Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label அறன்வலியுறுத்தல். Show all posts
Showing posts with label அறன்வலியுறுத்தல். Show all posts

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

குறள் 40
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
[அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

செயற்பாலது - செய்யக்கூடிய செயல்கள் 

ஓரும் - ஆசை நிலை.
ஓர்தல் - ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல்.

அறனே - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு

உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல்
உயற்பாலது  - ஒழிக்கத் தக்கவை, விலக்கத் தக்கவை, கொய்தெறிய வேண்டியவை
ஓரும் - ஆசை நிலை.
ஓர்தல் - ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல்.

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்

முழுப்பொருள்

1) ஒருவன் செய்ய வேண்டியவை என்ன? 
செய்யத்தக்க செயல்களை ஆராய்ந்து செய்வதே அறம் ஏனெனில் அறத்தொடு பொருந்தி வருவதே இன்பம். 

2) ஒருவன் நீக்க வேண்டியவை என்ன? 
ஆனால் செய்யதகாதவை/ விலக்கத்தக்க செயல்கள் எல்லாம் பழியை தரும். பழி என்பது குற்றம். பழி என்பது ஊராரின் அலர். பழி என்பது பகை. இவையாவும் தீதே. ஆதலால் அவற்றை விலக்க வேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

இவை இரண்டுமே அறவழில் நிற்க நெறி. ஏனெனில் அறத்தையும் செய்து பழியையும் செய்தால் ஒரு பலனும் இல்லை. 

மேலும் கீழ்க்காணும் குறளையும் சேர்த்து படித்தால் பழி இல்லாமல் வாழ்வது எவ்வளவு முக்கியம் என்பது புரியும்

2021இல் தமிழகத்தில் தலைமை செயலர் வெளியிட்ட அறிக்கை அறத்தோடு செய்த செயல். ஏனெனில் அவர் எத்தகைய பழியையும் பெற விரும்பவில்லை.


மேலும்


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒருவற்குச் செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே. ( 'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.).

மணக்குடவர் உரை
ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே, தப்பும் பகுதியது பழியே. மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார்.

மு.வரதராசனார் உரை
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

English Meaning - As I taught a kid - Rajesh
1) What are the things one should do?
One should do Dharma. One should do their duties and responsibilities in the right way with integrity. One should do their work to fullest potential like a tapas expressing themselves completely.(And not do a work for the sake of doing it)
2) What are the things one should not do?
One should not do things that will bring them bad reputation, destruction etc. One should not avoid or procrastinate doing their duties that will bring destruction, bad reputation etc. One should not deviate from integrity. One should not do wrong things.

Questions that I ask to the kid
1) What are the things one should do ?
2) What are the things one should not do ?

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

குறள் 39
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல
[அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

அறத்தான் - அறவழி வாழ்வினால்

வருவதே வருதல் 

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி

எல்லாம் - முழுதும்

புறம்பு - puṟampu   n. புறம்¹. [K. hoṟagu.]1. Exterior, outside; வெளியிடம். பொங்கரில்வண்டு புறம்பலை சோலைகள் (பெரியபு. ஆனாய. 7). 2.That which is separate, detached, distinct or exclusive; தனியானது. (W.) 3. Other; மற்றை. (W.)4. Back of a person; முதுகு. தன்னைப் புறம்பழித்து நீவ (கலித். 51).

புறத்த - இன்பம் போலிருந்து துன்பத்தில் சேர்ப்பவை

புகழும்  - புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை.

இல - இல்லை 

முழுப்பொருள்
அறத்தின் வழி நிற்பதனாலும் அறம் செய்வதனாலும் வருவதே மெய்யான இன்பம். அவ்வின்பமே நிலைத்து நிற்கும். புகழை தரும். சான்றோர்கள் போற்றுவார்கள். 

அறத்திற்கு புறம்பான வழிகளில் (அதாவது தீய வழிகளில், வஞ்சகத்தால்) பெரும் பொருளோ இன்போ இன்பம் அல்ல. அவை நிலைத்து நிற்காது. துன்பத்தை தரும். ஆதலால் அவர்களுக்கு அது புகழும் தராது. சான்றோர்களும் மதிக்கமாட்டார்கள். 

அறத்தை / தருமத்தை /கடமைகளை செய்து வருவதே மெய்யான் (பேரின்பம்/)இன்பம். மற்றவற்றை செய்து வருவது இன்பம் கிடையாது. அது சிற்றின்பம்.

இக்குறளில் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் நாம் இன்னொன்றை அறிந்துக்கொள்ளலாம். நம் குடியின் பெருமையாலும் நம் குடும்பம் நமக்கு தரும் சலுகைகளால் வரும் இன்பம் எல்லாம் இன்பம் அல்ல. நாம் அறம் செய்து பெற்றால் தான் அது மெய்யான இன்பம். ஆதலால் ஒருவருடைய அறச்செயலே ஒருவருக்கு புகழை தரும்.

ஒருவர் இலஞ்சம் வாங்கி வசதியாக வாழலாம். ஆனால் நேர்மையாக வாழ்ந்தவரையே இவ்வுலகம் போற்றும்.

அறம் செய்து வருவது இன்பம். அறம் செய்யாமல் சிற்றின்பம் வரலாம் வர வாய்ப்புகள் அதிகம். ஆனால் அது நீடிக்காது. ஏனெனில், தன் நெஞ்சே தன்னைச் சுடும். மேலும் இவ்வுலகம் அறம் செய்யாது வந்த பொருளையும் புகழையும் போற்றாது. குறிப்பாக புறத்தே போற்றாது ஏசும்.

அதனால் தான் கீழ்க்காணுமாறு திருவள்ளுவர் பின்பு கூறியுள்ளார்

ஒப்புமை
”உருவமும் அழுகுநல் ஒளியுங் கீர்த்தியும்
செருஇடை வெல்வலத் திறலும் சிந்தைசெய்
பொருளவை வருதலும் போக மும்நல்ல
திருவுடை யறத்தது செய்கை என்றனன்” (மேருமந்தர.447)


மேலும்: அஷோக் உரை


தருமன் “அறத்தின்மேல் நான் கொண்டுள்ள நம்பிக்கையென்பது அது வெல்லும் என்பதனால் அல்ல. அளிக்கும் என்பதனால் அல்ல. அழைத்துச் செல்லும் என்பதனாலும் அல்ல. அது எனக்கு உவப்பானது, அது ஒன்றே இயல்பானது என்பதனால்தான்” என்றார். பீஷ்மர் விழிகள் ஈரம் கொள்ள, நெகிழ்ந்து தொண்டை அசைய, கைநீட்டி அவர் கைகளை பற்றிக்கொண்டார். “அவ்வண்ணமே இரு, மைந்தா! இம்மண்ணில் எதுவும் உன்னை துயர்கொள்ளச் செய்யாதிருக்கட்டும்” என்றார். அவரது கைகள் தருமனின் கைகளுடன் சேர்ந்து நடுங்கின. “தங்கள் வாழ்த்து என்றும் என்னுடன் இருக்கும்” என்றார் தருமன்.

 “நால்வகை மெய்ப்பொருள்களில் அறம் காலம்பொறுத்தது. பொருள் இடம்பொறுத்தது. வீடு அறியவொண்ணாதது. கண்முன் என இருப்பது இன்பம் ஒன்றே. இன்பமளிப்பதே அறம். அதற்கு உதவுவதே பொருள். அதன் விளைவே வீடு” என குரு சொன்னதையே தானும் உரைத்தாள்

அவன் எழுந்தமைந்து “ஆம், சொல். காமம் கலந்தால் எல்லாமே கலை என்றான் பாணன். அன்னை நல்லுரை கலைவடிவு கொள்வதெப்படி என்று பார்க்கிறேன்” என்றான். அவள் விழிகள் பதறாமல் அவனை நோக்கி “மைந்தா, காமம் மனிதனைப் பெருக்கும் இன்பமல்ல. ஒவ்வொரு கணமும் அவனை குறைக்கும் இன்பம். விளைநிலத்து விதை என அவனைப் பெருக்குவது அறம் ஒன்றே. காமத்தையும் செல்வத்தையும் அறியாது அறம் நோக்கி சென்றதன் தோல்வியை முன்பு நீ அறிந்தாய். நன்று! இப்போது காமத்தைத் தொடர்வதன் எல்லையை அறிந்துவிட்டாய். செல்வத்தையும் அறிந்துளாய். கடந்து சென்று அறத்தை அறி. இது தெய்வங்கள் உனக்களித்திருக்கும் நல்வாய்ப்பென்று உணர். இல்லையேல் பேரழிவை நீ சந்திப்பாய்” என்றாள்.
.....
அறம் இறப்பதில்லை. தன் சிதையிலிருந்தும் முளைத்தெழும் ஆற்றல் கொண்டது அது” என்று ஒரு புலவர் தன் இரு கைகளையும் விரித்து கூவினார். 

எழுத்தாளர் ஜெயமோகனின் ”ஏழரைப்பொன்” என்ற கட்டுரையில் சதனாந்தன் என்ற ஒருவரிடன் கொண்ட உரையாடலில் இருந்து ஒரு பகுதி.

அவர் அருகே வந்து அங்கிருந்த சிறிய முக்காலியில் அமர்ந்தார். “எந்த ஊர்?” என்று என்னைக் கேட்டார். நான் “நாகர்கோவில்” என்றேன். “ எனக்குத் திருவனந்தபுரம் பக்கம் காட்டாக்கடை” என்றார். தன் பெயர் சதானந்தன் என்றார். சிரித்தபடி ”சதா ஆனந்தமாக இருக்கவேண்டும் ஆனால் சிறுவயதில் அப்படி இருக்கவில்லை” என்றார்

தந்தை சிறுவயதிலேயே இறந்து போய்விட சித்தியின் வளர்ப்பில் பலவகையான கொடுமைகளைச் சந்தித்து இளமைப்பருவத்தைக் கழித்ததையும், படிக்க ஏங்கி அதற்கான வாய்ப்பு இல்லாமல் துன்புற்றதையும், ஒன்பது வயதில் வீட்டை விட்டு ஓடிவந்து ஏற்றுமானூரிலேயே ஒரு உணவு விடுதியில் வேலைக்குச் சேர்ந்ததையும், ஒவ்வொரு நாளும் அடியும் வசைகளும் பெற்று மூன்று வேளை உணவை மட்டுமே ஊதியமாக பெற்றுக் கொண்டு அங்கே பணியாற்றியதையும் பற்றி சதானந்தன் சொன்னார்.

ஆனால் நான் மனந்தளரவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆகவே ஏற்றுமானூரப்பன் எனக்கு உதவுவார் என்று நினைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு சிறிய டீக்கடையை ஆரம்பித்தேன். அது வளர்ந்தது. இந்தக் கட்டிடத்தை வாங்கி விடுதியை ஆரம்பித்தேன். திருமணம் செய்து கொண்டேன். நான்கு பிள்ளைகள் நான்குபேருமே எர்ணாகுளத்திலும் திருவனந்தபுரத்திலும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.”

எனக்கு ஒரு குறையும் இல்லை” என சதானந்தன் தொடர்ந்தார் “மனைவி மகன்களுடன் இருக்கிறாள். இந்த விடுதி என் பொறுப்பில் இருக்கிறது. இதை விற்றுவிட்டு வரும்படி என்னைச் சொல்கிறார்கள். ஆனால் ஏற்றுமானூரப்பனின் பிரசாதம் இது. நான் உயிரோடிருக்கும் வரை இங்குதான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். அதை அவர்களும் புரிந்து கொண்டார்கள். ஆகவே தான் இங்கிருக்கிறேன். காலையிலும் மாலையிலும் ஏழரப்பொன் ஆனைமேல் ஏறியவனை வணங்குகிறேன். மனம்நிறைவாக இருக்கிறது” என்றார்.

எழுத்தாளர் ஜெயமோகனின் "மலையரசி" என்ற ஒரு சிறுகதையில் (முன்நாள்) ராணி பார்வதி பாய்-க்கும் ராஜா ராமா வர்மா விற்கும் நடக்கும் உரையாடல் அறனை வலியுறுத்தும். செயலே மகிழ்ச்சியை அளிக்கும் என்று கூறும். (முழு கதையையும் இச்சுட்டியில் தட்டி வாசிக்கவும். மிக நல்ல ஒரு முக்கியமான சிறுகதை - புனைவு கலந்த ஒரு வரலாறு)

மு.கு: சிறுகதையின் மையப் பகுதியை இங்கு வெட்டி ஒட்டி உள்ளேன். குறள் சொல்ல வருவதை சில வரிகளில் bold செய்து காட்டியுள்ளேன். ஆயினும் முழு கதையையும் சுட்டியில் தட்டி வாசிக்க பரிந்துரைப்பேன்.

பார்வதி பாய் தோலுறையிட்ட சிறிய டச்சு நாற்காலியில் அமர்ந்தாள். “ராமா உன் உடல்நிலை மோசமாகியிருக்கிறது. நான் இவ்வளவு எதிர்பார்க்கவில்லை” என்றாள்.

“நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என்றார் ராமவர்மா.

“நான் நீ வழக்கம்போல சங்கீதத்தில் மூழ்கி இருக்கிறாய் என்று நினைத்தேன். உடல்நிலை மோசமாக இருக்கிறது என்றார்கள். உன் உடல்நிலை எப்போதுமே மோசமாகத்தான் இருந்தது என்று நினைத்துக்கொண்டேன்” என்றாள் பார்வதி பாய். “நான் உன்னை வந்து பார்ப்பதே உனக்குப் பிடிக்கவில்லை. சென்றமுறை வந்தபோது மிகவும் கொந்தளித்துவிட்டாய். ஆகவே நான் வராமலிருந்தேன்…”

ராமவர்மா கட்டில்மேல் கால்களை தூக்கி வைத்துக்கொண்டார்.

“மிகமிக மெலிந்துவிட்டாய். உன் கைகளும் கால்களும் சுள்ளிபோலிருக்கின்றன” என்று பார்வதி பாய் சொன்னாள். “நான் உன்னை அப்படியே விட்டிருக்கக்கூடாது…”

“நீங்கள் கவலைப்படவேண்டாம் இளையம்மை.”

“நான் கவலைப்படாமல் யார் கவலைப்படுவார்கள்? நான் என் அக்கச்சிக்கு கொடுத்த வாக்கு… அக்கச்சி என்னை மன்னிக்கமாட்டார்”

“அக்கச்சி அக்கச்சி… வேறு பேச்சே இல்லையா? உங்கள் வாழ்க்கையே உங்கள் அக்கச்சிக்கு கொடுத்த வாக்குறுதி மட்டும்தானா?”

நிதானமாக “ஆம், அந்த வாக்குறுதி மட்டும்தான்” என்று பார்வதி பாய் சொன்னாள். “ஆகவேதான் எனக்கு குழந்தைகள் வேண்டாம் என்று நினைத்தேன். என் ரத்தத்தில் இருந்து அவர்கள் பிறந்தால் அதிகார ஆசை கொண்டிருப்பார்கள் என்று சந்தேகப்பட்டேன். வைத்தியர்களிடம் கேட்டு குழந்தையில்லாமல் ஆக்கிக்கொண்டேன். ராகவ வர்மா கோயில்தம்புரானுக்கும் இது தெரியும். திசைதிரும்பாத அம்புதான் ஆற்றல் கொண்டது, அதுவே இலக்கடையும் என்று என் ஆசிரியர்கள் எனக்குச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.”

“வெறும் இலக்கு, அவ்வளவுதானா வாழ்க்கை?”

“ராமா, மனித வாழ்க்கை என்றால் என்னவோ பெரிதாக நினைக்கிறாய். அப்படியெல்லாம் இல்லை. உறுதியாகப் பற்றிக்கொள்ள ஒரு விஷயம்போதும், அதைக்கொண்டு கடந்துசெல்ல வேண்டிய ஒன்றுதான் அது…. அதுகூட இல்லாதவர்கள்தான் துரதிருஷ்டசாலிகள்… என் அக்கச்சி எனக்கு ஒரு இலட்சியத்தை தந்து என் வாழ்க்கையை அர்த்தப்படுத்தினாள்.”

“அவ்வளவுதான் வாழ்க்கை என்றால் அதைப்போல அபத்தம் வேறொன்றுமில்லை. அதை ஏன் வாழ்ந்து தொலைக்கவேண்டும்?” என்று தலைகுனிந்து ராமவர்மா முணுமுணுத்தார்.

“சரி, வாழ்க்கை என்றால் என்ன? நீ என்னதான் எதிர்பார்க்கிறாய்? நீ என்ன திட்டம் வைத்திருக்கிறாய்?”

“தெரியவில்லை இளையம்மை. ஆனால் நான் வாழ்க்கை பற்றி கனவுகண்டுகொண்டே இருக்கிறேன். சிலசமயம் காலத்தால் அழியாத கீர்த்தனைகளை செய்யவேண்டும் என நினைக்கிறேன். சிலசமயம் ஒன்றுமே செய்யாமல் அமர்ந்து சங்கீதம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஏதாவது ஒரு மலையடிவாரத்தில் அமர்ந்துவிடவேண்டும் என்று தோன்றும்போதே உலகமெங்கும் செல்லவேண்டும் என்றும் தோன்றுகிறது. எனக்கு என்னவேண்டும் என்று உண்மையாகவே தெரியவில்லை. ஆனால் கனவுகாணாத நாளே இல்லை. என் வாழ்க்கையே கனவுகளால் கழிந்துவிட்டது”

“என்ன பேச்சு இது? உன் வாழ்க்கை இப்போதுதான் தொடங்குகிறது. அரசர்கள் பொதுவாக பட்டத்திற்கு வரும் வயது இது…” என்றாள் பார்வதி பாய்.

“எனக்கு சலித்துவிட்டது. பதினேழு ஆண்டுகள் இந்த கூண்டுக்குள் அடைபட்டு திணறிக்கொண்டிருக்கிறேன்… நேற்று நினைத்துக்கொண்டேன், என் சிறகுகள் எல்லாம் உதிர்ந்துவிட்டன. இப்போது இந்தக்கூண்டை திறந்துவிட்டால்கூட என்னால் பறக்கமுடியாது”

“இந்தமாதிரிப் பேச்சுக்களை நான் வெறுக்கிறேன். எல்லார் மனதிலும் ஊக்கமும் சோர்வும் நம்பிக்கையும் கசப்பும் விதைகளாக உள்ளன. அதில் நமக்கு வேண்டியதை பேசிப்பேசி வளர்த்துக்கொள்கிறோம். உன்னுடைய சோர்வையையும் கசப்பையும் வளர்த்துக்கொள்வதை தவிர வேறென்ன பயன்?”

“இளையம்மை, நான் இந்த பதினேழு வருடங்களில் ஒரு நாளாவது மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேனா?”

“அது உன்னுடைய சிக்கல்… நீ ஒரு நாட்டின் அரசன். அந்தக் கடமையை நீ ஒழுங்காகச் செய்திருந்தால் அத்தனை மகிழ்ச்சிகளும் உன்னைத் தேடி வந்திருக்கும். உன் கடமையை நீ ஒழுங்காகச் செய்யவில்லை. ஆகவே ஒவ்வொன்றும் சிக்கலாகி உன்னை சுற்றிக்கொண்டன.”

“நான் என் கடமையை ஒழுங்காகச் செய்திருந்தால் ரெஸிடென்ட் கல்லன் என்னை போற்றி மடிமேல் வைத்து கொஞ்சியிருப்பாரா?”

“இல்லை, நீ அவரை கையாள்வது எப்படி என்று கற்றுக்கொண்டிருப்பாய்” என்று பார்வதி பாய் சொன்னாள். “அரசாட்சி என்பது ஒரு போர், ஒரு விளையாட்டு. அதில் எதிரிகள் உண்டு. நம் ஆட்டத்தை தீர்மானிப்பவர்கள் எதிரிகள்தான்.”

ராம வர்மா தலையை பொறுமையின்றி அசைத்தார்.

“நான் என் அக்கச்சியிடமிருந்து இந்த நாட்டின் ரீஜண்ட் மகாராணிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது எனக்கு வயது பதிமூன்று. அன்று இங்கே ரெஸிடெண்டாக இருந்தவர் கர்னல் மன்றோ… இன்றுகூட திருவிதாங்கூரில் அவர் பெயரைச் சொன்னால் அச்சமும் வெறுப்பும் பக்தியும் கலந்து உருவாகிறது. அவர் பத்து கர்னல் கல்லன்களுக்கு சமம்” என்று பார்வதிபாய் தொடர்ந்தாள்.

“கர்னல் மெக்காலே வேலுத்தம்பி தளவாயை ஒடுக்கியவர். அவருக்கு திறமை போதவில்லை என்று சொல்லி மலபாரில் இருந்து கர்னல் மன்றோவை இங்கே அனுப்பினார்கள். அவரை இங்கே இரும்புச்செக்கு என்று சொல்வார்கள். திருவிதாங்கூரை பிழிந்து கடைசித்துளிவரை கொண்டு செல்வதற்காகவே கம்பெனி அவரை அனுப்பியது. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்புசுல்தானை வென்று மைசூரை ஆட்சிசெய்தவர் அவர். மராத்தா போர்களில் பங்கெடுத்தவர். ரெஸிடென்ட் கல்லன் அவருடன் ஒப்பிடுகையில் ஒரு வயதால் குழம்பிப்போன கிழவர் மட்டும்தான்.

“என் அக்கச்சியின் காலத்திலேயே கர்னல் மன்றோ நேரடியாகவே திருவிதாங்கூரின் திவானாக அவரே பொறுப்பேற்றுக்கொண்டார். அதற்கு என் அக்கச்சி மன்றாடி விண்ணப்பிப்பதாக ஒரு கடிதமும் எழுதி வாங்கிக்கொண்டார். நான் ரீஜண்ட் ஆக வந்தபோது அவர்தான் ரெஸிடென்டும் திவானும் எல்லாமே… பாப்பு ராவ் என்று ஒரு அடிமையை வைத்து எல்லாவற்றையும் அவரே செய்தார். நான் உலகம் தெரியாத சின்னப்பெண். உன்னைப்போல ஆங்கிலக் கல்வி உடையவள் அல்ல. என் துணைக்கு யாருமே இல்லை” பார்வதி பாய் தொடர்ந்தாள்

“ஒரு சின்ன பிழை செய்தால் போதும் நாட்டை வெள்ளைக்காரர்கள் எடுத்துக்கொள்வார்கள். மிகமிகக் கவனமாக நான் செயல்பட்டேன். கர்னல் மன்றோவை எனக்கான எதிரியாக அல்ல, என் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான களமாகவே நான் எடுத்துக்கொண்டேன்

முதலில் மெட்ராஸ் பிரசிடென்ஸியில் அவருக்கு எதிரி யார் என்பதை ஒற்றர்கள் வழியாக அடையாளம் கண்டேன். அந்த எதிரிகளின் காதில் அவரைப்பற்றிய எதிர்மறைச் செய்திகளை போட்டுக்கொண்டே இருந்தேன். கர்னல் மன்றோ இங்கே திவானாக இருந்து தனிப்பட்ட லாபம் சம்பாதிக்கிறார் என்று கெட்டபெயரை உருவாக்கினேன்.

“உண்மையைச் சொல்வதற்கு என்ன, கர்னல் மன்றோ மிகமிகமிக நேர்மையானவர். ஈவிரக்கமற்றவர், ஆனால் ஊழலே இல்லாதவர். ஆனால் அவரை ஊழல்செய்கிறார் என்று முத்திரை குத்தினேன். ஒரு நேர்மையாளன் நேர்மையற்றவன் என்று சொல்லப்படும்போது சமநிலை இழக்கிறான். கர்னல் மன்றோ அவருக்கு கவர்னர் எழுதிய கடிதங்களுக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினார். மெட்ராஸ் கவர்னர் கர்னல் மன்றோமேல் ஒரு விசாரணையை ஆணையிட்டார். அவர் திவான் பதவியிலிருந்து விலகினார்” பார்வதி பாய் சொன்னாள்.

“நான் மேலும் அவருக்கு நெருக்கடி கொடுத்தேன். அவருடைய மகன் இங்கே காப்டன் பதவியில் இருந்தான், அவர் அவனுக்காக நெறிகளை மீறுகிறார் என்று பழிகிளப்பிவிட்டேன். கர்னல் மன்றோ மெல்ல மெல்ல இங்கிருந்து விலக்கப்பட்டார். ஆயிரத்தி எண்ணூற்றி பதினெட்டில் அவர் லண்டன் திரும்பும்போதுகூட அவர் அவமானமடைந்து இங்கிருந்து சென்றதற்கு நானே காரணம் என்று அறிந்திருக்கவில்லை. அதுதான் ராஜதந்திரம்”

“அதை நான் என் சொந்த லாபத்திற்காகச் செய்யவில்லை. அவருக்குப்பின் வந்த ரெஸிடென்ட் மோரிசன் எனக்கு உகந்தவராக இருந்தார். கர்னல் மன்றோவைப்போல அவர் திருவிதாங்கூரை கறவைப் பசுவாக மட்டும் நினைக்கவில்லை. ஆகவேதான் நான் மலைக்குடியேற்றங்களை வளர்க்கமுடிந்தது. கடலோரச்சந்தைகளை உருவாக்க முடிந்தது. திருவிதாங்கூரை கடனில் இருந்து மீட்டேன். இன்று நீ காணும் கல்விவளர்ச்சி, பட்டினியில்லா நிலைமை இரண்டுமே அப்படித்தான் உருவாகி வந்தன” என்றாள் பார்வதி பாய்.

தலைகுனிந்து அமர்ந்திருந்த ராமவர்மாவை பார்த்துக் கொண்டு அவள் தொடர்ந்தாள் “கர்னல் மன்றோ இரக்கமற்றவர், ஆகவே நானும் இரக்கமற்றவள் ஆனேன். ஏனென்றால் கூரிய வாளை கூரியவாளால்தான் எதிர்க்கமுடியும். அதுதான் அரசாட்சி” மெல்லிய சிரிப்புடன் “நீ என்ன நினைத்தாய், உன் ஆட்சியை உனக்கு தட்டில் வைத்து பரிமாறுவார்கள் என்றா? எந்த அரசாவது எவருக்காவது அப்படி அளிக்கப்பட்டிருக்கிறதா?” என்றாள்.

ராமவர்மா பெருமூச்சுவிட்டார். “நான் அரசனாக ஆகும்போது எத்தனையோ கனவுகளுடன் இருந்தேன். கீழ்மட்ட ஊழலை முழுக்க நீக்கம் செய்யவேண்டும், அத்தனைபேருக்கும் அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை வரும்படி நீதி முறையை கொண்டு வரவேண்டும், வணிகப்பாதைகளை முழுக்கமுழுக்க பாதுகாப்பாக அமைக்கவேண்டும்… எத்தனையோ திட்டங்கள் வகுத்தேன்”

“அதற்கு நீ என்ன செய்தாய்?” என்று பார்வதி பாய் கேட்டாள். “உனக்கு ஆசிரியராக இருந்த சுப்பா ராவை திவானாக ஆக்கவேண்டும் என்று நினைத்தாய். ஏனென்றால் அவரிடம் உன் கனவுகளை எல்லாம் சொல்லியிருந்தாய். அவர் அவற்றையெல்லாம் ஆதரித்தார். நானும் ரெஸிடென்ட் மோரிசனும் அதை எதிர்த்தோம். ஏனென்றால் எங்களுக்கு சுப்பாராவ் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால் ரெஸிடென்ட் மோரிசன் மாறுதலாகிப் போனதுமே நீ நான் நியமித்த திவான் வெங்கிட்டராவை பதவிநீக்கம் செய்தாய். உன் ஆசிரியர் சுப்பாராவை திவானாக ஆக்கினாய். அவர் சொன்னார் என்று கொச்சு சங்கரப்பிள்ளையை திவான் பேஷ்காராக நியமித்தாய்…”

“ஆமாம், நான் அரசன். என் அரசை நான் உருவாக்கவேண்டும் என்று நினைத்தேன்.”

“உண்மை, ஆனால் உன் கனவுகளை நிறைவேற்றும் தகுதி நீ நியமித்த அமைச்சருக்கு இருக்கிறதா என்று பார்த்தாயா? அவர் வெறும் ஆசிரியர். ஒரு நிர்வாகி கீழிருந்து படிப்படியாக மேலேறி வரவேண்டும். பலமுறை இதை நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேன். திவான் என்பவர் அரசின் முக்கியமான எல்லா துறைகளிலும் சில ஆண்டுகளாவது வேலை செய்திருக்கவேண்டும்… ” என்றாள் பார்வதி பாய்.

“சுப்பாராவ் முயற்சி செய்தார்” என்று ராமவர்மா சொன்னார்.

“சுப்பராவ் அத்தனை செயல்களையும் அரைகுறையாகவே செய்தார். உன் எண்ணங்களை எல்லாம் வெறும் ஆணைகளாகவே பிறப்பித்துக்கொண்டிருந்தாய். மாதம் ஐந்தாறு அரசாணைகள்… அந்த ஆணைகள் நிறைவேறினவா என்று நீ பார்க்கவில்லை. அவை என்ன விளைவை உருவாக்கின என்று நீ கவனிக்கவில்லை. அவை வெறும் சந்தைப் பேச்சுக்களாகவே நீடித்தன..” என்று பார்வதி பாய் தொடர்ந்தாள்.

“பதினேழு ஆண்டுக்குமுன் நான் உன்னிடம் சொன்னேன். ஒன்றை நினைப்பதும் சொல்வதும் அல்ல அதை செய்வதுதான் அரசாட்சியில் முக்கியம். நினைக்கையிலும் சொல்லும்போதும் நம்முன் எவருமே இல்லை. செய்ய ஆரம்பிக்கும்போது அதற்கு எதிரான எல்லா சக்திகளும் எழுந்து வருகின்றன. அவற்றை கையாளத் தெரியவேண்டும்”

“அதாவது, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தண்டிக்கவேண்டும் என்றால் அதிகாரிகளின் தரப்பையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் இல்லையா?” என்று ராமவர்மா உரக்க கேட்டார்.

“இல்லை. ஆனால் நேர்மையானவரும் திறமையற்றவருமான அதிகாரியை விட திறமையான சற்று நேர்மைக்குறைவுகொண்ட அதிகாரி மேல். முற்றிலும் நேர்மையான அதிகாரி என்பவர் எதையுமே செய்யாமலிருப்பவர்… ஏனென்றால் அரசாட்சி என்பதிலேயே ஒர் அநீதி இருக்கிறது” என்றாள் பார்வதி பாய் “ஆமாம், நாம்தான் இந்நாட்டை ஆட்சி செய்கிறோம். ஆனால் நம் ஆணைகளை இந்த நாடு ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஆட்சி நடக்கும். ஆணைகளை மக்கள் ஏற்றுக்கொள்ள வைப்பதில்தான் அரசனின் ஆட்சித்திறனே இருக்கிறது.”

“எனக்கு புரியவில்லை இளையம்மை… நான் எல்லா இடங்களிலும் தோற்றுவிட்டேன்.”

“ரெஸிடென்ட் கல்லனை இரண்டு ஆண்டுகளாக நீ ஏன் சந்திக்கவில்லை? நான் உன்னிடம் பலமுறை சொன்னேன்.”

“நான் சொன்னேனே, அவருக்கு செவி கேட்கவில்லை. என்னால் கத்திப்பேசமுடியவில்லை. என் நெஞ்சு வலிக்கிறது.”

“அசட்டுத்தனமாகப் பேசாதே” என்று பார்வதி பாய் சொன்னாள்.

“அவருடைய காதில் கொஞ்சம் செவிக்குறைவு உண்டு. ஆனால் அவர் அதை என்னிடம் கூடுதலாக நடிக்கிறார். என்னை கூச்சலிடச்செய்கிறார்”

“சரி, நீ ஏன் அதிகாரிகளைச் சந்திப்பதில்லை? ஏன் திவானைக்கூட சந்திப்பதில்லை?”

“ஏன் சந்திக்கவேண்டும்? இங்கே நான் சொல்வது நடக்கிறதா என்ன? இளையம்மை உங்களுக்கு தெரியும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே ரெஸிடென்ட் கல்லன் எல்லா மனுக்களையும் அவர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்று ஆணையிட்டுவிட்டார். எல்லா ஆணைகளையும் அவரே போடுகிறார். நான் அவருடைய ஆணைகளை ஏற்று கைச்சாத்திடவேண்டும் அவ்வளவுதான். அதற்கு நான் எதற்கு?”

“சரி, அதைக்கூட நான் புரிந்துகொள்கிறேன். நீ சென்ற ஆண்டு நாஞ்சில்நாடு போனாய். அங்கே பதினெட்டு பிடாகைக்காரர்களும் உன்னை பார்க்க விரும்பினார்கள். இந்த திருவிதாங்கூரே நாஞ்சில் நாட்டின் அன்னத்தை உண்டு வாழ்வது. நம்முடைய சோற்றுக்கலம் அது. நமக்கு முழுக்கமுழுக்க விசுவாசமானவர்கள் நாஞ்சில்நாட்டு பிள்ளைமார். நீ அவர்களுக்கு சந்திப்பு அளிக்க மறுத்தாய்”

“நான் கன்யாகுமாரிக்கு போய்க் கொண்டிருந்தேன். அங்கே தனியாக இருக்க நினைத்தேன்.”

பொறுமையை தருவித்துக்கொண்டு “நீ என்னதான் நினைக்கிறாய்? உனக்கு என்னவேண்டும்?” என்று அவள் கேட்டாள்.

“நான் அரசன்… அரசனாக நான் பணியாற்றவேண்டும்… அதற்கான உரிமையும் சுதந்திரமும் எனக்கு வேண்டும்”

“அதை நீதான் ஈட்டிக்கொள்ள வேண்டும். அதைத்தான் உன் இளமைநாட்கள் முதல் நான் உன்னிடம் சொல்கிறேன். உன்னை அதற்காக பயிற்சிகொடுக்கத்தான் நான் முயன்றேன். நீ அதையெல்லாம் சித்திரவதைகளாக நினைத்தாய்…”

“இளையம்மை, நீங்கள் அளித்த எல்லா பயிற்சிகளையும் நான் அடைந்தேன். என்னால் ஆயுதப்பயிற்சி பெறமுடியவில்லை. என் மனம் அதில் நிற்கவில்லை.”

“அரசன் முதலில் பயிலவேண்டியது ஆயுதங்களைத்தான். போர்க்கலை வழியாகத்தான் மற்ற கலைகளை புரிந்துகொள்ளவேண்டும்”

ராமவர்மா வெடித்துச் சிரித்து “சங்கீதத்தைக்கூடவா?” என்றார். பார்வதி பாய்யின் முகம் சிவப்பதைக் கண்டு “இல்லை, சிரிக்கவில்லை. வேடிக்கையாக இருந்தது, அவ்வளவுதான்” என்றார்.

“நீ ஒருபோதும் என் சொற்களை செவிகொண்டதில்லை” என்றார் பார்வதி பாய்.

“இளையம்மை அப்படிச் சொன்னால் நான் என்ன செய்ய? நான் திருமணம் செய்துகொண்டதுகூட உங்கள் ஆணைப்படி. என் ஆசை வேறு என்று உங்களுக்கே தெரியும்…”

“ஆமாம், நீ விரும்பிய மாவேலிக்கரை ராமனாமடத்தில் ஓமனத் தங்கச்சியை திருமணம் செய்துகொண்டால் அரசனாக உனக்கு என்ன நன்மை? திருமணம் வழியாக நீ நாஞ்சில்நாட்டின் முழு ஆதரவையும் பெற்றிருக்கவேண்டும் என்று நினைத்தேன். நாயரும் வேளாளரும் உன்னுடன் நின்றிருக்கவேண்டும். அப்போதுதான் நாடே உன் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆகவேதான் திருவட்டார் அம்மச்சி வீட்டில் நாராயணிப்பிள்ளையையும் நீலம்மைப்பிள்ளையையும் உனக்கு மணமகள்களாக்கினேன். வேளாளர்களில் வடசேரி அம்மவீட்டில் சுந்தரலட்சுமிப் பிள்ளையை உனக்கு தேர்வுசெய்தேன்…”

“தெரிவுசெய்து வாக்கு கொடுத்தபின் எனக்குச் சொன்னீர்கள். உரியநாளில் சென்று நான் பட்டும் கச்சையும் கொடுத்தேன். அவ்வளவு சுதந்திரத்துடன் இருந்திருக்கிறேன்” என்று ராமவர்மா புன்னகைத்தார்

“சுதந்திரம் என்பது ஆற்றலால் வருவது. நான் சொன்னபடி அவர்களை நீ கூடவே வைத்திருந்தால் உன்னைப் பார்த்து ரெஸிடென்ட் கல்லன் பயந்திருப்பார்.”

“அதைவிட நான் இந்த மூன்று பெண்களையும் பார்த்து பயந்தேன் இளையம்மை” என்று ராமவர்மா சொன்னார்.

“என்ன பயம்? அவர்களை நீ ஏறெடுத்தும் பார்க்கவில்லை”

“அவர்கள் தைரியமானவர்கள், உலகியல் கணக்கு ஊறியவர்கள், உங்களைப்போல” என்று ராமவர்மா சொன்னார் “பாடத்தெரியாத பெண்ணுடன் ஒரு வார்த்தைகூட என்னால் பேசமுடியாது.”

பார்வதி பாய் பெருமூச்சுவிட்டாள். “எல்லாவற்றையும் நீயே சீரழித்துக்கொண்டாய். உன் மனம் சங்கீதத்தில் மூழ்கிகிடந்தது. அரசனுக்கு சங்கீதம் வேண்டும், அது குளியல்போல. நீ இரவுபகலாக குளத்திலேயே ஊறிக்கிடந்தாய்…”

......
......
......
......
எனக்கும் அரசியல் விளையாட்டு தெரியும். ஜார்ஜ் ஹே துரை தற்காலிகமாக லண்டன் போனபோது ஹென்றி டிக்கின்ஸன் மெட்ராஸின் ஆக்டிங் கவர்னர் ஆனார். உடனே அவருக்கு ஒரு பரிசை அளித்து கிருஷ்ணராவை பதவிநீக்கம் செய்ய அனுமதி பெற்றேன். அவரை திருவனந்தபுரத்திலிருந்தே துரத்தினேன்” என்றார் ராமவர்மா.

பார்வதி பாய் புன்னகைத்து, “ஒரு சிறுவெற்றி. சரி, அதனால் என்ன ஆயிற்று?. ரெஸிடென்ட் கல்லன் அது அவருக்கு எதிரான நடவடிக்கை என்று எடுத்துக் கொண்டார். அதற்கு பதிலடியாக உன் ஆசிரியர் சுப்பாராவை வெளியேற்றுவதற்கு அவர் முயன்றார். மீண்டும் கார்ஜ் ஹே மெட்ராஸ் கவர்னராக வந்தார். கர்னல் அவரிடம் பேசி சுப்பாராவை டிஸ்மிஸ் செய்யவைத்தார். அவரை திருவனந்தபுரத்தில் இருந்து துரத்தினார். உன் அவைக்கு வந்து கதறி அழுத சுப்பாராவை உன்னால் காப்பாற்ற முடியவில்லை. அவர் தஞ்சாவூருக்கு போனார்”

“ஆமாம், ஆனால் அவரை மீண்டும் அழைத்துக்கொண்டேன்” என்றார் ராமவர்மா.

எப்படி? ஒன்றரை ஆண்டுகள் கழித்து. ஜார்ஜ் ஹேக்கு பதினெட்டு கடிதங்கள் அனுப்பினாய். தனிப்பட்ட பரிசாக மட்டும் பல ஆயிரம் ரூபாய் கொடுத்தாய். கடைசியில் வெற்றி கிடைத்தது. சுப்பாராவ் இங்கே வந்தார். மதிப்பில்லாத ஓர் அரசப்பதவியில் அமர்ந்தார்… இந்த மொத்த அரசியலுக்கும் நீ செலவிட்டது மூன்று ஆண்டுகள்…” என்றார் பார்வதி பாய்.

ராமவர்மாவின் உடலில் ஒரு மிகச்சிறிய அசைவு நிகழ்ந்தது. அவள் அவருக்கு எதையாவது கற்பிக்க முயலும்போதெல்லாம் எழும் அசைவு அது. உடலில் விழுந்த நீர்த்துளியை உதறுவதுபோல. அவளைச் சினமூட்டும் ஒரு சொல் போல.

அவள் குரல் ஓங்கியது. “அந்த மூன்றாண்டும் இங்கே என்னென்ன நிகழ்ந்தது என்று உனக்கு தெரியுமா? அங்கே மெட்ராஸ் ராஜதானியில் மீண்டும் பஞ்சம் தலைகாட்டத் தொடங்கியது. இங்கே பல்லாயிரம்பேர் ஒவ்வொரு நாளும் பஞ்சம் பிழைக்க கிளம்பி வந்து ஆரல்வாய்மொழி கணவாயில் குவிந்து கிடந்தனர். அவர்களுக்கு மலைப்பகுதிகளில் நிலம்கொடுத்து குடியேற்றவேண்டிய அதிகாரிகள் அந்தப் பஞ்சப்பரதேசிகளிடமே லஞ்சம் வாங்கினார்கள். சிலர் அவர்களை அடிமைகளாகப் பிடித்துக்கொண்டு சென்று தூத்துக்குடியில் விற்பவர்களிடம் கூட்டு சேர்ந்து கொண்டார்கள்.

“இங்கே நம் மண்ணுக்குள் அடிமைமுறை பத்மநாபசாமிக்கு எதிரான குற்றம். நான் இட்ட ஆணை அது. ஆனால் நாகர்கோயிலில் இருந்தும் பத்மநாபபுரத்தில் இருந்தும்கூட பஞ்சம்பிழைக்க வந்த மக்களை ஆசைகாட்டியும் பிடித்துகட்டியும் கொண்டுசென்று விற்றார்கள் நம் அதிகாரிகளான நாயர்கள். நம் கடல்முழுக்க போர்ச்சுக்கீசியர்கள் ஆதிக்கம் செலுத்தலாயினர். நமக்கு விசுவாசமாக இருந்த மீனவக்குடிகள் போர்ச்சுக்கலுக்கு கப்பம்கட்டி நம்மை எதிர்க்கத் தொடங்கினர். நம் சந்தைகள் அனைத்திலும் ஆதிக்கம் செய்யும் கூட்டங்கள் உருவாயின. போர்ச்சுக்கல்காரர்கள் தாக்கியதனால் மணக்குடி முதல் ஆலப்புழை வரை துறைமுகங்கள் பொலிவிழந்தன.”

“மூன்றே ஆண்டுகளில் நான் பத்தாண்டுகளில் உருவாக்கிய செல்வத்தை அழித்துவிட்டாய். ராமா, இந்த திருவிதாங்கூரின் செல்வம் இரண்டே ஊற்றுக்களில் இருந்துதான். மலைக்குடியேற்றக்காரர்கள் அளிக்கும் தீர்வை, சந்தைகளும் துறைமுகங்களும் அளிக்கும் சுங்கம். மலைக்குடியேற்றக்காரர்கள் உருவாக்கும் விளைபொருட்கள் ஆறுகள் வழி சந்தைகளில் வந்துசேரவேண்டும். தொடக்கம் முதல் இறுதிவரை இந்தப்பாதை பாதுகாக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் நாம் அழிவோம்…. நான் திட்டமிட்டு ஒவ்வொரு நாளும் கண்விழித்து கணக்கிட்டு காத்து உருவாக்கிய பயிர் இது, உன்னால் அது கருகியது” என்றாள் பார்வதி பாய்.

“நான் என்ன செய்திருக்கவேண்டும்? என் திவானை நியமிக்க எனக்கு உரிமை இல்லையா? எனக்கு நம்பிக்கை இல்லாத ஒருவரை நீக்க எனக்கு உரிமை இல்லையா? நான் பணிந்து போகவேண்டுமா?” சட்டென்று ராமவர்மா ஆவேசம் கொண்டார். “கண்முன் விஷவிருட்சம் வளர்கிறது. அதை வெட்டிவீச நம்மால் முடியவில்லை என்றால் நாம் ஏன் அரசாங்கம் என்று சொல்லிக் கொள்ளவேண்டும்? இந்த வெற்றுவேஷம்தான் அரசனின் அடையாளமா? அந்த கிரீடமும் செங்கோலும் உடைவாளும் மார்த்தாண்டவர்மா குலசேகரப்பெருமாள் வைத்திருந்தது. அதை தொடுவதற்கே எனக்கு தகுதி இல்லை.”

அந்த தகுதியை ஈட்டிக்கொள், நான் சொல்லவந்தது அதைத்தான்” என்று பார்வதி பாய் சொன்னாள்.

“நான் சும்மா இருந்திருக்கவேண்டுமா? கிருஷ்ணராவை அப்படியே இந்த நாட்டை ஆளவிட்டிருக்கவேண்டுமா?”

வேண்டாம், ஆனால் இதை வைத்துக்கொண்டு சதுரங்கம் விளையாடியிருக்கக்கூடாது. அந்த கிருஷ்ணராவ்தான் பிரச்சினையா? அவன் சிக்கலானவன் என்று தோன்றினால் அவனை அப்போதே கொன்றுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கவேண்டியதுதானே?”

......
......
......
......
“ஆமாம், என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ரெஸிடென்ட் கல்லனிடம் போரிட என்னால் முடியாது. நான் சலித்துவிட்டேன்.”

“அதாவது நீ அரசனான பிறகு செய்த ஒரே போராட்டத்தையும் கைவிட்டுவிட்டாய்.”

“ஆமாம்.”

ஆனால் நீ பணத்தை மண்ணையும் கல்லையும்போல செலவழிக்கிறாய். ஆண்டுக்கு அரண்மனைக்கு பட்டு வெல்வெட் துணிகள் வாங்குவதற்காக மட்டும் மூன்றுலட்சம் ரூபாய் செலவழித்தாய். அரண்மனையில் ஓவியங்கள் வாங்குவதற்கு மட்டும் அறுபதாயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது. இசைக்கலைஞர்களுக்கான செலவுமட்டும் எழுபத்தாறாயிரம் ரூபாய்… அவர்களுக்கான பரிசுகள், ஊதியங்கள், இசைவிழாக்கள்…”

ராமவர்மா ஒன்றும் சொல்லவில்லை.

“ராமா நீ எப்படி அரசனாக ஆனாய் தெரியுமா?”

ராமவர்மா திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்.

“நீ உன் அம்மாவின் கருவில் உருவானபோது திருவிதாங்கூரை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் சேர்க்கும் எண்ணம் சென்னை கவர்னருக்கு இருந்தது. ஜார்ஜ் பர்லோ அதற்காக எல்லாவற்றையும் செய்தார். ஆகவே நீ கருவிலிருக்கையிலேயே உனக்கு முடிசூட்டினோம். அரசன் என்று எல்லா ஆவணங்களிலும் உன்பெயரை சேர்த்தோம். அரசன் இருந்த நாடு ஆதலால் திருவிதாங்கூர் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்படவில்லை.”

“ஆனால் இன்று நீ நோயுற்றிருக்கிறாய் என்றும் திருவிதாங்கூரின் ஆட்சி சீர்குலைந்திருக்கிறது என்றும் ரெஸிடென்ட் கல்லன் மெட்ராஸ் கவர்னருக்கு செய்தி அனுப்பமுடியும். உன்னால் நாட்டை ஆட்சிசெய்து உரியமுறையில் கப்பம் கட்டமுடியாது என்று ஒரு வார்த்தை அவர் எழுதினால் போதும், மெட்ராஸ் கவர்னர் நம் நாட்டை இணைத்துக் கொண்டுவிடுவார். பூதம் வாய்திறந்து காத்திருக்கிறது” என்றார் பார்வதி பாய்.

“அதற்கான எல்லா ஆதாரங்களும் இங்கிருக்கின்றன. நீ ரெஸிடெண்டை சந்தித்தே இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அவர் உன்னைச் சந்திக்க வேண்டும் என்று கோரி எழுதிய பதினேழு கடிதங்களுக்கு நீ பதில் அளிக்கவில்லை. ரெஸிடென்ட் அலுவலகத்திலிருந்து வந்த நாநூற்றுக்கும்மேல் கடிதங்களுக்கு உன்னிடமிருந்து பதிலே போகவில்லை” என்று பார்வதி பாய் சொன்னாள்.
......
.......
......
......
பார்வதி பாய் “ராமா நான் உன்னிடம் கேட்கவந்தது ஒன்றே. இதை கேட்கும் சந்தர்ப்பத்தை எண்ணி எண்ணி தவிர்த்தேன். என்னால் இதை உன்னிடம் கேட்கமுடியாது. நீ என் முதல்மகன் போல. உன்னை மடியிலிட்டு வளர்த்திருக்கிறேன்… என் அரசியல் வாழ்க்கையில் நான் எதற்குமே தயங்கியவள் அல்ல, இதற்காக தயங்கினேன்.

“நீங்கள் என்னிடம் எதையும் கேட்கலாம் இளையம்மை” என்றார் ராம வர்மா.

“நீ அரசனாக நீடிக்கவேண்டுமா?”

ராமவர்மா திடுக்கிட்டவர்போல பார்த்தார். அவருடைய நெஞ்சு துடிப்பது தெரிந்தது. கழுத்திலும் நெற்றியிலும் நீலநரம்புகள் அதிர்ந்தன.

வரவிருக்கும் காலம் கொடுமையானது ராமா. நீ உன் செயலின்மையால் பல்லாயிரம்பேரை பட்டினிச்சாவு நோக்கி தள்ளிவிடுவாய்.”

“இளையம்மை, என்ன சொல்கிறீர்கள்?” என்று அவர் நடுங்கும் குரலில் கேட்டார்.

“நீ உன் இளையவனை அரசனாக்கிவிட்டு மருத்துவம் செய்து கொள்வதற்காக லண்டனுக்கு போ. உன் நோய் அங்கே குணமாகும். அங்கே நீ விரும்பிய இசையை முழுமையாக கற்கவும் முடியும்…”

ராமவர்மா பெருமூச்சுவிட்டு தளர்ந்தார்.

நீ மென்மையானவன்” என்றாள் பார்வதி பாய். “முன்பெல்லாம் இங்கே வீடுகளின் கதவுகள் எடைமிக்கவை. அந்தக் கதவுகளை நிறுத்தும் இடத்தில் ஒரு நிலைக்கல்லை வைப்பார்கள். அந்தக்கல்லை கல்லாசாரிகள் தேடிப்பிடித்துக் கொண்டுவருவார்கள். நெய்க்கருப்பன் கல் என்று அதைச் சொல்வார்கள். அது இரும்பைவிட உறுதியானது. உடையாது, எளிதில் தேயாது. அதில் எடைமிக்க கதவு ஒருநாளுக்கு நூறு இருநூறுமுறை சுழல வேண்டியிருக்கிறது…”

“அரசன் நெய்க்கருப்பன் கல்லாக இருக்கவேண்டும். நீ மென்மையான மாக்கல். அதில் சிற்பங்கள் செய்யலாம். நிலைக்கல்லாக அமையமுடியாது. நெய்க்கருப்பங்கல்லில் சிற்பம் வடிக்கமுடியாது, அது உளியை உடைத்துவிடும். அது நிலைக்கல்லாக வைக்க மட்டுமே உதவும்… உன் இளையவன் அப்படிப்பட்டவன்” அவள் அவனை நோக்கி குனிந்து “உன்னை நீயே மதிப்பிட்டுக்கொள்” என்றாள்.

ராமவர்மா நெடுநேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

“திருவிதாங்கூரின் நலம் மட்டுமே என் நோக்கம். நீ அதை எண்ணிப்பார்.”

“இளையம்மை, மென்மையான அரசன் ஒருவன் இருக்கமுடியாதா? கலைகளையும் இலக்கியத்தையும் அறிந்தவன், நெறிகளில் நம்பிக்கைகொண்டவன் அரசனாக ஆளவே முடியாதா?”

“ராமா, புராணங்களில்கூட அப்படிப்பட்ட ஓர் அரசரைப்பற்றிய செய்திகள் இல்லையே” என்றாள் பார்வதி பாய்.

“ம்” என்றார் ராமவர்மா.

“அலக்ஸாண்டர் சக்கரவர்த்தி புல்லாங்குழல் வாசித்தபோது அவர் தந்தை வந்து பிடுங்கி வீசிவிட்டு அவர் வாயில் சூடுபோட்டார் என்று உன் ஆங்கில ஆசிரியர் சொன்னார், நினைவிருக்கிறதா?” என்று பார்வதிபாய் சொன்னாள் “புல்லாங்குழல் இசைப்பவனால் கொல்லமுடியாது. கொல்லாதவன் அரசன் அல்ல.”

ராமவர்மா பெருமூச்சுவிட்டார்.

“ஒட்டுமொத்தப் பெருங்கருணையால் ஒவ்வொன்றிலும் கருணையே இல்லாமலிருப்பவனே அரசன் என்று ஸ்மிருதிகள் சொல்கின்றன” என்று பார்வதிபாய் சொன்னாள்.

ராம வர்மா தலைதாழ்த்தி அமர்ந்திருந்தார்.

“நீ சாப்பிட்டு ஓய்வெடு… நான் மாலையில் வந்து உன்னைப்பார்க்கிறேன்” என்று பார்வதிபாய் எழுந்தாள்.
.......
.......

பரிமேலழகர் உரை
அறத்தான் வருவதே இன்பம் - இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்த - அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இல - அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல. ('ஆன்' உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, 'தூங்கு கையான் ஓங்கு நடைய' (புறநா.22) என்புழிப்போல. இன்பம் - காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் 'பிறனில் விழைவு' முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின் 'புறத்த' என்றார். அறத்தோடு வாராதன 'புகழும் இல' எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம். இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.

மு.வரதராசனார் உரை
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

சாலமன் பாப்பையா உரை
அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.

Thirukkural - Management - Thoughts
Anger is another force that forces a person to lose his virtue. A person loses himself emotionally when he becomes angry. The outcome of anger is regret. Refer to Practice 9 ‘Managing Anger’ for more insights into the consequences of anger. When a person becomes angry, he cannot control using abusive words. When he uses abusive and hurtful words, the impact of those on the hearer is deep. Refer to Kural 100 in to know the impact of harmful words on others.

The ultimate happiness a person gets is the happiness out of virtuous practices, assures Kural 39.

Virtue alone is happiness; all else 
Is else, and without praise.

Happiness obtained through improper means, like fraudulent behaviors, is neither real nor long lasting. Moreover, that sort of happiness does not bring any fame, popularity, or satisfaction to the person who resorts to that sort of happiness.

English Meaning - As I taught a kid - Rajesh
What is true happiness?
True happiness is the one that comes from doing and fulfilling duties/responsibilities with full potential in right ways with integrity.
What is not true happiness?
Anything including small time pleasures or small/mini pleasures (சிற்றின்பம்) that comes from not doing dharma or by doing distracting works such as passing time, watching entertainment stuffs, gossiping, talking futile things or engaging in useless/meaningless arguments/debates with friends/colleagues. Because these can be only some relaxing stuffs for 10-15mins per day. Relaxing stuffs cannot and should not replace the main work. Relaxing stuffs are like desires. They distract us by giving small pleasures whereas steal the true happiness from us. 

Questions that I ask to the kid
What is true happiness and where does it come from? 
How can achieve true happiness?
What is not true happiness?

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

குறள் 38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
[அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்]

பொருள்
வீழ் -  To fall, [poetic form of விழு.] 2. v. a. To desire, ஆசைவைக்க. 3. To long for, to desire earnestly, மேவ. (p.)
வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

படாஅ - படா - paṭā   adj. U. barā. Large, great;பெரிய.
படாஅமை - வரும் வரைக்கும் காத்திராமல்

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்.

வாழ் - முறைமை
நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

வாழ்நாள் - ஆயுட்காலம்

வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு.

அடைக்கும் -  அடைத்தல் - சேர்த்தல்; தடுத்தல் பூட்டல்; அடைக்கப்படுதல்; மறைத்தல் சாத்துதல் சிறைவைத்தல், காவல்செய்தல்; வேலியடைத்தல்.

கல் - வெட்டியெடுத்தகல்; சிறுகல்; பாறை; மலை; இரத்தினம்; காவிக்கல்; முத்து; வீரக்கல்; சாவுச்சடங்கில்இறந்தார்பொருட்டுப்பத்துநாளைக்குநாட்டப்படுங்கல், மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று; செங்கல்; கருங்கல்; மைல்அளவுக்குநாட்டப்பட்டகல்; கிலோமீட்டர்அளவுக்குநாட்டப்படுங்கல்; மைல்தூரம்; கல்வி.

முழுப்பொருள்
ஒருவன் தன் இறப்புவரை அறம் செய்ய ஒரு நாளும் தவறாது இருப்பானாயின் அவனுக்கு பிறப்பு இறப்பு என்னும் தொடர் சங்கிலியில் அடுத்து பிறவிக்கான வழியை அடைக்கும் கல்லாக அது அமையும். அதாவது அவன் வீடு பேறு பெறுவான் அல்லது அவனுடைய அறமே அவனுக்கு துணை நிற்கும். தர்மம் தலை காக்கும். 

ஒப்புமை
”வாணாள் அடைக்கும் வழியது வாமே” (திருமந் 588)
“வீழ்நாள் படாமைநீ துன்னம்பெய் யேயாக
வாழ்நாள் படுவ தறி” (அறநெறிச் 115)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் - அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம். (ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன : அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம். இது வீடு தருமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

குறள் 37
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
[அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்]

பொருள்
அறத்து - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்

அறத்து - அறம்  - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்

ஆறு - ஓர்எண்ணிக்கை;  நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு தலைக்கடை

இது - அஃறிணைஒருமைஅண்மைச்சுட்டுப்பெயர்; இந்த

என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டா - விரும்பாத 

சிவிகை - பல்லக்கு; எருதுபூட்டியவண்டிவகை.

பொறுத்தல் - தாங்குதல்; சகித்தல்; சுமத்தல்; அணிதல்; இளக்காரம்கொடுத்தல்; மன்னித்தல்; உத்தரவாதமாதல்; தாமதித்தல்; உவமையாகப்பெறுதல்; சாந்தமாயிருத்தல்.

பொறுத்தானொடு -சுமந்தவன் உடன்

ஊர்ந்தான் - ஊர்தல் - நகருதல்; பரவுதல்; தினவுறுதல்; நெருங்குதல்; வடிதல்; ஏறிச்செல்லுதல்; கழலுதல்; ஏறுதல்.

இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு

முழுப்பொருள்
அற வாழ்வின் இயல்பு, வழி, பயன் ஆகியவற்றை நூல்களின் மூலம் சொல்லி கற்கவேண்டும் என்றில்லை. பல்லக்கில் சுமந்துசெல்லப்படும் அறச்செல்வோர்களை கண்டு, அவர்கள் வாழ்வில் கடந்துவந்த பாதைகளையும் அவர்கள் அறத்தின் பால் கொண்ட உறுதியயையும் அவர்கள் புரிந்த செயல்களையும் அறிந்து, அதனை மற்றவரிடத்து வேறுபடுத்திப் பார்த்தாலே போதும்.  அறத்தின் பயனையும் சிறப்பையும் அறியலாம். 

பல்லக்கில் சுமந்து சென்றால் மேலோர் பல்லக்கை சும்மப்பவர் கீழோர் பாவம் செய்தோர் என்றில்லை. இன்றையகாலக்கட்டங்களில் பொதுவாக பல்லக்குகளை இரு இடங்களில் காண்கிறோம். ஒன்று கோயில் திருவிழாக்களில், தெய்வ மூர்த்திகளின் நகர் உலாக்களில். இரண்டு கல்யாணங்களில் ஆடம்பரமாக ஒரு பகட்டுக்காக கேளிக்கைக்காக செய்யப்படும் - அதனை விட்டுவிடுவோம். 

கோயில்களில் இறைவனை பல்லக்கில் சும்மாக்கிறார்கள். அதேப்போல் அறச்செல்வர்களை மக்கள் மனதில் பல்லக்கில் சும்மக்கின்றனர். உதாரணமாக மஹாத்மா காந்தி, கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன், வினோபா பாவே ஆகியோரை கூறலாம். இவர்கள் மட்டும் அல்ல மக்களுள் மக்களாக தன்னால் இயன்றவற்றை செய்து பேறு பெற்றோரும் உண்டு. உதாரணமாக யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, நெ.சுந்தரவடிவேலு ஆகியோரை கூறலாம். 

நூல்களில் அறத்தைப் பற்றி பயில்கிறோம் ஆனால் அது உண்மையா நடைமுறையில் அது சாத்தியமா என்று பார்க்க வேண்டும் என்றால் நீ உலகில் உள்ள அறச்செல்வோரை இவ்வுலகம் எப்படி தாங்குகிறது என்று பார்த்து அதற்கான காரணத்தையம் அவர்கள் வந்த வழியினையும் செய்த செயல்களை உணர்ந்தாலே போதும்.

பாயசம் சாப்பிட்டால் நமக்கு இன்னொரு குவளை பாயசம் சாப்பிட தோன்றுகிறது. ஏனெனில் அது இனிப்பின் தன்மை. அது போல மேலும் நாம் நல்லோர் சான்றோர் அறத்தோர் பெறும் பயனையும் மதிப்பையும் பார்த்து உணர்ந்தால் நமக்கும் அவ்வழியை பின்பற்ற ஒரு மிகப்பெரிய உந்துதலாக அமையும். மேலும் அறவழில் செல்லாதோர் அனுபவிக்கும் துயரங்களை கண்டால் நமக்கு அவ்வழியில் செல்ல உந்துதல் ஏற்படாது. 

கவிஞர் மகுடேஸ்வரன் (கீழே முழு உரை உள்ளது) கூறுவதுப்போல் துன்பங்களை சுமப்பவனிடம் எது அறம் என்று போதிக்காதே ஏனெனில் அவன் துன்பத்தில் இருக்கிறான். அவன் விடுதலைக்கு அவன் உடன் இருந்து தோள்கொடுத்து உதவு. பல்லக்கின் மேல் உட்கார்ந்து செல்வது அறமன்று என்று கூறுவது பயனில்லை ஏனெனில் பல்லக்கில் இருப்பவன் அவன் அதிகாரத்தை காண்பிப்பான்.  

நீங்கள் குறிப்பிட்ட குறள் மீதான என் வாசிப்பு என்பது இந்த இரண்டு சாத்தியங்களையும் ஒட்டியது. அக்குறள் அதிகமாகப் புகழ்பெற்ற  ஒன்றல்ல. ஏனென்றால் விதிவலிமையைச் சொல்லும் எளிய குறளாக மட்டுமே அது அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அது மட்டும்தானா?

தமிழில் குறள் மீதான உரைகளில் வடமொழி அறிவு இன்மையின் பெரும் பிழைகளும், இந்தியஞானமரபில் பழக்கம் இல்லாததனால் இந்திய ஞானமரபின் விவாதங்களில் வைத்து குறளைப் பார்க்க முடியாமையின் விடுபடல்களும் நிறைந்திருக்கின்றன.

பரிமேலழகர் ”அறத்து ஆறு இது எனல் வேண்டா. அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா, சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை- சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானோடு காட்சியளவை தன்னானே உணரப்படும்’ என்று சொல்கிறார்.

இதில் இருந்து எளிமையான ஓர் உரையை பிற்காலத்தவர் தருவித்துக்கொண்டார்கள். அதாவது ‘அறத்தின் வழி இது என்பதற்கு சான்றாக பல்லக்கு தூக்குபவனையும் அதில் ஏறிச் செல்பவனையும் எடுத்துக்கொண்டாலே போதுமே’ என்பதே அக்குறளின் பொருள் என்று கொண்டார்கள். பரிமேலழகர் சொல்லுவதாக இவர்கள் எடுத்துக்கொண்ட அந்த உரையையே நாம் இன்றுவரை எல்லா நூல்களிலும் காண்கிறோம். கணிசமான குறள் உரைகள் ஒரு அடுப்பில் தீ வாங்கி ஊரே சமைப்பது போன்றவை.

அக்காலத்து தத்துவ விவாதத்தின் தளத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய குறள் இது. அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா என்கிறார் பரிமேலழகர். ஆகம அளவை என்றால் என்ன?

அளவைவாதம் என்பது மீமாம்சத்துக்கு தமிழில் சுட்டப்பட்ட பெயர். இதை நாம் மணிமேகலையில் காணலாம். இதில் ஆகம அளவைவாதம் என்பது பூர்வ மீமாம்சை. வேதங்களை தன் முழுமுதல் அடிபப்டையாகக் கொண்ட ‘வேதமுதன்மைவாதம்’ அல்லது ‘வேள்விமையவாதம்’  என்று பூர்வ மீமாம்சையைச் சொல்லலாம்.

பூர்வ மீமாம்சையின் அடிப்படையான கருத்துக்களில் ஒன்று ‘அபூர்வம்’ என்பது. ஒரு செயலைச் செய்தால் அதற்கான பயன் உண்டு என்பதும் அந்தப்பயன் செய்தவனும் செய்யப்பட்டவனும் இல்லாமலான நிலையில் கூட இருந்துகொண்டிருக்கும் என்றும் மீமாம்சகர் சொன்னார்கள். அவ்வாறு திகழும் செயல்பயனே அபூர்வம். இது வேள்விக்கருமங்களை விளக்கும் கருதுகோள்.  வேள்விகளின் மூலம் கிடைக்கும் ‘பயன்’ அல்லது ‘லாபம்’ எங்கோ ஓர் இடத்தில் இருந்து உரிய நேரத்தில் வந்து சேரும் என்று மீமாம்சம் சொன்னது

அபூர்வம் என்னும் கருத்து பிறவிவினை வாதத்துக்குச் சமானமானதாக சிலரால் இப்போது கொள்ளப்படுகிரது. அது பிழை. வேள்விசெய்தால் அதன் பயன் ஒருவனை அடுத்த பிறவியானாலும் வந்து சேரும் என்று பூர்வமீமாம்சம் தன் அபூர்வம் கோட்பாட்டில் சொல்கிறது என்பது உண்மை. ஆனால்  அது பிறவிவினைவாதம் அல்ல.

பிறவிவினைவாதம் என்பது ஒருவனின் எல்லா நன்மை தீமைகளும் அவன் முற்பிறவியில் செய்தவற்றின் விளைவுகளே என்கிறது. அபூர்வவாதம் ஒருவன் எந்தப்பிறவி எடுத்தாலும் வேள்விகள் செய்தால் அப்பிறவியிலேயே எல்லா மேன்மைகளையும் அடையலாம் என்கிறது. அசுரர்களும் ராட்சதர்களும்கூட வேள்விசெய்து பயன்பெற்றார்கள். அது சிலருக்கு வேள்விகளை தடைசெய்ததுகூட அவ்வேள்விகளை அவர்கள் செய்தால் தங்களை விட மேலே சென்று விடுவார்கள் என்பதனால்தான்.

பூர்வமீமாம்சத்தின் அபூர்வம் அல்லது வேள்விப்பயன் வாதத்துக்கு எதிராக வள்ளுவர் பிறவி வினை வாதத்தை முன்வைக்கிறார் என்றுதான் தன் உரையில் பரிமேலழகர் சொல்கிறார். அளவைவாத அடிபப்டையில் பார்க்காதே, முன்னைவினையின் பயன் என்ன என்பதை சிவிகை சுமப்பவனையும் ஏறுபவனையும் கண்ணால் பார்த்தாலே தெரிகிறதே என்பதுதான் குறளின் பொருள் என்கிறார் அவர். இந்த விவாதம் சமணத்துக்கும் சைவத்துக்கும் நடுவே அக்காலத்தில் தீவிரமாக நடந்த ஒன்று.

வள்ளுவர் அப்படிச் சொல்கிறாரா , அது உண்மையா என்பது வேறு விஷயம். ஆனால் நம் பிற்கால உரைக்காரர்களுக்கு அளவைவாதம் என்றால் என்னவென்றே தெரியாததன் விளைவே அவர்களின் எளிமையான புரிதல். இன்று வரை ஒரு தட்டையான வரியை இக்குறளின் பொருள் என்று கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

உரைகளுக்குள் போகாமல் ஒரு நவீன வாசகன் வாசிப்பானாகில் அவனுக்குக் கிடைப்பவை இரண்டு விஷயங்கள். ஒன்று இவ்வரிகளின் சொற்கள். இப்பிரதி. இரண்டு திருவள்ளுவர் சமணராக இருந்திருக்கக் கூடும் என்ற ஊகம். இவ்விரண்டின் அடிப்படையில் அவன் தன் வாசிப்பை நிகழ்த்தலாம். நான் செய்திருப்பது அதைத்தான்.

சமணர்களுக்கு பிறவிப்பயன் என்பது முக்கியமான கோட்பாடு. இப்பிறவியில்  அடையும் நன்மைகள் எல்லாம் முற்பிறவிப்பயனே என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால்  சமணம் தமிழகத்தில் ஒரு பெரிய விடுவிக்கும் சக்தியாக வந்த ஒன்று. அதை சிரமண மதம் என்று சொன்னார்கள். உழைப்பவர்களின் மதம். அந்நிலையில் பல்லக்கு சுமப்பதை மாற்றமுடியாத விதி என்றா அது சொல்லியிருக்கும்?

அவ்வரிகளைப் பார்க்கும்போது ‘அறத்தின் வழி இது என்று நினைத்தல் வேண்டாம்’ என்கிறார் வள்ளுவர். யாருடன்? ‘இதுவே அறத்தின் மாற்றமில்லா வழி’ என்று நம்புகிறவர்களிடம் தானே. அப்படியானால் மாற்றம் உண்டு என்பதைத்தானே அவர் சொல்கிறார்? அவ்வரிகள் அளிக்கும் பொருள் அதுதானே? சிவிகை பொறுப்பவனுக்கும் ஊர்பவனுக்கும் நடுவே உள்ள வழியே அறத்தின் வழி என்று எண்ணவேண்டாம் என்பதே அக்குறள் என்பதுதான் கவிதையின் தரிசனம் என்பதே என் வாசிப்பு

ஜெ 

பொருள்மயக்கம் என்பது இன்றுள்ள ஓர் இயல்பு அல்ல, எல்லா காலத்திலும் இலக்கியத்தின் அழகியலாகவே உள்ளது. குறுந்தொகை நற்றிணை பாடல்கள் குறள்பாடல்கள் பல அற்புதமான பொருள்மயக்கங்களுடன் உள்ளன. பல நூறு ஆண்டுகளாக அவற்றுக்கு மீண்டும் மீண்டும் உரைகள் எழுதப்படுகின்றன. எவ்வளவு உரைகள் எழுதப்பட்டபின்னரும் அவற்றின் பொருள்மயக்கம் புதிய சிந்தனைகளை உருவாக்கியபடி நீடிக்கத்தான் செய்கிறது

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை.

இந்த ஒரு குறளுக்கு மட்டும் எத்தனை வகையாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது என்று நோக்கினால் எம்ப்சன் என்ன சொல்கிரார் என்று புரியும். ‘பல்லக்கில் செல்பவன் சுமப்பவன் இருவரையும் வைத்து அறத்தின் வழி இதுவே என நினைக்கவேண்டாம்’ இவ்வளவுதான் குறள். இது முற்பிறப்பின் வினைப்பயனைச் சொல்வது என்பது பரிமேலழகர் கூற்று. சமண ஊழ்வினையைச் சொல்கிறது என்பது நச்சினார்க்கினியர் உரை

இப்போதுள்ள இதுவே அறத்தின் எப்போதுமுள்ள வழி என்று நினைக்காதே வண்டியும் ஓர்நாள் ஓடத்தில் ஏறும் என்றுதான் வள்ளுவர் சொல்கிறார் என்றே நான் வாசிக்கிறேன். இன்னும் பல வாசிப்புகளுக்கு இதிலே இடமுள்ளது. இன்னும் இன்னும் சிந்திக்கச் செய்கிறது இந்தக்குறள்.

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன்
அறம் என்றால் தெரியும். தர்மம். உலக மகா நற்செயல். காலம் மாறினும் கோலம் மாறினும் கொள்கை மாறினும் நன்மைக்கு எதிரான விளைவைத் தராத அருட்பணி. புண்ணியம். உயிருக்கு இதமளிக்கும் நல்வினை. 

ஆறு என்றால் என்னவென்று பார்ப்போம். ஆறு என்பதற்கு ’நதி, வழி, பக்கம், பயன், சூழ்ச்சி, விதம், இயல்பு’ எனப் பொருள்கள் பல. 

அறத்தாறு என்பதற்கு அறத்தின் வழி, அறத்தின் பயன், அறத்தின் சூழ்ச்சி, அறத்தின் இயல்பு என்றுள்ளவற்றில் எதைக் கருதுவது ? குறள்தொடர்ந்து ஒரு முடிவுக்கு வரவுள்ளோம். 

அறத்தாறு இதுவென வேண்டா. சிவிகை என்றால் பல்லக்கு. சிவிகை பொறுத்தான்’ என்றால் பல்லக்கைச் சுமப்பவன். ஊர்ந்தான் என்றால் அதில் பயணிப்பவன். ஊர்ந்ததால் வண்டிகளை ஊர்திகள் என்கிறோம். கடைசிச் சீர் இடை. 

ஒருவன் பல்லக்கில் அமர்ந்து இன்பமாகச் செல்கிறான். மற்றவர்கள் அந்தப் பல்லக்கைச் சுமந்து செல்கிறார்கள். இங்கே மேலும் பொருள் துலக்கத்திற்குத் துணையாக அதிகாரத்தின் பெயரையும் பார்க்கவேண்டும். அறன் வலியுறுத்தல். அறத்தை வலியுறுத்திப் பேசுகின்ற குறள்கள். அப்படியென்றால் இக்குறள் அறத்தின் மேன்மை குறித்து வலியுறுத்தி அழுத்தந்திருத்தமாக எதையோ சொல்ல வருகிறது. அல்லது அறத்தை வலியுறுத்தி எங்கெங்கு எப்படியெப்படிப் பேசலாம் என்பதைப் பற்றி விளக்க வருகிறது.

நமக்கு இன்று தோன்றுகிற கேள்வி இது. ஒருவன் ஒய்யாரமாக அமர்ந்திருக்க அதை நால்வர் தோள்களில் விதிர்விதிர்க்கச் சுமந்து செல்வதா ? இது என்ன நியாயம் ? இது என்ன அறம் ? 

ஒருவேளை இதுதான் அறத்தின் பயனோ ? இதுதான் அறத்தின் வழியோ ? இது அறத்தின் சூழ்ச்சியோ ? இல்லை இல்லை இல்லை. இதுவென வேண்டா. இது அறமில்லை என்கிறார் வள்ளுவர். 

தன்னை நால்வர் சுமந்து செல்ல அதில் ஒய்யாரமாக அமர்ந்து செல்பவனிடம் சென்று ‘இது அறமில்லை... இது அறம் நல்கும் செயலில்லை’ என்று சொல்லாதீர். சொன்னால் தன் மூர்க்கத்தைக் காட்டுவான். அதிகாரத்தைக் காட்டுவான். அவனுக்கும் அறத்திற்கும் தொடர்பில்லை. 

சுமந்துசெல்கிறானே அவனிடம் சொல்லலாமா ? அவனிடமும் சொல்லக் கூடாது. ஏன் ? அவன் அறத்திற்கு எதிராக என்ன செய்தான் ? அவன் அப்பாவி அல்லவா ? அவனிடம் அறம் போதிக்கலாகாதா ? கூடாது என்கிறார் வள்ளுவர். பல்லக்கில் செல்பவன் மூர்க்கன், அவனிடம் அறம் போதிக்க வேண்டா’ என்பது புரிகிறது. சுமப்பவன் என்ன பாவம் செய்தான் ? 

அதற்கு நான் கருதும் பொருள் : அவன் எற்கனவே சுமக்க முடியாமல் சுமந்து செல்கிறவன். அவன் தோள்கள் பழுத்திருக்கின்றன. மூச்சு இறைக்கிறது. கால்கள் துவண்டுள்ளன. அவனருகே நீ உன் போதனைகளோடு செல்லாதே. பதிலாக, அவன்படும் துன்பத்திற்கு நீயும் தோள்கொடு. அவன்படும் பாடுகளில் பங்குகொள். அவனிடம் அறம் தர்மம் புண்ணியம் அது இது என்று எதையும் கூறாதே. உன் செயல்வழியே உதவு. சொற்களைக் குறை. அவன் விடுதலைக்கு உதவு. 

தற்காலத்தைப் பார்ப்போம் ! நாம் தாங்க முடியாத துன்பங்களில் உழன்றுகொண்டிருக்கிறோம், நம் மீட்பராகத் தங்களைக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் போதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள், அல்லவா ?

இப்பொழுது பொருள் திரட்டுகிறேன், பாருங்கள் !
‘பல்லக்கில் அமர்ந்து செல்கின்றவனிடமும் அதைச் சுமந்து செல்கின்றவனிடமும் இடையே போய் அறத்திற்கான வழிகள் இவை என்று வலியுறுத்திக்கொண்டிராதே.’ 
 அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
பொறுத்தானோ(டு) ஊர்ந்தான் இடை. 
ஏன் என்பதற்கான காரணத்தைத் தெளிவாக விளக்கவல்லவனே நல்ல உரையாசிரியன்.

ஒப்புமை
“சிவிகை பொறுத்தார் எனத் திருத்தினாரும் உளர்” (இ.கொ.சூ. 130)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறத்து ஆறு இது என வேண்டா - அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை - சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும். (பயனை 'ஆறு' என்றார், பின்னது ஆகலின். 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது. தன்னானே உணரப்படும். (பயனை 'ஆறு' என்றார், பின்னது ஆகலின் 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தாணோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம், உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது.

மணக்குடவர் உரை
நீங்கள் அறநெறி யித்தன்மைத்தென் றறிய வேண்டா, சிவிகைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காணலாம். இது பொன்றினாலுந் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று.

மு.வரதராசனார் உரை
பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

சாலமன் பாப்பையா உரை
அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல்

குறள் 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
[அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்]

பொருள்
அழுக்காறு - பிறர்ஆக்கம்பொறாமை; மனத்தழுக்கு

அவா - எனக்குஇதுவேண்டும்என்னும்எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.

வெகுளி - சினம்; வெறுப்பு; கபடமற்றவர்.

இன்னாச்  - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

நான்கும் - ஆகிய நான்கும் 

இழுக்காறு - தீநெறி, தீயொழுக்கம்

இழுக்கா - இழக்காமல் 

இயன்றது - இயற்றுதல் - செய்தல்; நடத்துதல் சம்பாதித்தல் தோற்றுவித்தல் நூல்செய்தல்.

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

முழுப்பொருள்
1) அழுக்காறு - பிறர் பொருள்களின் மீதும் ஆக்கங்களின் மீதும் வளர்ச்சியின் மீதும் பொறாமை
2) அவா - ஆசை, பேராசை; நம் புலன்களின் வழியே செல்லும் ஆசைகளில் / விருப்பங்களில் மூழ்குதல்
3) வெகுளி - கோபம், பிறர் மீது வெறுப்பு 
4) இன்னாச்சொல் - கீழ்மையான சொற்கள், துன்பத்தை தரும் சொற்கள், தீங்கு விளைவிக்கும் சொற்கள்; பிறர் மனதை காயப்படுத்தும் சொற்கள் 

மேற்சொன்ன நான்கும் தீயொழுக்கத்தை விளைவிக்கும். ஆதலால் இவை எதையும் பின்பற்றாமல் இவற்றை விலக்கிவிட்டு நாம் நமது வாழ்வை நடத்திச்சென்றால் அது நம்மை அறவழியில் கொண்டுசெல்லும். இவற்றை விலக்குவதும் அறமாகும் (ஒரு விதத்தில் கடமையாகும்). 

ஒப்புமை
“அழுக்காறு அவா முதலியவற்றைக் கைவிட்டு அறநூல்
முதலியவற்றை அறிந்து” (சிலப் 10:16, அடியார்)
“பொய்குறளை வௌவல் அழுக்காறு இவைநான்கும்
ஐயந்தீர் காட்சியார் சிந்தியார்” (ஆசாரக் 38)
“அச்சம் வெகுளி அவாஅழுக்கா றிங்ஙனே மாண்டன்” (பொன்வண்ணத் 99)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா - புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி - அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்- அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம் - இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது. (இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ்சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும். பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்குமென்று கூறிய அறம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.

Thirukkural - Management - Thoughts
Valluvar recommends through Kural 35 to keep away from the four vices to become a virtuous person. The vices are:
1) Envy — longing for things that belong to others 2) Greed — to have more, 3) Anger, and 4) Abusive words.

Envy, greed, wrath and harsh words- 
These four avoided is virtue.

A person cannot be virtuous if he desires for things that belong to others. Remember the philosophical question. ‘How much is enough?' There is no ceiling for our desires.  Whatever the other person has is more attractive. We always long for more. Longing for a thing that someone possesses leads to frustrations.

Greed makes a person lose his virtuous quality. We cannot be content when we are greedy. When greed stops, grace begins. When greed stops, peace begins. A person, after giving up greed, becomes peaceful with himself. Many people  have lost their names, popularity, and recognition just because of their greed.

ஒல்லும் வகையான் அறவினை

குறள் 33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
[அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்]

பொருள்
ஒல்லும் - ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல்.

வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

வகை-தல் - vakai-   4 v. வகை. intr.To be divided; பிரிவுபடுதல்.--tr. 1. To arrange a subject; வகைப்படுத்துதல். மந்தரை பின்னரும்வகைந்து கூறுவாள் (கம்பரா. மந்தரை. 60). 2. To divide; to cut; வகிர்தல். வாளை யீர்ந்தடி வல்லிதின்வகைஇ (நற். 120). 3. [T. vagatsu.] To consider,weigh; ஆராய்தல். நகர்நீ தவிர்வாயெனவும் வகையாது தொடர்ந்து (கம்பரா. பிராட்டி. 16).

வகையான் - வழிகளில் / முறை எல்லாம் ஒருவன்

அறன் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

வினை - வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

அறவினை - நேர்மையான தொழில்

ஓவுதல் - ஒழிதல், நீங்குதல்; நீக்குதல்; முடிதல்.

ஓவாதே - நீங்காது

செல்லும் - செல்லுதல் -நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.

எல்லாம் - முழுதும்

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு

முழுப்பொருள்
ஒல்லுதல் என்றால் இயன்ற என்று பொருள். ஒல்லுதல் என்றால் விரைதல் என்றும் பொருள். மற்ற பொருள்களும் உண்டு. இவ்விரண்டையும் நாம் எடுத்துக்கொள்வோம் இங்கு.

வகை என்றால் முறை அல்லது வழி என்ற பொருள்களை எடுத்துக்கொள்வோம்.

இயன்ற வழிகளில் (முறைகளில்) எல்லாம் அறவழியில் (நேர்மையான வழியில்) நீங்காமல் எந்த காரணமும் இன்றி எல்லா புலன்களின் மூலமாகவும் செயலை செய்க. அதாவது எந்த வித நொண்டி சாக்கும் சொல்லாமல் எல்லா நேரங்களிலும் எல்லா முறையிலும் எல்லா புலன்களாலும் அறவழியில் செயல்களை செய்க. ஒல்லுதல் என்றால் விரைதல் என்ற பொருளும் உண்டு. ஆதலால் காலம் தாழ்த்தாது அறச்செயல்களை செய்க என்றும் நாம் கொள்ளலாம். காலத்தில் செய்யாத செயல் தகுந்த பலனை தராது.

ஒருவர் திருக்குறளை கற்றுக்கொண்டு வெறுமென அறிந்துக்கொண்டே இருப்பதால் ஒருபயனும் இல்லை. எல்லா செயல்களிலும் எல்லா நேரங்களிலும் அறத்தைப் பின்பற்றி வாழ்வதே சிறந்தது. செயல் மூன்றுவகைப்படும் - மனதால், சொல்லால், (உடம்பால்) செயலால். ஆதலால் மூன்று வகையிலும் அறம் செய். (Do your duties by by thoughts, words, deeds with integrity)

‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்ற தொன்மொழி ஒன்றுண்டு. இது, ராவணனுக்கு சீதை பிச்சையளித்ததையும், அதனால் நிகழ்ந்த பின் விளைவுகளையும் மனதில் கொண்டு சொல்லப்பட்டது.  மேலோட்டமாகப் பார்த்தால், அவள் செய்த நல்ல காரியமே அவளுக்கு துன்பச் சிறையை தந்து ராமனிடமிருந்து பிரிவையும் தந்தது. ஆனால் அவள் அறவழி நின்றதாலேயே  ராவாணசுர அழிவு என்கிற நல்லதும் நடந்தது என்ற உண்மையே நம் உள்ளத்தில் தைக்கவேண்டும்.  அதனால் சில சமயங்களில் அறன்வழிகளால், உடன்வரும் துன்பங்களால் துவளாதிருந்தால், முடிவில் நல்லதே நடக்கும் என்பதன் கருத்தே இது.

ஒப்புமை
“ஒல்லும் வகையான், மருவுமின்  மாண்டார் அறம்” (நாலடி 36)
“இம்மி அரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இசைவ கொடுத்துண்மின்”  (நாலடி 94)
“மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமா றிசைவ கொடுத்தல்”  (நாலடி 95)
“எத்துணை யானும் இயன்ற அளவினால்
சிற்றறம் செய்தார் தலைப்படுவர்”  (நாலடி 272)

“ஆற்றுந் துணையால் அறஞ்செய்க முன்னினிதே” (இனியவை 7)
“ஆற்றும் துணையும் அறஞ்செய்க” 
“ஒன்றும் வகையால் அறஞ்செய்க” (பழமொழி 137, 303)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒல்லும் வகையான் - தத்தமக்கு இயலுந்திறத்தான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் - அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க. (இயலுந்திறம் ஆவது - இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தமக்கியலுந் திறத்தானே, அறவினையை ஒழியாதே செய்யலாமிடமெல்லாஞ் செய்க. இயலுந்திறமென்பது மனமொழிமெய்களும் பொருளும். செல்லும்வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாகிய பல விடங்களும் ஒழியாதென்றது நாடோறு மென்றது. இஃது அறம் வலி தென்றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது.

மு.வரதராசனார் உரை
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை

குறள் 32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை 
மறத்தலின் ஊங்கில்லை கேடு
[அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அறத்தின் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

ஊ - ஆறாம்உயிரெழுத்து; நெட்டுயிரெழுத்துள்ஒன்று; வினையெச்சவிகுதியுள்ஒன்று; ஓரொலிக்குறிப்பு; 'கைக்கிளை'என்னும்இசையின்எழுத்து; ஊன், இறைச்சி; உணவு.

உங்கு - uṅku   adv. உ&sup4;. Yonder, where theperson spoken to is; உவ்விடம். (கந்தபு. உமைவரு.31.).

ஊஉங்கு

ஆக்கமும் - ஆக்கம் - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

இல்லை - illai   fin. v. இல்². No; உண்டென்பதன் எதிர்மறை

அதனை

மறத்தலின் - அயர்த்தல்; அசட்டைபண்ணல்; ஒழிதல்; நினைவின்றிப்போதல்; பொச்சாப்பு.

ஊங்கு - சிறந்தது; மிகுதி; முன்; உவ்விடம்; விசேடம்

இல்லை - illai   fin. v. இல்². No; உண்டென்பதன் எதிர்மறை

கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

முழுப்பொருள்
வாழ்வில் ஒருவர் (நீது நூல்கள் சொன்னபடியான) அறம் தனை பின்பற்றி வாழ்வதுப்போல உயர்ச்சியும் (செல்வமும்) தருவது வேறு ஏதுமில்லை. அறம் மிக மிக உயர்வான ஒன்று, வாழ்விற்கான முதல் அடிப்படையாகும்.

அதேப்போல, இவ்வாழ்வில் அறம் தனை மறத்தல் (அறத்திற்கு புறம்பாக நடத்தல். அறம் அல்லாத செயல்களை செய்தல்) போன்ற மிகுந்த கேடு விளைவிக்கும் பிறிதொரு செயல் வேறு ஏதுமில்லை. ஒருவன் மயக்கத்தால் அறத்தை மறப்பான் என்று பரிமேலழகர் கூறுகிறார். மயக்கம் அல்லாமல் இருக்க ஒருவர் மனவடக்கத்தை பேணவேண்டும்.

ஆக வாழ்வில் அறம் தனை பின்பற்றுவது ஒருவனுக்கு ஒரு தேர்வு/விருப்பம் (choice/option) அல்ல. அது ஒரு அடிப்படை நியதியாகும். அதிலிருந்து வழுதால் வாழ்வில் கேடே பெருகும். அதுவே அறத்தில் இருந்து வழுவாதிருந்தால் உயர்ச்சி கிடைக்கும்.

ஒப்புமை
1. வாழியாய் கேட்டியால் வாழ்வு கைம்மிக
ஊழிகாண் குறுநின துயிரை யோர்கிலாய்
கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ
வாழ்மைதான் அறம்பிழைத் தவர்க்கு மாகுமோ (கம்ப.வீடணன்.11)

2. “அளவிலா அறத்தின் மிக்க தியாதுமற் றில்லை யன்றே” (நரிவிருத்தம் 14)
“ஆயிவினை யுடைய ராகி  யறம்பிழை யாதார்க் கெல்லாம்
ஏய்வன நலனே யன்றி யிறுதிவந் தடைவ துண்டோ?” (கம்ப.வருணனை.80)
“ஆன்றநல் லறத்தைப் போலும் அரியதொன் றில்லை யென்றான்” (மேருமந்தர.747)

3.”அறமுனக் கஞ்சியின் றொளித்த தாலதன்
திறமுனம் உழத்தலின் வலியும் செல்வமும்
நிறமுனக் களித்ததங் கதனை நீக்கிநீ
இறமுனங் கியாருனை எடுத்து நாட்டுவார்” (கம்ப. கும்பகருணன். 84)
“அறத்தினூங் காக்க மில்லை என்பதும் இதனை ஆய்ந்து
மறத்தினூங் கில்லை கேடும் என்பதும் மதித்து” (மேருமந்தர 747)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. ('அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை. இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.

English Meaning - As I taught a kid - Rajesh
There is nothing like Dharma/Aram (1) being honest 2) doing the right things as per scriptures, books 3)doing your duties/ responsibilities) which would yield results/ productivity/ success/ growth/ greatness/ reputation/ respect etc. Similarly there is nothing like forgetting (and not following) Dharma/ Aram that ends up destruction/ failure. So, understanding the pros of following Dharma and the cons of not following Dharma, one should follow Dharma/Aram, do their duties in the right way and grow in life.

Questions that I ask to the kid
1) What yields true results / productivity / growth / greatness?
2) What if one forgets dharma?
3) What is the worst thing one can do /forget that leads to destruction/failure?

மனத்துக்கண் மாசிலன் ஆதல்

குறள் 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
[அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்]
(For English meaning scroll to the bottom of this post)

பொருள்
மனது மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
மனத்துக்கண் - மனதின் கண்; மனசாட்சி
மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.
இலன் - இல்லை என்று
ஆதல் - ஆகுதல்
அனைத்து - மற்ற அனைத்து 
அறன் - ஆபரணங்கள்,
ஆகுல - ஆகுலம் - மனக்கலக்கம்; ஆரவாரம் (பேரொலி; பகட்டு துன்பம்)
நீர - nīra   s. (pl.) (நீர்மை) those which have properties, குணத்தையுடையன.
பிற - மற்றவை

முழுப்பொருள்
வாழ்வில் ஒருவன் வெளியே உள்ள நீதிமன்றங்களில் தன்னை நல்லவன் என்று நிருபிக்கலாம். நம்மை முழுவதும் அறிந்த நமது வீட்டு மனிதர்களைக் கூட ஏமாற்றி நல்லவன் என்று காட்டிக்கொள்ளலாம். ஒருவேளை தவறு என்று நிருபிக்கப்பட்டால் கூட வெளியே தப்பித்து செல்லலாம்.

ஆனால் தன்னுடைய சொந்த மனசாட்சியில் அது நடக்காது. தன் மனதிற்கு தெரியும் தான் செய்தது தவறா நன்றா என்று. எங்கு ஓடினாலும் மனதில் இருந்து தப்பவே முடியாது. ஆதலால் தான் திருவள்ளுவர் சொல்லுகிறார் தன் மனதிற்கு மாசு இல்லை என்று தெரிந்தால் அதுவே அனைத்திலும் சிறந்த அறம். மற்ற அனைத்தும் தேவையில்லாத ஆபரணங்களே. மற்ற அனைத்தும் வெறும் சத்தமே.

புற வாழ்க்கையை மேன்படுத்துவதைவிட அக வாழ்க்கையை மேன்படுத்துவது மிக மிக அவசியம். அகவாழ்க்கை சீரானால் புறவாழ்க்கை தானாக சீராகும் அகவாழ்க்கையில் மேன்மை உயர்வை தரும். ஆதலால் குழந்தைகளுக்கு சிறிய வயதில் அறத்தை விதைத்தால் அவர்களின் வாழ்வு மேன்மை பெற நல்ல தொடக்கமாக அமையும்.

ஒருவரின் ஆத்மசக்தி/ஆதம்ஷக்தி மனம் தூய்மையாக இருக்கும்பொழுது வரும். ஒருவரின் ஆத்மசக்தி ஒருவரை தீயவழிகளில் இருந்து விலக்கியோ அல்லது சீக்கிரமாக மீட்டெடுத்தோ நல்வழியில் செலுத்தும். ஆனால் அதற்கு மனதில் நல்லெண்ணங்களை விதைக்கவேண்டும். 

மனதை தூய்மையாக வைத்துக்கொள்வதே ஒருவரின் அறம். தூய்மையான மனமே உண்மையான ஆபர்ணம். மற்றவையெல்லாம் வெற்று சத்தங்களே.

இந்த கடைசி வரி ‘ஆகுல நிர பிற’ (மற்ற அனைத்தும் சத்தமே, மற்றவை எல்லாம் வெற்று ஆபர்ணங்களே) தனை பல இடங்களில் நாம் மனதில் சொல்லிக்கொண்டால் எளிய விஷயங்களை அற்ப விஷயங்களை நாம் கடந்து செல்லலாம்.

திருவள்ளுவர் பல இடங்களில் இதனை ஒட்டிய பொருளை கூறி உள்ளார். உதாரணமாக:
குறள் 293
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்




மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் - அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அனைத்து அறன் - அவ்வளவே அறம் ஆவது; பிற ஆகுலநீர - அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா, ஆரவார நீர்மைய; (குற்றம் - தீயன சிந்தித்தல். பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், 'ஆகுல நீர' என்றார். மனத்து மாசுடையான் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் - ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே அறமாவது; பிற ஆகுல நீர - மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன.

மனம் தூய்மையாயிருப்பின் அதன் வழிப்பட்ட முக்கரண வினைகளும் தூய்மையாயிருக்குமாதலின், மாசிலா மனமே அறத்திற்கு அடிப்படை என்றவாறு. மனம் தூயதாயிருப்பின் வெளிக்கோலம் வேண்டாததாயும், தீயதாயிருப்பின் வெளிக்கோலம் பிறரை ஏமாற்றுவதாயுமிருத்தலின், இருவழியும் பயனின்மை நோக்கி வெளிக் கோலத்தை வீண் ஆரவாரமென்றார். 'ஆதல்' வியங்கோளுமாம்.

மணக்குடவர் உரை
ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய. பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று. மேல் நான்கு பொருளைக் கடியவேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார்

மு.வரதராசனார் உரை
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

சாலமன் பாப்பையா உரை
மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: மனத்துக்கண் மாசு இலன் ஆவது அனைத்து(ம்) அறன் ‡ உள்ளத்தின்கண் குற்றம் இல்லாதவனாய்ச் செய்யப்படுவது அனைத்தும் அறமாம்; பிற ஆகுல நீர‡ மனத்துக்கண் குற்ற முள்ள வனாய்ச் செய்யப் படுவன துன்பம் தருவன(வாகிய மறங்களாம்).

அகலம்: அனைத்தும் என்பதன் முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. தாமத்தர் பாடம் நீர்மை. மற்றை உரையாசிரியர்கள் நால்வர் பாடம் ‘மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன்’. அதற்கு அவர்களுரை, (அறஞ்செய்வான்) தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆகுக. அவ்வளவே அறம்.(ஒருவன் தன்) மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆதல் ஓர் ஒழுக்கம் ஆகுமே யன்றி அறமாகாது. என்னை? அறம் என்பது ஓர் உயிர்க்கு நன்மை பயக்கும் ஒரு செயல். அது பற்றியே, ஆசிரியர் ‘அறவினையோவாதே செல்லும் வாயயல்லாஞ் செயல்’, ‘அன்றறிவாமென்னா தறஞ் செய்க’, ‘வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின்’, ‘செயற்பால தோறும் அறனே’ என்று கூறியுள்ளார். அன்றியும், ‘மனத்தின்கண் மாசிலனாதலே அறம்’ என்று கூறின், பற்றுள்ள முடையார் ஈகை முதலிய அறங்களைச் செய்யாது விடுதற்கு அக்கூற்றை ஒரு மேற்கோளாக எடுத்துக்காட்ட முற்படுவர். நன்று புரியாமைக்கு மேற்கோளாக எடுத்துக் காட்ட உதவும் ஒரு வகை மனோ நிலையை அறம் என்று ஆசிரியர் கூறார். ஆகலான், ‘மாசில னாத லனைத்தறன்’ என்பது ஏடு பெயர்த்தெழுதியோனால், அல்லது கால அளவில் சிதைந்துபோய்ப் பின்னர் ஊகித்து எழுதப்பட்ட வற்றால் நேர்ந்த பிழை எனக் கொள்க.

கருத்து: குற்றம் அற்ற மனத்தோடு செய்யப்பட்ட வினைகளெல்லாம் அறமாம்.


Thirukkural - Management - Thoughts
A spotless, nonviolent, positive, pure, and immaculate thought is the symbol of righteousness. If a person is pure internally, his external actions will be virtuous, asserts Kural 34. This is also the quality of righteousness. If a person's thoughts are lofty, the other things become secondary.

A spotless mind is virtue's sum
All else is empty noise.

If our thoughts are negative and our acts are apparently positive, those apparently positive acts are considered exhibitionism. That is sheer pretension. When there is incongruity between our thoughts and our actions, others can read our thoughts since we cannot hide our thoughts. Face is the index of mind is still true.

English Meaning - As I taught a kid - Rajesh
One can hide from their friends and family but they can never hide from their conscience. They should always do what their conscience thinks is right.  Rest are all noise. One can prove himself correct to the external court. One can act like a nice person in front of his family, friends and relatives. Even if caught, one can escape or plea for pardon. However, One can never escape the court inside a person's heart. 

So, if one doesn't have wrong or impure thoughts in mind, then that is Truth / Modesty / Moral. Rest of the honorable tiles, wealth  etc. are all just glittering jewels of no value. The key word here is ஆகுல நீர பிற - rest of things are just noise. We should be true to our heart. Our thoughts, efforts, deeds should be Truthful.

Questions that I ask to the kid
From whom you cannot escape when you did a mistake? Why?