வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை

குறள் 362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வேண்டுங்கால் - ஒருவருக்கு வேண்டுமென்றால்

வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

பிறவாமை - துயர் தரும் பிறப்பு இல்லாது இருத்தல்

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

வேண்டாமை - வேண்டாது இருத்தல் [அவா அறுத்தலாகிய விருப்பற்றத் தன்மையினை]

வேண்ட - விழைந்தால் மட்டுமே

வரும் - வரும்/ வந்து சேரும்

முழுப்பொருள்
இவ்வதிகாரம் அவா அறுத்தலை பற்றிக் கூறுகிறது. ஆனால் இவ்வதிகாரம் உனக்கு அவா என்று ஒன்று இருந்தால் அது இதுவாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது.

ஆசை/அவா என்பது மனிதனை வஞ்சிக்கும். நமது இலக்கு (வீடுபேறு) நோக்கி நம்மை செல்லவிடாது. ஆதலால் உனக்கு அவா(ஆசை, விருப்பம், விழைவு) என்று இருக்க கூடாது.

கவலையற்ற உற்சாகமான வாழ்க்கையையே எல்லோரும் எதிர்ப்பார்ப்பாகள். ஆனால் அதுவே எல்லோருக்கும் பெரும் சுமையாக ஆகிவிட்டிருக்கிறது. 

ஆசை என்பது வேட்கை. அதற்கான விலை என்பது பூசல். வேட்கை என்பது போர். அனைத்துமே போர்தான். வேட்கை.. வேட்கை.. வேட்கை.. அனைத்து வேட்கைக்கும் மேலாக புணர்ச்சிக்கான வேட்கை. உணவிற்கான வேட்கை.. பலவகையான சிறந்த உணவு வகைகள். ஓராயிரம் வேட்கைகள். வாழ்கை வேட்கைகளால் பெருகியிருக்கிறது. 

ஆதலால் ஆசை என்று இருந்தால் அது பிறவாமை என்னும் நிலையாகவே இருக்க வேண்டும். பிறவாமை என்பது நிலையாமையில் இருந்து நமக்கு விடுதலை தந்து நம்மை இந்த பிறப்பு-இறப்பு என்னும் துன்பசுழற்ச்சியில் இருந்து விடுவிக்கும். பிறப்பு இறப்பு என்பது துயர் தருவது. ஆதலால் அது கொடியது ஆகும். பிறவாமை என்பது மீண்டும் பிறப்பு இறப்பு அல்லாதது. மேலும். துன்பத்திற்கான அடிப்படைக் காரணம் இறப்பு அல்ல; பிறப்பே ஆகும். ஏனெனில் வாழ்க்கையெனும் கொடுமையானதொரு பயணத்தின் இறுதியாக நிகழும் மரணம் என்பது அனைத்தையும் மறக்கடிக்கும் ஒரு பெரும் விடுதலையாக இருக்குமல்லவா?

ஆனால் பிறவாமை என்னும் ஆசை எப்போது சாத்தியம் என்றால் மற்ற ஆசைகள் ஏதும் இல்லாது இருக்க வேண்டும். அதாவது மற்ற ஆசைகள் அற்று (இல்லாமல்) இருக்கும் பொழுது தான் பிறவாமை என்னும் நிலை உண்டாகும்.

நமக்கு ஆசைகள் இல்லை என்றால் துன்பங்கள் இல்லை. நமக்கு வருவன எல்லாம் இன்பமாகவே தோன்றும்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று திருக்குறளே கூறுகிறது. அது ஆசைக்கும் பொருந்தும். ஆசை என்று பட்டால் பிறவாமையை வேண்டு சிறுமை எதனையும் வேண்டாதே.

சுந்தரர் தேவாரத்தில்,”கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன்” என்றும், “எங்கோனே உனைவேண்டிக் கொள்வேன் பிறவாமையே” என்பார், பிறவாமையை விழைந்து.
சைவ சிந்தாந்த நூல்களில் உள்ள மெய்க்கண்ட சாத்திரங்களில், உய்யக்கொண்டார் எழுதிய  திருக்களிற்றுப்படியார் திருக்குறளை அடிப்படையாக வைத்தே நிறையப் பாடல்கள் எழுதியுள்ளது.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின்அஃ தொன்றுமே வேண்டுவது – வேண்டினது
வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால். (திருக்களிற்றுப்.40)

இப்பாடலின் பொருள்: வேண்டுமிடத்துப் பிறவாமையையே வேண்டவேணுமென்று திருவள்ளுவர் சொன்னபடியினாலே, வேண்டுமானால் அந்தப் பிறவாமையொன்றுமே வேண்டுவது; விரும்பாமையை விரும்ப விரும்பினது வருமென்றும் அவர் சொன்னபடியினாலே, நம்மை விரும்பின கர்த்தாவினிடத்திலே விரும்பாமையை விரும்பிக் கேட்பாயாக. இதனுள், அவாவறுத்தலே பிறவாமைக்குக் காரணமென்பது கண்டு கொள்க

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன்” (சுந்தரர்.கச்சித்திருமேற்றளி 2)

“எங்கோனே உனைவேண்டிக் கொள்வேன் பிறவாமையே” (சுந்தரர்.அவிநாசி 3)

“இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும்.......என்றார்” (பெரிய.காரைக்கால்.60)

நயம்பட உரைத்தலின் அழகை குறளில் கண்டபடியே செல்லலாம்.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்
‘வேண்டும் என்றால் பிறவா வரம் வேண்டும். பிறவாமையோ எதையும் வேண்டாமென்றில் வந்து சேரக்கூடியது’. இத்தகைய எழில்மிக்க கூற்றுகளை கவித்துவத்தின் ஆரம்பப் படிநிலை என்று சொல்லலாம். கவித்துவச்சாயல் இல்லாதவையும் நேரடிப்பொருளின்மூலம் முற்றாக கூறி நிறுத்துபவையுமான குறள்கள் மிகமிகச்சிலவே.

பரிமேலழகர் உரை
வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் - பிறப்புத் துன்பம் ஆதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமையை வேண்டும், அது வேண்டாமை வேண்ட வரும் - அப் பிறவாமைதான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானே உண்டாம். (அநாதியாகத் தான் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்கு ஆசை இன்பத்தின் கண்ணேயாகலின், பிறவாமையை வேண்டும் என்றும் ஈண்டைச் சிற்றின்பம் கருதி ஒருபொருளை அவாவின் அது பிறப்பீனும் வித்தாய்ப் பின்னும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின், அது வேணடாமை வேண்ட வரும் என்றும் கூறினார். பிறவாமையின் சிறப்புக் கூறி, பின் அதுவரும்வழி கூறத்தொடங்குகின்றமையின் 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது.).

மணக்குடவர் உரை
வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும். இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Generally we say that do not have desires because most desires are not met and pain comes from longing for the unfulfilled desires. 
However, Thiruvalluvar says that if at all you want to have a desire, have a desire of no re-birth or no birth of desires. When you desire for no-desire, all other things i.e., happiness, peace, greatness etc will automatically (unsolicited) come to you (even if you didn't desire that happiness). Normally it is said that we are in the constant cycle of birth-death-birth cycle because we have unfulfilled desires. It is impossible for all desires to be fulfilled. So, for one to not have re-birth, one should not have desires as they are root cause of pain. Also, when one  doesn't have desires, one won't have distractions which helps in focusing on work and doing great things thereby achieve greatness.

Questions that I ask to the kid
1. What desire should one have?
2. Why should one desire for no desire?
3. What do you gain by not having desire?
4. What are the disadvantages of desires?
5. Why re-birth happens? or why we are in cycle of birth-death-birth?
6. How having no desires prevents re-birth?

No comments:

Post a Comment