Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

குறள் 94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]

பொருள்
உறு - uṟu   adj. உறு-. Much, abundant,copious; மிக்க உறு . . . மிகுதி செய்யும் பொருள் (தொல். சொல் 301).  

துன்புறூஉம் -  துன்பத்தை மிகுவிக்கும்; துன்பத்தை அதிகரிக்கும்

துவ்வாமை - tuvvāmai   n. id. + id. +. 1.Non-eating, non-enjoyment; நுகராமை. துவ்வாமை வந்தக்கடை (கலித். 22). 2. Poverty, indigence; வறுமை துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும்(குறள், 94). 3. Absence of desire; வேண்டாமை (அக. நி ) 4. Disgust, dislike; வெறுப்பு (W.)  

இல்லாகும் - இல்லாமல் போகும்; இல்லாதொழியும்

யார்மாட்டும் - யாரிடத்திலும் (பரிமேலழகர்: வலியார், ஒப்பார், எளியார்)

இன்பம் - iṉpam   n. இனி-மை. [M. inbam.]1. Delight, joy, happiness; அகமகிழ்ச்சி (திவா.)2. Sweetness, pleasantness; இனிமை (மதுரைக். 16.) 3. Sensual enjoyment, sexual love;காமம். அறம் பொருளின்பம் (குறள், 501). 4. Marriage; கலியாணம் கொம்பனையாளையும் . . . குன்றனையானையும் . . . இன்பமின்யற்றினார் (சீவக. 1980). 5.Sweetness of subject matter and of style anddiction, a merit of poetic composition; சொல்லினும் பொருளினுஞ் சுவைபடுவதாகிய குணம் (தண்டி.18.)  

இன்புறூஉம் -இன்பம் மிகும்; இன்பம் அதிகரிக்கும்

இன்சொல் - இனிமையான சொல் - இனிமைபயக்கும்சொல், iṉ-col   n. id. +. Pleasantspeech, kind word, courteous language, compliment, opp. to வன்சொல் பிரியவசனம் இன்சொ லினிதீன்றல் (குறள், 99).  

இன்சொலவர்க்கு -  இன்சொல் சொல்பவர்க்கு

முழுப்பொருள்
(வலியார், ஒப்பார், எளியார் உட்பட) எல்லோரிடத்திலும் இனிமையான சொற்களை, பிறருக்கு இனிமை பயக்கும் சொற்களை, அகமகிழ்ச்சி/மனமகிழ்ச்சித் தரக்கூடிய சொற்களை பேசுபவர்க்கு வாழ்வில் இன்பமே மிகும். அத்தகையவர்களுக்கு துன்பம் தரக்கூடிய துன்பத்தை அதிகரிக்கக்கூடிய துவ்வாமை எனப்படும் வறுமை, வெறுப்பு, பொறாமை ஆகியவை இல்லாமல் போகும் அழிந்துப்போகும். அதுவே மிக பெரிய வரமாகும்.

யோசித்துப்பார்த்தால் நாம் பிறரிடம் அன்புடன் பேசினால் பிறரும் நம்முடன் அன்புடன் பேசுவார்கள். அதுப்போல பிறரிடம் நேசத்துடன் அணுகினால் அவரும் நம்மை நேசத்துடன் அணுகுவார். எல்லாம் சுபிக்‌ஷமாய் இருக்கும். நாம் எதிர்மறையாக இல்லாமல் நேர்மறையாக இருந்தால் நம்மை சுற்றி எதிர்மறையாக இல்லாமல் நேர்மறையாக இருப்பர். அதுவே நம்மை சுற்றி துன்பம் குறைவதற்கும் இன்பம் பெறுகுவதற்கும் ஊற்றாக மாறும்.

நமக்கு வறுமை வந்தாலும் நம்மை சுற்றி உள்ள இன்சொல்லால் ஈட்டிய நண்பர்கள் நம்மை காப்பார்கள். நமக்கு செல்வம் கொடுத்தோ, அல்லது நமக்கு வருவாய் தரக்கூடிய வேலைகள் தந்தோ, நமக்கு வேலை வாங்கித் தரக்கூடியவர்களிடம் அறிமுகம் கொடுத்தோ, அல்லது ஆறுதல் கூறியோ நமக்கு உதவுவர். 

நாம் இன்சொல் பேசினால், நம் அன்பு பிறருக்கு புரியும். நம்மிடம் பொறாமை கொள்ளமாட்டார்கள். [குறிப்பாக நாம் வளர்ச்சி அடையும் போது எல்லாம் பிறரை உதாசீனம் செய்யாது அவரை நேசித்து பணிவுடன் நடந்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் பிறர் நம்மீது பொறாமை மற்றும் வெறுப்பு கொள்வர்]. பொறாமை இல்லை என்றால் அங்கே கசப்பு இல்லை. பொறாமை இல்லை என்றால் அங்கு வஞ்சகம் பிறக்காது. ஆதலால் அங்கு தீமையும், துன்பமும் பிறக்காது.

நாம் வெறுப்பாக பேசினால் எதிரியும் வெறுப்பாக பேசுவார், வெறுப்பும் வளரும். அதுவே நாம் இன்சொல் பேசினால், நம்மீது வெறுப்பு வளராது. இருவருக்கு இடையே பரஸ்பரம் வளரும். ஆதலால் துன்பம் குறைந்து இன்பம் வளரும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு - எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும் - துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். (நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' என்றார். 'யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேஆம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும். யாவர்மாட்டுங் கூற இன்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு.

மு.வரதராசனார் உரை
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.

Thirukkural - Management - Communication - Pleasant Speech
A person who always uses pleasing and empowering words when he speaks to and with others, will 
never have or experience painful poverty, assures Kural 94.

Want and sorrow shall never be theirs 
Who have a pleasant word for all.

Always uttering or using pleasing words with everyone will drive poverty away from the speaker and 
bring prosperity  to him. This can happen as a person's thoughts, words, and deeds are 
interconnected.

No comments:

Post a Comment