வலியில் நிலைமையான் வல்லுருவம்

குறள் 273
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் 
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
[அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வலி - வன்மை; காண்க:வலாற்காரம்; நறுவிலி; அகங்காரம்; வல்லெழுத்து; தொகைநிலைத்தொடர்மிக்குவருஞ்செய்யுட்குணம்; பற்றுக்கோடு; பற்றிரும்பு; தொல்லை; நோவு; ஒலி; சூள்; வஞ்சகம்; இழுக்கை; இசிவுநோய்வகை; வலிமைமிக்கவன்; கோடு; குரங்கு.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

இல் - il   n. இன்மை 1. Non-existence;இன்மை. (நாலடி. 52.) 2. Death; சாவு (சூடா.)part. (Gram.) A negative sign; ஒர் எதிர்மறையிடைநிலை செய்திலேன்.

நிலைமை - இயல்பு; வாழ்க்கைநிலை; நிலை; நிலவரம்திண்மை; உறுதி; உண்மை; புகழ்; வீடுபேறு; நிலவுடைமை

யான் - தன்மையொருமைப்பெயர்; variyāṉ   s. the 18th of the astrological yogas; 2. an ascetic, வரிடன்.

வல் - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு.

உருவம் - வடிவம்; உடல் அழகு நிறம் வேடம் சிலை மந்திரவுரு; கூறு தெய்வத்திருமேனி.

பெற்றம் - peṟṟam   n. பெற்று. 1. Greatness; பெருமை. பெற்றமாளிகை (திவ். பெரியதி. 10,1, 10). 2. Wind, air; காற்று. பெற்றம் பெற்றவன்(பாரத. வாரணா. 11). 3. Bull or cow; மாடு.(தொல். பொ. 594.) 4. Buffalo; எருமை. (தொல்.சொல். 400, உரை.) 5. Taurus of the zodiac;இடபராசி. (W.)

புலியின் - புலி - ஒருவிலங்குவகை; ஒருமுனிவன்; வேங்கைமரம்; சிங்கம்; சிம்மராசி'நால்வகைச்சாந்தினுள்ஒன்று; மயிர்ச்சாந்து; உண்ணாக்கு; சூதுகருவியுள்ஒன்று.

தோல் - சருமம்; உடம்பின்; மேலுள்ளதோல்'புறணி; விதையின்மேற்றோல்; கேடகம்; துருத்தி; மெல்லென்றசொல்லால்விழுமியபொருள்பயப்பச்செய்யும்நூல்; புகழ்; அழகு; சொல்; யானை; தோல்வி; நற்பேறின்மை; உடம்பு; பக்கரை; மூங்கில்

போர்த்து - போர்த்தல் - தரித்தல்; மூடுதல்; சூழ்தல்; மறைத்தல்

மேய்ந்து - மேய்தல் - விலங்குமுதலியனஉணவுகொள்ளுதல்; பருகுதல்; கெடுத்தல்; மேற்போதல்; திரிதல்; காமுகனாய்த்திரிதல்; கவர்ந்துநுகர்தல்; கூரைமுதலியனபோடுதல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

முழுப்பொருள்
தன்னுடைய மனதில் (அவனுடைய கொள்கையில்) நிலையாக இல்லாதவன், அவன் மனதில் எடுத்துக்கொண்ட தவத்திற்கு (ஒரு பொருளை அல்லது ஒரு எண்ணத்தை அல்லது ஒரு செய்கையை அல்லது ஒரு பழக்கத்தை துறக்கவேண்டும் என்று எண்ணி - அதாவது ஒழுக்கமாய் வாழவேண்டும் என்றெண்ணி) தேவையான மனத்திட்பமும் மனதை அடக்க வேண்டிய திறன் இல்லாதவன் (திறனை கற்காதவன் / பழகாதவன்) வாழ்வில் வீடுபேறு (பெருமை, வலிமை) அடையவேண்டி ஆசைப்படுதல் பசு புலித் தோலினை போர்த்திக்கொண்டு தன்னை புலி என்று ஏமாற்றிக்கொள்வது போன்றதாகும்.

பசு புலியின் தோலினை போட்டுக்கொள்வதால் புலியின் வலிமை பசுவிற்கு வந்து விடாது. அதேப்போல், புலி வேடத்தில் போய் புல்லை மேய்ந்தால் நமக்கு தான் அசிங்கம் ஏனெனில் புலி புல்லை தின்னாது. புலி வேடத்தில் போய் நாம் தின்னால் இது புலி அல்ல பசு என்று எளிதாக நம்மை சுற்றி உள்ளவர்கள் கண்டுபிடித்துவிடுவர். நம்மை பார்த்து சிரிப்பர்.

ஆதலால் வீடுபேறு வேண்டுவோர் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். தீயொழுக்கத்தை கடைப்பிடிப்பது (புலி தோலை போர்த்திக்கொண்டு புல்லை மேய்வதுப் போல) வலிமை/பயன் தராது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வலி இல் நிலைமையான் வல் உருவம்- மனத்தைத் தன் வழிப்படுத்தும் வலி இல்லாத இயல்பினை உடையான் வலியுடையார் வேடத்தைக் கொண்டு தான் அதன்வழிப்படுதல்; பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று - பசு 'காவலர் கடியாமல்' புலியின் தோலைப் போர்த்துப் பைங்கூழை மேய்ந்தாற் போலும். (இல்பொருள் உவமை. 'வலிஇல் நிலைமையான்' என்ற அடையானும், மேய்ந்தற்று என்னும் தொழில் உவமையானும் வல் உருவத்தோடு மனவழிப்படுதல் என்பது பெற்றாம். காவலர் கடியாமை 'புலி புல் தின்னாது' என்பதனாலும் அச்சத்தானும் ஆம். ஆகவே, வல்உருவங் கோடற்குப் பயன் அன்ன காரணங்களான் உலகத்தார் அயிராமை ஆயிற்று. இவ்வாறு தனக்குரிய இல்லாளையும் துறந்து வலியும் இன்றிப் பிறர் அயிராத வல்உருவமுங் கொண்டு நின்றவன் மனவழிப்படுதலாவது, தன் மனம் ஓடிய வழியே ஓடிமறைந்து பிறர்க்கு உரிய மகளிரை விழைதலாம். அவ்வாறாதல், பெற்றம் தனக்கு உரிய புல்லைவிட்டுப் பிறர்க்குரிய பைங்கூழை மேய்ந்தாற்போலும் என்ற உவமையான் அறிக.).

மணக்குடவர் உரை
வலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகிய தவவுருவங் கோடல், பெற்றமானது பிறர் பயப்படும்படி புலியினது தோலைப் போர்த்துப் பைங்கூழ் மேய்ந்த தன்மைத்து.

மு.வரதராசனார் உரை
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Without having the stability in heart in his/her principle, without stability in discipline, without determination/perseverance to give up his/her bad desires, wrong behavior etc. if he/she wishes to attain a goal/moksha then it is like a cow wearing tiger's skin and eating the grass. People who see will laugh at it.

Hence, in order to attain a goal/moksha, one needs to have stability in principle, discipline and perseverance to give up bad desires, anger, distractions etc. 

Questions that I ask to the kid
A cow wears a lion's skin and gazes grass. What is your reaction? Why?

No comments:

Post a Comment