கலங்காது கண்ட வினைக்கண்

குறள் 668
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

பொருள்
திட்பம் - உறுதி; வலிமை; மனவுறுதி; சொற்பொருள்களின்உறுதி; காலநுட்பம்
வினைத்திட்பம் - செயலின் கண் உறுதி

கலங்கு-தல் - kalaṅku-   5 v. intr. [T. kalagu,K. Tu. kalaṅku, M. kalaṅṅu.] 1. To be stirredup, agitated, ruffled, as water; நீர் முதலியனகுழம்புதல். கலங்க முந்நீர் கடைந்து (திவ். பெரியதி.6, 5, 1). 2. To be confused, confounded; மனங்குழம்புதல். கலங்காமற் காத்துய்க்கும் (நாலடி, 59). 3.To be abashed, embarrassed, perplexed; மயங்குதல் காமநலியக் கலங்கி (பு. வெ 11, பெண்பாற். 1).
கலங்காது - மனங்குழம்பாமல், மயங்காமல்
கண்ட - தான் கண்ட,  தான் எண்ணிய, தன் நினைத்தை
வினைக்கண் - செயலின் கண்; செயலை செய்யும் பொழுது
துளங்குதல் - அசைதல்; நிலைகலங்குதல்; தளர்தல்; வருந்துதல்; ஒலித்தல்; ஒளிசெய்தல்
துளங்காது - அசையாது, நிலைகலங்காது, தளராது
தூக்கம் - உறக்கம்; அயர்வு; சோம்பல்; வாட்டம்; முகச்சோர்வு; காற்றுமுதலியவற்றின்தணிவு; விலையிறக்கம்; ஆபரணத்தொங்கல்; காதணி; அலங்காரத்தொங்கல்; காண்க:தூக்கணங்குருவி; காலநீட்டிக்கை; நிறுப்பு; விலையேற்றம்; உயரம்.
கடிந்து - கடிதல் - ஓட்டுதல், நீக்குதல்; அழித்தல்; கண்டித்தல்; கோபித்தல்; விரைதல்; கொல்லுதல்; வெட்டுதல்; அடக்குதல்.
செயல் - செய்ய வேண்டும்

முழுப்பொருள்
நாம் ஒரு செயலை எடுக்கும் பொழுது அதனை பற்றிய ஒரு குறிக்கோள், அதற்கான கனவு(vision) இருக்கும். பின்பு அச்செயலை செய்ய தேவையான வற்றை அறிந்து தெளிந்து இருப்போம். அதுவே முதல் படி.

அச்செயலை எடுத்தப்பின்பு எந்த ஒரு நிலையிலும் மனம் தளறாமல், மனம் குழம்பாமல், எந்த ஒரு பழக்கத்திற்கும் பொருளுக்கும் மயங்காமல், கவனம் சிதராமல் எடுத்த செயலின் கண் செல்ல வேண்டும். முக்கியமாக சற்றும் தளராமல் அதில் இருந்து நீங்காமல் சோர்வில்லாமல் விரைவாக தாமதிக்காமல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் செயற்க்கூறிய பயனை அடைவோம். 

இக்குறளில் நாம் முக்கியமாக இரண்டு விஷயங்களை பார்க்க வேண்டும். (1) ஒன்று மயக்கம், கலக்கும், குழப்பம் அல்லாமல் ஒரு செயலை செய்ய வேண்டும் 2) சோர்வு இல்லாமல் ஒரு செயலை தாமதிக்காமல் விரைவாக செய்ய வேண்டும். சோர்வு என்பது கொடிய நோய் என்பதை அறிக.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தௌ¤ந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி நீட்டித்தலை யொழிந்து செய்க. (கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின்,தௌ¤ந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை - திட்பம் உடைமை.).

மணக்குடவர் உரை
கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட வினையிடத்துப் பின்னைத் துளக்கமின்றி அதனை நீட்டியாது செய்க. இது விரைந்து செய்யவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.

No comments:

Post a Comment