உடம்பாடு இலாதவர் வாழ்க்கை

குறள் 890
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் 
பாம்போடு உடனுறைந் தற்று.
[பொருட்பால், நட்பியல், உட்பகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

சொற்ப்பொருள்
உடம்பாடு - உடன்படு-தல் - uṭaṉ-paṭu-   v. intr. உடன்+ படு-. [T. oḍambaḍu, K. oḍambaḍu.] To agree, assent, consent, acquiesce, yield; இசைதல் (பிங்.)  

இலாதவர் - இல்லாதவர்

வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.

குடங்கர் - குடம்; கும்பராசி; குடிசை
குடம் - நீர்க்குடம்; கும்பராசி; குடக்கூத்து; குடதாடி; வண்டிக்குடம்; திரட்சி; பசு; நகரம்; பூசம்; குடநாடு; வெல்லக்கட்டி; சதுரக்கள்ளி.

உள் - உள்ளே

பாம்பு - ஊரும்உயிர்வகை; இராகுஅல்லதுகேது; நாணலையும்வைக்கோலையும்பரப்பிமண்ணைக்கொட்டிச்சுருட்டப்பட்டதிரணை; ஆயிலியநாள்; நீர்க்கரை; தாளக்கருவிவகை.
பாம்போடு  - பாம்புடன் 

உடன் - ஒக்க, ஒருசேர, அப்பொழுதே; மூன்றாம்வேற்றுமையின்சொல்லுருபு.

உறைந்தற்று - உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல்.

அற்று அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

பொருள்
உடம்பாடு -> உடன் பாடு -> மனப் பொருத்தம்.

இலாதவர் -> இல்லாதவர்.

வாழ்க்கை -> வாழும் வாழ்க்கையை குறிக்கிறது.

குடங்கருள் -> ஒரு குடிலினுள்; இது இடத்தின் சிறுமையை காண்பிக்கிறது.

பாம்போடு -> பாம்புடன்.

உடனுறைந் தற்று -> ஒவ்வொரு நொடியும் அச்சத்துடன் நடுங்கிக்கொண்டு உறைந்துபோய் செயலற்று வாழ நேரிடும்.

முழுப்பொருள்
மனப் பொருத்தம் இல்லாதவருடன் (இல்லாதவர்களுடன்) ஒற்று (ஒத்து) வாழக்கூடிய ஒருவரது வாழ்க்கை என்றென்பது ஒரு சிறிய குடிசைக்குள் பாம்புடன் ஒவ்வொரு நொடியும் மனதில் அச்சத்துடன் நடுங்கிக்கொண்டு உறைந்துபோய் செயலற்று வாழ நேரக்கூடிய வாழ்க்கையாகும். பாம்பு சற்று நகர்ந்தாலும் கடிக்கும். அதுபோல உட்பகைவர் நாம் சற்று சோர்ந்தாலும் நம்மை கொல்லுவர்.

ஏன் இங்கு செயலற்று இருக்கிறோம் என்றால் நாம் அவரை கடிவதை (திட்டிவதை) விட அமைதியாக இருப்பதே மேல் என்று எண்ணி மௌனமாக இருந்துவிடுவோம் என்றென்பதனால் கூறியிருக்கலாம். இதனை நாம் ஒரு பயிற்சியாகவே இறுதி வரை மேற்கொள்வோம். ஆதலால் இது மிகுந்த ஒரு வேதனையை அளிக்கும். ஆதலால் ”குறள் 301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்” என்பதை நினைவில் கொள்க

ஒப்பு
இதற்கு ஒப்புவாக “இழிவுடை மூப்பு உரகதத்தின் துவ்வாது (39).” என்று முதுமொழிக்காஞ்சியில் கூறப்பட்டுள்ளது. 

ஒப்புமை
1) ”நாணார் பரியார் நயனில செய்தொழுகும் 
பேணா அறிவிலா மாக்களைப் பேணி
ஒழுக்கி அவரோ டுடனுறை செய்தல்
புழுப்பெய்து புண்பொதியு மாறு” (பழமொழி, 142)

2) “பாம்போடு ஒருகூரையிலே பயின்றாற்போல்” (பெரிய திருமொழி 11.8:3)

3) “பாம்புறையும் புற்றன்னார் புல்லறிவினார்” (நான்மணி. 56)
4) “தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையான் நேர்செய் திருத்தல் - மலைமிசைக்
காம்பனுக்கு மென்தோளாய் அஃதாலவ் வோரறையுட்
பாம்போ டுடனுறையு மாறு” (பழமொழி 349)
5) “கவ்வர வதுவென இருத்திர் கற்பெனும்
அவ்வரம் பழித்துமை அகத்து ளேவைத்த
வெவ்வரம் பொருதவேல் அரசை வேரறுத்
திவ்வரங் கொண்டநீர் இனியென் கோடிரோ
வாழ்மனை புகுந்த தாண்டோர் மாசுணம் வரக்கண் டன்ன
கோளுறக் கொதித்து விம்மி யுழையரைக் கூவிச் சொன்னான்” (கம்ப - பள்ளியடை 75, மாரீசன் 164)

நன்றி: இலக்கிய ஒப்பாய்வு (சுட்டியைத் தட்டவும்)

பரிமேலழகர் உரை: 
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை-மனப் பொருத்தம் இல்லாதாரோடு கூட ஒருவன் வாழும் வாழ்க்கை; குடங்கருள் பாம்பொடு உடன் உறைந்தற்று - ஒரு குடிலுள்ளே பாம்போடு கூட உறைந்தாற் போலும். 

விளக்கம் : (’குடங்கம்’என்னும் வடசொல் திரிந்து நின்றது. இடச்சிறுமையானும் பயிற்சியானும் பாம்பாற் கோட்படல் ஒருதலையாம்; ஆகவே, அவ்வுவமையால் அவ்வுயிர்க்கு இறுதி வருதல் ஒருதலை என்பது பெற்றாம். [இதனான், கண்ணோடாதவரைக் கடிக என்பது கூறப்பட்டது].).

மணக்குடவர் உரை: 
மனத்தினால் பொருத்த மில்லாதாரோடு ஒத்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிலகத்தே பாம்போடு கூடி வாழ்ந்தாற் போலும். இது பாம்பு இடம் வந்தால் கடிக்கும்; அதுபோல உட்பகைவர் இடம் வந்தால் கொல்லுவரென்றது. 

சாலமன் பாப்பையா உரை
மனப்பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Living with a person and regularly fighting with them (i.e., infighting, being in a toxic relationship) within a home or family or organization or business (irrespective of whether living under same house or not) is like living in a frozen/unmovable state in front of a snake inside a cave/pot. We cannot do much work in that. There won't be peace and productivity as we have to live with caution and fear. Infighting and toxic relationships are unhealthy

Questions that I ask to the kid
How to describe living in a toxic relationship?

No comments:

Post a Comment