அனிச்சப்பூக் கால்களையாள்

குறள் 1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை
[காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்]

பொருள்
அனிச்சப்பூக் - அனிச்சம் - மோந்தால்வாடும்பூவகை.

களைதல் - பிடுங்கியெறிதல்; நீக்குதல்; ஆடையணிகழற்றல்; அழித்தல்; குழைதல்; அரிசிகழுவுதல்; கூட்டிமுடித்தல்.

கால் - நாலில்ஒன்று; தமிழில் நாலிலொன்றைக் குறிக்கும்'வ' என்னும் பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

கால்களையாள்அடி காம்பை கலையாமல் 

பெய்-தல் - pey-   1 v. [M. peyyuga.] intr.& tr. To rain, fall, as dew or hail; மேனின்றுபொழிதல். பெய்யெனப் பெய்யு மழை (குறள், 55).--tr. 1. To pour down, pour into; வார்த்தல்.பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் (புறநா. 115). 2.To put, place, lay, put into, serve up, as foodin a dish; கலமுதலியவற்றில் இடுதல். உலைப்பெய்தடுவது போலுந் துயர் (நாலடி, 114). 3. To throwout, throw aside; எறிந்து போகடுதல். பார்த்துழிப்பெய்யிலென் (நாலடி, 26). 4. To insert, interpol-ate, as in a text; இடைச்செருகுதல். 5. To give,confer; கொடுத்தல். உயிர்க்கு . . . வீடுபே றாக்கம் பெய்தானை (தேவா. 975, 7). 6. To make;to settle, appoint; அமைத்தல். பிரான் பெய்த காவுகண்டீர் . . . மூவுலகே (திவ். திருவாய். 6, 3, 5). 7.To spread; பரப்புதல். தருமணல் தாழப் பெய்து(கலித். 114). 8. To discharge; புகவிடுதல். கருந்தலை யடுக்கலி னணைகள் . . . . பெருங்கடலிடைப்பெய்து (கம்பரா. கும்ப. 248). 9. To write, draw;எழுதுதல். பெய்கரும் பீர்க்கவும் வல்லன் (கலித்.143). 10. To put on, as harness; to

பெய்தாள் அணிந்தாள் 

நுகப்பிற்குநுகம் - எருதுகளின்கழுத்தில்பூட்டும்மரம், நுகத்தடி; காண்க:நுகத்தாணி; பாரம்; வலிமை; சோதிநாள்; மகநாள்; கதவின்கணையமரம்

நல்ல - நன்மையான; மிக்க; கடுமையான.

படாஅ - படா - paṭā   adj. U. barā. Large, great;பெரிய

பறை - தோற்கருவி; தப்பு; பறையடிக்குஞ்சாதி; வட்டம்; சொல்; விரும்பியபொருள்; ஒருமுகத்தலளவை; மரக்கால்; நூல்வகை; வரிக்கூத்துவகை; குகை; பறத்தல்; பறவைஇறகு; பறவை.

முன் குறிப்பு 
அனிச்சை அல்லது அனிச்சம் (Anagallis arvensis, Scarlet pimpernel) மிகவும் மென்மையான இதழ்களினை உடைய ஒரு பூக்களைக் கொண்ட ஒரு தாவர இனம். முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது இந்தப் பூ. இதன் இதழ்கள் மென் செம்மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களாகக் காணப்படும். இது சூரியன் இருக்கும் திசையில் இலைகளைத் திருப்பும்.



முழுப்பொருள்
அனிச்சம் பூவின் அடி காம்பு பகுதியை கலையாமல், இவளின் மெல்லிய இடையில் அணிகிறாளே. இனி அந்த இடுப்பிற்கு மங்கள ஒலி  இசைக்கப் போவதில்லை. அனிச்சம் பூவே மிகவும் மிருதுவானது. அதனினும் மிக மெல்லியது அவள் இடை என வள்ளுவர் அழகாக உரைக்கிறார்.

பரிமேலழகர் உரை
(பகற்குறிக்கண் பூ அணி கண்டு சொல்லியது.) அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள் - இவள் தன் மென்மை கருதாது அனிச்சப்பூவை முகிழ் களையாது சூடினாள்; நுசுப்பிற்கு நல்ல பறை படா - இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா. (அம் 'முகிழ்ப்பாரம் பொறாமையின் இடை முரியும். முரிந்தால், அதற்குச் செத்தார்க்கு உரிய நெய்தற்பறையே படுவது' என்பதாம். மக்கட்கு உரிய சாக்காடும் பறை படுதலும் இலக்கணக் குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.).

மணக்குடவர் உரை
அனிச்சப்பூவைக் காம்புகள் அறாது மயிரில் அளைந்தாள்: இனி இவளது நுசுப்பிற்கு நல்லவாக ஒலிக்கமாட்டா பறை. இஃது இடையினது நுண்மை கூறிற்று.

மு.வரதராசனார் உரை
அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

சாலமன் பாப்பையா உரை
என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.

அனிச்சம் பூ தமிழ் சினிமாவில்  
விக்ரம் நடித்த தாண்டவம் படத்தில் கூட அனிச்சம் பூவை குறிப்பிட்டு ஒரு அழகிய பாடல் ஒன்று உள்ளது..அதன் முதல் சில வரிகள் கீழே.

"அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி கெறங்க வைக்கும் பேரழகி
எங்கெங்கோ எங்கெங்கோ பறந்தே நான் போனேனே
சண்டாளி உன்கிட்ட சருகாகி நின்னேனே"

No comments:

Post a Comment