்பாட்டு), நாட்டியம், வாய்ப்பாட்டு இசை. நவின காலத்தில் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், விவாதங்கள். இவை மிக எளிதாக அல்லது முயன்றால் எளிதாக அடையகூடியவையே. சொல்லப்போனால் நமது பாட்டியும் தாத்தாவும் நல்ல கதைசொல்லிகளாக இருப்பார்கள். அவர்கள் கூறும் பழமொழிகளுக்கு அவ்வளவு அர்த்தம் உண்டு.

படிக்காமல் செவி வழியே பெறப்படும் இந்த கல்வியானது கேள்விச்செல்வம் ஆகும். ஏடுகள் கூட (இயற்கை சீற்றங்கள், தீ, வெள்ளம், புயல் போன்ற) ஒரு பயங்கரத்தால் அழியக்கூடும். ஆனால் பல சந்ததினியரை கடந்து வந்த கதைகளானது அவ்வளவு எளிதாக அழியாது. (அழிவு நிலையில் இருந்த ஒரு மொழி வெகு சிலரின் உயிருடன் இருந்ததனால் சில ஆண்டுகளில் மீட்டெடுக்கப்பட்ட உண்மை வரலாறும் உண்டு). அத்தகைய கதைகள் மிகவும் செறிவான முக்கியமான கதைகளாகும். உதாரணமாக ஓவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான புத்தகங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சிலநூல்கள் மட்டுமே அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து நிலைத்து நிற்கும். நூறு ஆண்டுகள் கழித்து நூறு சிறந்த நூல்களில் ஒன்று இரண்டே எஞ்சும் என்று சொல்லலாம். இதிகாச தன்மை அளவின்றிபெற்ற மகாபாரதமும் இராமாயணம் போன்ற காப்பியங்கள் இன்றளவும் மக்கள் மனதிலும் புழக்கத்திலும் இருப்பதற்கு காரணம் அவை செவி வழியே பல தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டு உள்ளன. எழுத்தினூடாக வெகு சிலருக்கு மட்டுமே கடத்தப்பட்டு உள்ளன. பல இடங்கில் இவ்வெழுத்து செவ்செல்வத்திற்கு மூலமாக இருக்கும். அதலால் எழுத்தும் முக்கியம்.

அது மட்டும் இன்றி எழுத்து வடிவம் இலக்கணங்களுக்கு கட்டுப்பட்டவை. நவினுத்துவம் பின்நவினுத்துவம் என்று பல வடிவங்கள் வந்தாலும் அவை காலத்திற்கு ஏற்ப மாறுவதற்கு நேரம் ஆகும். விளங்கிக்கொள்ளவும் நேரமாகும். ஆதலால் தான் என்னவோ குறுந்தொகை, புறநானூறு போன்ற சங்கயிலக்கியங்களை கற்க ஆற்றலும் அறிவும் தேவை. ஆனால் வாய்வழியே கூறப்படும் கதைகள் இன்றைய காலத்திற்கேற்ப சில ஆண்டுகளில் தன் மொழியினை உருமாற்றிக்கொள்ளும். அதலால் அது மக்களால் எளிதாக உள்வாங்கிக்கொள்ள முடிகிறது.

ஆதலால் இத்தகைய செவிச்செல்வம் மிகவும் சிறந்த செல்வமாகும். அது மட்டும் இன்றி செவிச்செல்வத்திற்கு அடிப்படையான கட்டமைப்புகளை (பாட்டி தாத்தா கதை சொல்லுதல், நாட்டாற்கலைகள், பழமொழிகள்) போற்றி பாதுகாக்க வேண்டிய மிகவும் முக்கியத்துவமானது அவசியமானது.

இடைச்செருகல்:
செவிக்கு நாம் கொடுப்பது செல்வம் என்று நினைத்து நாம் செவிக்கு செல்வத்தை கொடுத்தால் நாம் எவ்வளவு மேன்மை அடைய முடியும் என்பதை உணரமுடியும். ஆதலால் நாம் கேட்கும் நிகழ்ச்சிகள், காணொளிகள், youtube காணொளிகள் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து கேட்போம். 

கேட்போர்க்கு ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ என்று கூறியதால் தான் பேசுவோர்/சொல்வோர்க்கு ‘குறள் 198 அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல் ’ என்று கூறியுள்ளார் திருவள்ளுவர். 

மேலும், மேடை என்பது ஏதோ ஒருவகையில் அறிவை (செல்வத்தை) கொடுக்கும் இடம் ஏனெனில் மற்றவர் செவிகளை நம்மிடம் ஒரு 30-60 நிமிடங்கள் கொடுக்கின்றனர். அதனை உணர்ந்து மேடையில் இருப்போர் பேசவேண்டும். மேடைகளை நகைச்சுவை மன்றம்போல், whatsapp பல்கலைகழக ஒலிபெருக்கிகள் போல் ஆக்கிவிட கூடாது. 

மேலும்: அஷோக் உரை
கற்றலின் கேட்டலே நன்று என்ற வழக்குமொழியொன்று உண்டு, மற்றெந்த கலாச்சாரத்திலும் இல்லாத கதைச்சொல்லிப் பாரம்பரியம் நமது நாட்டிலே உண்டு. பாரத நாடு முழுவதும், ஹரிகதை, இலக்கியச் சொற்பொழிவுகள் என்று வாழ்க்கை உண்மைகள் புராண, இதிகாச, சரித்திரக்கதைகள் வாயிலாக மக்களுக்குச் சொல்லிவந்திருப்பதாலே, அடிப்படை ஒழுக்க உணர்வினை நம் நாட்டுமக்களுக்குப் புகுத்திவந்திருக்கிறார்கள்.


அதனாலேயே கேட்டல் என்பது அறிவு சார்ந்த செய்திகளை, படித்து, புரிந்துகொள்வதைவிட மிகவும் எளிதாகச் சாதிக்கிறது. கண்கள் பதிவு செய்வதைவிட காதில் விழும் ஒலிவடிவங்கள் மூளையை மிகவும் எளிதாக அடைகின்றன. கலைகளிலே மிகவும் கடினமான, சொற்களில் எழுதி, சொல்லி விளக்கமுடியாத இசைக்கலைக்கூட ஒலிவடிவமாகவே அறியப்படுகிறது, கற்கப்படுகிறது, சுருதி என்று அழைக்கப்படும் வேதமானது, எழுதாக்கிளவி எனப்படும். ஆயிரக்கணக்கான வருடங்களாகச் செவிவழியான கேள்வி மரபிலேயே பல சந்ததியினர்களைத்தாண்டி, இன்னும் பாதுக்காக்கப்பட்டுவருவதும் கூட இதனால்தான்

இந்திய மரபினைப் பொறுத்தவரை கற்றலுக்கான இடத்தினை விடக் கேட்டலுக்கான இடம் முக்கியமானது.கற்றலைக் கொண்டு கேட்டலை நிலைநிறுத்தும் பணியையே மரபு முன்னர் பெரும்பாலும் செய்தது.கேட்டல் என்பது தன் தரப்பினைப் பற்றிய அனைத்தும் அறிந்த தகுதியுடைய சீடனிடம் கற்றறிந்த குரு உரைப்பது.கேட்பவனின் தகுதியும் சொல்பவரின் தகுதியும் சரியான பாதையினைத் திறந்து விடும். மாறாகக் கற்றல் என்பதோ அதைச் செய்ய முயலும் அனைவருக்குமான பொதுத்தளத்தினை உருவாக்கிக் கொடுப்பது.அதற்கான நெறிமுறைகளை மட்டுமே கொண்டது.கற்றலுக்குத் தேவையான தகுதிகள் கேட்டலுக்குத் தேவையான தகுதிகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை. அறிவு என்பதே கேட்டலின் வழியாகவே நிலைநிறுத்தப்பட்ட காலம் சென்ற நூற்றாண்டில்தான் மாறியது.அதுவரை கேட்டலின் வழியாக வந்தடைந்த அறிவினைக் கற்றலின் வழியாக பயில முயன்று இரண்டுக்கும் உரிய வேறுபாடுகளைக் கைக்கொள்ளாமல் சொற்பொருட்பேதத்தால் அதன் மாளாச் சுழலுக்குள் சிக்கிய நபர்கள் உண்டு.

பரிமேலழகர் உரை
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் - ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான்.
( செவியான் வரும் செல்வம் - கேள்வியால் எல்லாப் பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும், துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.) .

மணக்குடவர் உரை

ஒருவற்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வருஞ் செல்வம்: அச்செல்வம் பிறசெல்வங்க ளெல்லாவற்றினும் தலையாகலான்.

மு.வரதராசனார் உரை

செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை

செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.


Thirukkural - Management - Listening
A universal complaint against every one of us is, 'They don't listen.’ Leaving out 'self,’ every other person is 'they.’ Putting the blame on others or passing the buck to others is an easy task. Even if we listen, most of the time we listen to respond rather than to listen to understand. 

Kindly check whether you are an attentive, active, and empathic listener. “Too many people take listening skill for granted. They confuse hearing with listening.  What is the difference? Hearing is merely picking up sound vibrations. Listening is making sense out of what we hear. That is., listening requires paying attention, interpreting,  and remembering sound stimuli,” (Robbins,2001).

Valluvar highlighted the importance of listening in Kural 411.

he wealth of wealth is the ear.
Tat wealth out tops all else.

Among all the wealth, the greatest wealth is listening. Listening is a supreme wealth. What has 
convinced Valluvar to confirm that listening is the best wealth among all the other wealth? There 
are many benefits of effective listening. 

English Meaning - As I taught a kid - Rajesh
Among all wealth's that we gain, the knowledge we gain by listening to good things is the best wealth.  Remember, we can gain wealth by listening (to good things). So choose what you want to listen to. Avoid listening to craps, gossips, polarized news, hatred, politics etc

Questions that I ask to the kid
Which is the best wealth among all the wealth?

No comments:

Post a Comment