எள்ளாமை வேண்டுவான் என்பான்

குறள் 281
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் 
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.
எள்ளாமை - இகழ்ச்சி வேண்டாம்
வேண்டுவான் - வேண்டுபவன்
என்பான் - என்கிறவன்
எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு, எந்த நிலையானாலும்
ஒன்றும் - சிறிதும்
கள்ளாமை - களவுசெய்யாமை
களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி.
காக்க - காத்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான். 
தன் - தன்னுடைய 
நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
பிறர் உடைமையாயிருப்பது யாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாமை. கருதலும் செய்தலோடு ஒத்தலின் , 'கள்ளாமை' ஆகும்.

பிறரால் இகழப்படக்கூடாது என்று விரும்புகிறவன் எந்த ஒரு நிலையிலும் (அதனால் தான் ”எனைத்து” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது) பிறரின் பொருளை களவாட வேண்டும் என்ற எண்ணத்தை சிறிதளவுக்கூட மனதில் எழவிடாமல் காக்க வேண்டும்.

இங்கே திருவள்ளுவர் காக்க என்ற சொல்லை ஏன் சொல்கிறார் என்றால் இது ஒரு நாளைக்கு மட்டுமான ஒழுக்கம் அல்ல, வாழ்விற்கான் ஒழுக்கம்.

அதுமட்டும் இன்றி, ஏன் மனதில் கூட ஏழக்கூடாது என்கிறார் என்றால்? மனதில் உள்ளது கொஞ்சம் கொஞ்சமாய் நம் புலன்களில் கலந்து பின்பு ஒருநாள் நம்மை தவறான பாதையில் வழிநடத்தி களவு செய்ய தூண்டிடும் என்பதனால்.

ஏன் எனைத்து என்கிறார் என்றால்? நாம் நல்ல வசதி வாய்ப்புகளில் இருக்கும் பொழுது களவு எண்ணம் வராமல் பார்த்துக்கொள்வது அவ்வளவு சிரமம் அல்ல. ஆனால் ஒரு இக்கட்டான சூழ்நிலையில், வறுமையில் களவு செய்யவேண்டும் என்கிற எண்ணம் எழ அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் தான் எனைத்து என்ற சொல்லை எல்லா நிலைகளிலும் என்பதனை குறிக்க பயன்படுத்தப்பட்டது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, பிறர் உடைமையாயிருப்பது யாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாமை. கருதலும் செய்தலோடு ஒத்தலின் , 'கள்ளாமை' என்றார். இல்வாழ்வார்க்கு ஆயின், தமரோடு விளையாட்டு வகையால் அவரை வஞ்சித்துக் கோடற்கு இயைந்த பொருள்களை அங்ஙனம் கொள்ளினும் அமையும். துறந்தார்க்கு ஆயின், அதனைக் கருதிய வழியும் பெரியதோர் இழுக்காம்ஆகலின், இது துறவறமாயிற்று. புறத்துப் போகாது மடங்கி ஒரு தலைப்பட்டு உயிரையே நோக்கற்பாலதாய அவர் மனம் , அஃது ஒழிந்து, புறத்தே போந்து பல தலைப்பட்டு உடம்பின் பொருட்டுப் பொருளை நோக்குதலேயன்றி , அது தன்னையும் வஞ்சித்துக்கொள்ளக் கருதுதல் அவர்க்குப் பெரியதோர் இழுக்காதல் அறிக. இவ்வாறு 'வாய்மை' முதல் 'கொல்லாமை' ஈறாய நான்கு அதிகாரத்திற்கும் ஒக்கும். பொருள் பற்றி நிகழும் குற்றத்தை விலக்குகின்ற தாகலின், இது காமம் பற்றி நிகழ்வதாய கூடா ஒழுக்கத்தின்பின் வைக்கப்பட்டது.)

எள்ளாமை வேண்டுவான் என்பான் - வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான், எனைத்து ஒன்று கள்ளாமை தன் நெஞ்சு காக்க - யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக்கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க. ('எள்ளாது' என்னும் எதிர்மறை வினையெச்சம் எள்ளாமை எனத் திரிந்து நின்றது. வீட்டினை இகழ்தலாவது காட்சியே அளவையாவது என்றும்,நிலம், நீர், தீ, வளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றி, பிரிவால் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின் கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்த உயிர் பின் பிறவாது என்றும், இன்பமும் பொருளும் ஒருவனால் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயதம் முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து, அவற்றிற்கு ஏற்ப ஒழுகுதல். ஞானத்திற்கு ஏதுவாய மெய்ந்நூற்பொருளையேனும், ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக்கொள்ளின் அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்து ஒன்றும்' என்றார். 'நெஞ்சு கள்ளாமல் காக்க' எனவே, துறந்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுதல் கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம்.).

மணக்குடவர் உரை
பிறரா லிகழப்படாமையை வேண்டுவா னிவனென்று சொல்லப்படுமவன் யாதொரு பொருளையுங் களவிற் கொள்ளாமல் தன்னெஞ்சைக் காக்க. இது களவு ஆகாதென்றது.

மு.வரதராசனார் உரை
பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.

Thirukkural - Management - Ethical Behavior
When Kural 657 warns us against unethical practices, Kural 281 reminds us that just the thought of stealing things that belongs to others in itself is an unethical act. If you want to protect yourself against criticism, insults, suspicion, and complaints from others, you have to protect yourself from even the thought of stealing. Keep your thoughts of stealing and thieving in control because even just the thought of stealing is equivalent to the act of stealing.

If you would avoid contempt,
Guard your thought against theft.

English Meaning - As I taught a kid - Rajesh
If one wishes not to be ridiculed, let him protect his heart from thoughts of swindling (deception / fraudulent) all the time. Thiruvallur tell us not to let the swindling thoughts raise in our heart because thoughts slowly transform into action (i.e., jealous, stealing, anger etc). He says to protect our heart all the time because it is not an one time event, it is a lifetime discipline that needs to be followed despite ups and downs in life, rich or poor.

Questions that I ask to the kid
What should a person who doesn't want to be ridiculed do?

No comments:

Post a Comment