அஞ்சும் அறியான் அமைவிலன்

குறள் 863
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அஞ்சும் - அஞ்சு - அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சுவான்

அறியான் - பகைவனது வலிமை அறியாதவன்

அமைவு - amaivu   n. id. 1. Beingacceptable, suitable, fitting; ஏற்றதாகை; அமை-. Modesty;respectful behaviour; அடக்கம்.
அமைவு இலன்பிறரோடு பொருத்தம் இலன்

ஈகை - கொடை
ஈகுதல் - கொடுத்தல்; படைத்தல்
ஈகலான் - ஈகைத் தன்மையில்லாதவனாகவும் இருப்பவன்

தஞ்சம் - எளிது; தாழ்வு; எளிமை; பற்றுக்கோடு; அடைக்கலப்பொருள்; உறுதி; பெருமை.

எளியன் - வறியவன்; இலகுவாய்அடையப்படுபவன்; வலியில்லாதவன்; அறிவில்லாதவன்; குணத்தில்தாழ்ந்தவன்.

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

முழுப்பொருள்
அஞ்ச வேண்டாவதற்கு அஞ்சுபவன்  (உதாரணமாக வேலையை செய்வதற்கு, வேலையில் வரும் இடையூறுகளுக்கு, அழிவிற்கு, அபயாத்திற்கு அஞ்சுவது, என்று பல சொல்லலாம்) , அறியவேண்டுவற்றை அறிந்துக்கொள்ளாதவன் (பகைவரின் வலிமை / பலம், பகைவரின் பலவீனம், தன்னுடைய வலிமை,தன்னுடைய பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் (SWOT - Strength, Weakness, Opportunities, Threats)), பிறரோடு ஒழுங்கி (பொருந்தி, இணங்கி) வேலை செய்ய முடியாதவன், கொடை அளிக்கும் குணம் இல்லாதவன் பகைவரால் எளிதாக வீழ்த்தக்கூடியவன் ஆவான்.

”தொடர்ச்சியாக பாதுகாப்பு தேவைப்படுவது நம்மை உண்மையில் பலவீனப்படுத்துவது. பயம் இன்மையிலேயே பலம் இருக்கிறது. நம் உடலின் சதைப் பற்றிலும் எலும்புத் திரட்சியிலும் அல்ல” என்று காந்தியடிகள் கூறுகிறார்.

அதனால் தான் கீழ்காணும் குறளில் அஞ்சாமை, ஈகை, அறிவு ஆகியவற்றை குறையாது ஒரு அரசருக்கு இயல்பாய் இருத்தல் வேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்

சோர்வுடன் அதை கீழே உதிர்த்துவிட்டு அமர்ந்த பிரபாவனிடம் “காலைமுதல் இதை கண்டுபிடித்தேன். இந்நாள் வரை நானும் என் கணமும் அச்சமொன்றையே மெய்யென்று கொண்டிருந்தோம். எங்கள் எண்ணங்களும் செயல்களும் அச்சத்தாலேயே வடிவமைக்கப்பட்டிருந்தன. அச்சத்தை உதறுவதன் எல்லையில்லா விடுதலையை அடையும் பேறுபெற்ற என் குலத்தான் நான். அதில் திளைக்கிறேன். உன் கூரலகைக் கண்டுதான் உன் அருகே வந்தேன்” என்றது பூச்சி.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அஞ்சும் - ஒருவன் அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சாநிற்கும்; அறியான் - அறியவேண்டுமவற்றை அறியான்; அமைவு இலன் - பிறரோடு பொருத்தம் இலன்; ஈகலான் - இவற்றின் மேலும் யாவர் மாட்டும் இவறன்மாலையன்; பகைக்குத் தஞ்சம் எளியன் - இப்பெற்றியான் பகைவர்க்கு மிக எளியன். ('தஞ்சம'¢, 'எளியன்' ஒருபொருட்பன்மொழி. இந்நான்கு குற்றமும் உடையான் பகையின்றியும் அழியுமாகலின் 'தஞ்சம்', 'எளியன்' என்றார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அஞ்சும்-போருக்கு அஞ்சுபவனாகவும்; அறியான்-அறியவேண்டியவற்றை அறியாதவனாகவும்; ஈகலான்-ஈகைத் தன்மையில்லாதவனாகவும் இருப்பவன்; பகைக்குத் தஞ்சம் எளியன்-தன்பகைவர்க்கு மிக எளியவனாவான்.

இந்நான்கு நிலைமைகளுள் ஒன்றிருப்பினும் தோல்விக் கேதுவாயிருக்க, நாலும் ஒன்று சேரின் தோல்வியுறுதல் முழுவுறுதியும் மிக எளிதாய் நேர்வதுமாதலின் 'தஞ்சமெளியன்' என்றார். 'தஞ்சம்' எளிமைப் பொருளிடைச்சொல்.

"தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே."

(தொல்,751)

'தஞ்சமெளியன்' மீமிசைச்சொல். எளியனாதல் எளிதாய் வெல்லப்படுதல்.

மணக்குடவர் உரை
அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சுவான், பகைவனது வலிமை அறியான், மதியிலன், ஈயமாட்டான்: இப்பெற்றிப் பட்டவன் பகைவர்க்கு மிகவும் எளியன். இஃது இவை நான்கு முடையவன் தோற்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.

சாலமன் பாப்பையா உரை
பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.

English Meaning - As I taught a kid - Rajesh
Who can be easily defeated? 1) அஞ்சும்  - The one who has fear (or the one who lacks courage) (strength lies in fearlessness), 2) அறியான்  the one who doesn't have knowledge (or the one who doesn't know what to do) (knowledge of his SWOT (strength, weakness, opportunities, threats), his enemies SWOT, areas to prepare and areas to improve etc), 3) அமைவிலன்  - the one who could not team with others in order to chart out ideas, plans, execute plans, delegate work and delivers results and work to chart out ideas and execute plans, 4) ஈகலான் - The one who doesn't do charity/help to his neighboring countries and others can be easily defeated by his enemies/opponents. 

Questions that I ask to the kid
Who can easily be defeated by enemies?

No comments:

Post a Comment