உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின்

குறள் 473
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்
[பொருட்பால், அரசியல், வலியறிதல்]

பொருள்
உடைத் - 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58).  உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.
தம் - தன்னுடைய
வலி - vali   n. வன்-மை. cf. bala. 1.Strength, power; வன்மை. வலியி னிலைமையான்(குறள், 273). 2. See வலாற்காரம். வலிசெயா தாணையை நினைந்து (திருவாலவா. 57, 5). 3. Arrogance;அகங்காரம். கேள்வி யனைத்தினும் வலியினும் மனத்தினு முணர்வினும் (பரிபா. 3, 49). 4. cf. balin.(Gram.) Hard consonant; வல்லெழுத்து. ஈற்றுமெய் வலிவரி னியல்பாம் (நன். 159). 5. (Rhet.)Vigour of style, achieved by introducing compounds in quick succession, a merit of poeticcomposition; தொகைநிலைத்தொடர் மிக்கு வருஞ்செய்யுட்குணம். (தண்டி. 24.) 6. Prop, support;பற்றுக்கோடு. தண்டு வலியாக நனி தாழ்ந்து (சீவக.2012). 7. Cramp-iron; pincers; பற்றிரும்பு. (பிங்.)8. Trouble, difficulty; கஷ்டம். அதைச் செய்; s. strength, power, வல்லமை; 2. pain, contraction of a limb, convulsions, நோய்; 3. the profits of one day in eight, given at the pearlfishery to the boat-owners; 4. large pincers or tongs, பற்றிரும்பு; 5. a figure of rhetoric, ஓரலங்காரம்; 6. cramp or metal-plate on the corners of cabinet work; 7. a monkey, குரங்கு; 8. a line, வரி.
அறியார் - அறியாதவர்கள்
ஊக்கம் - உள்ளக்கிளர்ச்சி, மனவெழுச்சி; உள்ளத்தின்மிகுதி; முயற்சி; வலிமை; உயர்ச்சி; மேற்கொண்டஎண்ணம்; உண்மை.
ஊக்கத்தின் - மன ஊக்கத்தினால், மன எழுச்சியினால்
ஊக்கி - தேவையில்லாமல் ஒரு செயலில் ஈடுபடுதல்
இடைக்கண் - அச்செயலின் இடையில்
முரிதல் - muri-   4 v. intr. [K. muri.] 1.To break off, snap off; ஒடிதல். (சூடா.) 2. Toperish; to be ruined; கெடுதல். இடைக்கண் முரிந்தார் பலர் (குறள், 473). 3. To be scattered; சிதறுதல். பஞ்சினம் புகைமுரிந் தெழுந்தென விண்ணத்தலமர (கல்லா. 7). 4. To go wrong; தவறுதல். முரியுங்காலைத் தெரிய மற்றதிற் றட்டினள் . . . எழுப்பி(பெருங். வத்தவ. 12, 99). 5. To be defeated;தோல்வியுறுதல். முற்றிய வமரர்சேனை முரிந்தன(விநாயகபு. 34, 15). 6. To separate, leave; நீங்குதல். (சீவக. 372.) 7. To lose one's position; நிலைகெடுதல். இடை முரிந்து வேந்தனும் வேந்து கெடும்(குறள், 899). 8. To be spoiled; குணங் கெடுதல்.ஒழுகுபால் கதிர்வெயிற் படமுரிந்து (திருச்செந்தூர்.பிள்ளைத். செங்கீரை. 1). 9. To bend; வளைதல்.முரிந்து கடைநெரிய வரிந்த சிலைப்புருவமும் (மணி.18, 161). 10. To lack in strength; to be gentle,as in gait; தளர்தல். முரிந்தநடை மடந்தையர்தமுழங்கொலியும் வழங்கொலியும் (திருவிசை. கருவூ. 5,10).
முரிந்தார் - ஓடிப் போணவர்கள், சிதறியவர்கள், தவறியவர்கள், தோல்வியுற்றவர்கள், நீங்கியவர்கள்,
பலர் - பல பேர்

முழுப்பொருள்
ஒரு செயலை மனிதன் செய்கிறான். ஆனால் ஒரு செயலை எல்லோராலும் செய்துவிட முடியாது. ஏனெனில் எல்லோருக்கும் அச்செயலை செய்யும் ஆற்றல் இருக்காது. உதாரணமாக உலகிலேயே மிக உயரமான மலையாக கருதப்படும் இமயமலையினை எல்லோராலும் ஏறி சிகரம் தொட முடியாது. அதற்கு தேவையான் பயிற்சி என்பது அத்தியாவசியம் ஆகும்.

ஆனால் உலகில் பலர் உணர்ச்சி வசப்பட்டு உள்ளக்கிளர்ச்சியினால் ஒரு வேகத்தில் ஊக்கம் கொண்டு ஒரு செயலை செய்வேன் என்று முற்பட்டு தொடங்குவர். இவர்கள் தங்கள் ஆற்றலை அறியாமல் அல்லது உணர்ச்சிகளால் மயக்கப்பட்டு இக்காரியங்களில் இறங்குவர். இது தவறாகும். ஏனெனில் இவர்கள் இக்காரியங்களில் செயல்பட்டு கொண்டு இருக்கும் பொழுது ஒரு பாதி வழியில் இவர்களின் குறைவான ஆற்றலால் அச்செயலை செய்ய இயலாது, அப்பொழுது மனம் தளர்ந்து (தன்னை இக்காரியத்தில் இறக்கிவிட்ட அதே மனகிளர்ச்சியினால்) இக்காரியத்தில் இருந்து விலகுவர். இது தோல்வியே ஆகும். இப்படி பாதியில் தோல்வியை கண்டவர்கள் பலர்.

ஊக்கம் என்பது நல்ல விஷயம் தான். ஆனால் அது மனகிளர்ச்சியினால் ஆனதாக இருக்க கூடாது. எண்ணித் துணிக கருமம் என்று திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார். ஆதலால் நம் ஆற்றல் என்னவென்று ஆராய வேண்டும். ஆற்றல் குறைவு எனில் அதனை வளர்க்க வேண்டும். [உதாரணமாக இமய மலை சிகரத்தை அடைந்த சில கண் பார்வை அற்றோர், உடல் ஊணம் உற்றோர் கூட இருக்கிறார்கள்]. அப்படி செய்தால் வெற்றி பெற முடியும். இல்லையேல் வெற்று மனகிளர்ச்சியால் ஒன்றும் செய்ய முடியாது.

எந்த ஒரு செயலையும் முடிவையும் மனக்கிளர்ச்சியினால் எடுக்க கூடாது. உதாரணமாக வாழ்வில் இளமை காலங்களில் நாம் பலவற்றை ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொள்ள முற்படுவோம். ஒருவர் தத்துவம் பயில்வது, நடனம், இசை,  புகைப்படம், பாடல், உலக சினிமா, சமையல், பயணங்கள் என்று பலவற்றில் முற்படலாம். ஆனால் அவர் எதில் ஒன்றிலும் சிறந்து விளங்குபவராக இருத்தல் மிக அரிதாகவே இருக்கும். எல்லாவற்றையும் கற்றுக்கொள்வது தவறில்லை. ஆனால் நமது தாவுதல்கள் உள்ளக்கிளர்ச்சியினால் ஒரு தொடர் வழக்கமாக இருக்கிறதா என்று மட்டும் கண்காணிக்க வேண்டும்.

மேலும், இக்குறள் கூறும் முக்கியாமன செய்தி, நாம் முடிவு எடுக்கும் பொழுது  ஒரு செயலை துவங்கும் பொழுதும் உள்ளக்கிளர்ச்சியினால் எடுக்கக் கூடாது.  No emotional decisions. சமீபத்தில் (2021 ஏப்ரல்) சித்ரா பாலகிருஷ்ணன் எழுதிய “மண்ணில் உப்பானவர்கள்” என்ற ஒரு புத்தகத்தை படித்தேன். அப்புத்தகம் இந்திய விடுதலையை நோக்கிய உப்பு சத்தியகிரஹம் போராட்டத்தைப் பற்றியது. அதில் மஹாத்மா காந்தி அவர்கள் தண்டி யாத்திரையை துவங்கும் முன்பு எந்த ஒரு புதிய செயலை செய்யும் முன் இரண்டு நாட்கள் மௌன விரதமும் உபவாசமும் இருப்பதுப்போல் இப்பொழுதும் இருக்கிறார் காந்தி. அவ்வாறே ஒரு போராட்டத்திற்கு மனதளவிலும் உடலளவிலும் தயாராகிறார் காந்தி. இதை ஆழ்ந்து யோசித்துப்பார்த்தால், இந்த மௌனமும் உபவாசமும் எப்பேர்பட்ட சுய கண்டடைதலையும், தெளிவையும், வலிமையையும்,  ஆத்மபலத்தையும் தருகின்றது. அதுமட்டும் இன்றி, நாம் செய்ய துவங்கும் செயலின் மீது எந்தவித உள்ளக்கிளர்ச்சியும் இல்லாமல் மனதில் சமநிலையோடும் தீர்க்கத்தோடும் தொடங்க ஒரு சந்தர்பத்தை கொடுக்கிறது. தியானம், உபவாசம், மௌன விரதம் போன்றவற்றை எல்லோரும் கடைப்பிடித்தால் மிக மிக பயனுள்ளதாய் அமையும். 

ஆற்றா ராகில் தம்மைக்கொண் டடங்கா ரோஎன் னாருயிர்க்குக்
கூற்றாய் நின்ற குலச்சனகி குவளை மலர்ந்த தாமரைக்குத்
தோற்றாய் அதனான் அகங்கரிந்தாய் மெலிந்தாய்வெதும்பத் தொடங்கினாய்
மாற்றார் செல்வம் கண்டழிந்தால் வெற்றி யாக வற்றாமோ” (கம்ப.மாரீசன் 115)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உடைத்தம் வலி அறியார் - கருத்தா ஆதலையுடைய தம் வலியின் அளவறியாதே, ஊக்கத்தின் ஊக்கி - மனஎழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி, இடைக்கண் முரிந்தார் பலர் - அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப் பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர்.
('உடைய' என்பது அவாய் நின்றமையின் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளும் சிறப்புடைய அறிவு உடையார் சிலராதலின், 'முரிந்தார் பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சி நின்றது.).

மணக்குடவர் உரை
தம்முடைய வலியறியாது மனமிகுதியாலே வினை செய்யத் தொடங்கி அது முடிவதன்முன்னே கெட்டார் பலர். இது வலியறியாதார் கெடுவரென்றது.

மு.வரதராசனார் உரை
தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.

சாலமன் பாப்பையா உரை
தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.

No comments:

Post a Comment