மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற்

குறள் 51
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
[அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மனைத் - வீடு; வீடுகட்டுதற்குரியநிலம்; நிலஅளவுவகை; குடும்பம்; மனைவி; இல்வாழ்க்கை; சூதாடுபலகையின்அறை; நற்றாய்.

தக்க - takka   தகுந்த, adj. part. see under தகு.

தகு - taku   II. & IV. v. i. be fit, suitable, proper, decent or convenient, appertain, ஏல்.

மாண்பு - பெருமை; அழகு; நன்மை; மாட்சிமை.

உடையள் - உடையவள்

ஆகி - ஆகுதல் - ஆதல், நன்றாகக்கூடிவருதல்


ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

தற் - taṟ   a particle for தன், self (ன் is changed into ற் before க, ச, ப).

கொண்டான் - koṇṭāṉ   n. கொள்-. 1. Seeகொண்டவன். கொண்டானிற் றுன்னிய கேளிர் பிறரில்லை (நான்மணி. 56). 2. See கொண்டல்¹, 6. (W.)
கொண்டான்கொடுத்தான் koṇṭāṉ-ko-ṭuttāṉ, n. id. +. Persons who have enteredinto matrimonial alliance by the marriage oftheir sons and daughters; கொண்டுங்கொடுத்துஞ்சம்பந்தஞ் செய்தோர். Colloq.
மகளிர்விளையாட்டுவகை; கணவன்.

வளத்தக்காள் - வளத்துக்கும், ஈட்டும் பொருளுக்கும் ஏற்ற அளவுக்குத் தகுந்தார்போல், இல்லறத்தை நடத்துபவள்

வாழ்க்கைத்துணை - vāḻkkai-t-tuṇai   n. வாழ்க்கை + துணை¹. Wife; மனையாள். தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத்துணை (குறள், 51).

முழுப்பொருள்
இல்லறம் நடத்துவதற்குத் தேவையான நல்ல குணநலங்களையும், நற்செயல்களை ஆற்றும் பண்பினையும், கணவனின் வருவாய்க்கு ஏற்றவாறு குடும்ப செலவுகளை நிர்வகித்து குடும்பத்தை முன்னே கொண்டு செல்லும் திறனை உடைய ஒரு மாண்புடைய (பெருமை, அழகு, மாட்சிமை, நன்மை) பெண் என்பவள் திருமணம் செய்துகொள்வதற்கு ஏற்றவளாவாள். அப்படியான மனையறத்திற்குத் தக்க குணங்களை கொண்ட பெண்ணை வாழ்க்கைத்துணையாக கொள்ளுதலே வாழ்வு சிறக்க உதவும். 

1) நற்குணங்களெனப்படுவது -> துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. 

2) நற்செய்கைகளெனப்படுவது -> வாழ்க்கைக்கு வேண்டும் (மெய்ப்)பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில்(மடைப்பள்ளி/ சமையலறை) தொழில் வன்மையும்(ஆற்றலும்), ஒப்புரவு (உலகவொழுக்கம்) செய்தலும் முதலாயின. 

3) வருவாய்க்குத் தக்க வாழ்க்கையெனப்படுவது -> முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். 

இது பெண்களுக்காக எழுதப் பட்ட குறள், ஆனால் வரலாற்று ரீதியாகப் பார்த்தால் ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரைக் கூடப் பெண்கள் குடும்பத் தலைவி என்றே அழைக்கப்பட்டுள்ளனர். அன்று ஆண்கள் மட்டுமே வெளியுலகலில் வேலைக்கு சென்றனர். ஆனால் இன்றோ ஆண்களும் பெண்களும் எல்லாவேலைகளிலும் பணிப்புரிகின்றனர். இல்லறத்தில் இருக்கும் பெண்களும் வெளியுலக வாழ்க்கையில் பணிப்புரிகின்றனர். ஆதலால் இக்குறள் இன்று ஆண்களுக்கும் பொருந்தும். ஆண்களுக்கு இந்த நல்ல குணங்களும், நற்செயல்கள் செய்யும் ஆற்றலும், வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை நிர்வகிக்கும் திறனும் இருத்தல் வேண்டும்.

பி.கு: வாழ்க்கைத் துணைநலம் என்று மனைவியை மட்டும் கூறாமல், இல்லற வாழ்க்கைக்கு தேவையான துணையாக இருக்கக்கூடிய குணநலங்களாக இவ்வதிகாரத்தில் கூறப்பட்ட கருத்துக்களை ஆண்கள் (கணவன்) பெண்கள் (மனைவி) என்று இருபாலினரும் எடுத்துக்கொள்ளலாம் (எடுத்துக்கொள்ள வேண்டும்).

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”மனைமாட்சி” (குறள் 52)
“இல்லவள் மாண்பு” (குறள் 53)
“மாண்டஎன் மனைவி” (புறநா 191:3)

“வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம்
வெருவாமை வீழ்விருந் தோம்பி...
செய்வதே பெண்டிர் சிறப்பு” (சிறுபஞ்ச 42)

பரிமேலழகர் உரை
[அஃதாவது, அவ்வில்வாழ்க்கைக்குத் துணை ஆகிய இல்லாளது நன்மை. அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.)

மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளத்தக்காள் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்; வாழ்க்கைத் துணை- அதற்குத்துணை. (நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது: முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள் இல்வாழ்க்கைத் துணையாவள்.

மு.வரதராசனார் உரை
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.

சாலமன் பாப்பையா உரை
பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
வரவுக்கேற்பச் செலவு செய்பவளே நல்ல மனைவி.

English Meaning - As I taught a kid - Rajesh
Note: this Thirukkural actually refers the spouse as a wife. Husband responsibilities are detailed in children upbringing chapter and also in other various chapters
A spouse who have the below is the ideal life partner
a) virtues/traits/qualities required for family (i.e 1) (leading and) running a family, 2) doing charity works such as welcoming and showing hospitality(giving food) to sages and those in need, managing a family, 3) upbringing the children as good citizens (in terms of love, knowledge, scholarliness, beneficence/benevolence, compassion, honesty etc.),   and 
b) spends within the means (earnings of the life partner) 
c) leading the family (in terms of dharma/duty, work, knowledge, wealth, socio-economical status, respect, fame etc.) in the growth direction and growing the family.

Questions that I ask to the kid
Who is an ideal spouse?

No comments:

Post a Comment