Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள்

குறள் 1001
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வைத்தான் - உரிமையாகக் கொள்ளுதல்

வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு

சான்ற - அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

பெரும் பொருள் - பெருஞ் செல்வம்

அஃது - அஃறிணை ஒருமைச்சுட்டு; அது அப்படி

உண்(ணு)-தல் - சாப்பிடுதல், உட்கொள்ளுதல், அனுபவித்தல், பொருந்துதல்,  ஒத்தல்

உண்ணான் - உண்ண மாட்டான், பொருந்த மாட்டான், அனுபவிக்க மாட்டான்

செத்தான் - இறந்தவன்
செயக்கிடந்தது - செல்வத்தால் செய்யக் கூடியது
இல் - ஒன்றுமில்லை

முழுப்பொருள்
ஒருவர் வாழ்வில் செல்வத்தினை ஈன்று அதனை உரிமையாக்கிக் கொள்வர். இச்செல்வம் இன்றோ நாளையோ பிறருக்கோ அவருக்கோ பயன்பெரும். ஆனால் அளவு கடந்த செல்வத்தினை தனது தேவைக்கு மேலே சேர்த்த செல்வத்தினை சேர்த்து வைப்பதில் பயனில்லை. ஏன் என்றால் அந்த செல்வத்தினை அவனால் உண்ண முடியாது. சேர்த்து என்ன பயன்? அவன் சேர்த்த செல்வத்தினை பயன் படுத்தாதவன் (தனக்கோ, பிறருக்க்கொ). ஆதலால் இறந்த பிறகு அந்த செல்வத்தால் அவனை மறுபடியும் உயிர்க்கொள்ள செய்ய முடியாது. அது போல அந்த செல்வத்தால் ஒரு பயனும் இல்லை. அது போல தேவைக்கு மேலே ஆன செல்வத்தினை, பயன் படுத்தாத செல்வத்தினை சேர்ப்பதில் பயனில்லை.

கி.வா.ஜ-வின் ஆய்வுப் பதிப்பிலே நாலடியார் பாடலொன்றும், பழமொழிப் பாடல்கள் இரண்டும் இக்குறளின் முற்றுக் கருத்தையும் கூறுவதாக மேற்கோள் காட்டியிருக்கிறார்.

கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் – இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும். (நாலடி 274)

பிறர்க்குத் கொடுப்பதையும், தான் அனுபவிப்பதையும் அறியாத உலோப குணமுடையவன் அடைந்த பெரும் செல்வமானது, வீட்டில் பிறந்த அழகிய கன்னிப் பெண்களைப் பருவ காலத்தில் பிறர் அனுபவிப்பது போல, அயலானால் அனுபவிக்கப்படும். அதாவது கஞ்சனின் செல்வத்தை அயலாரே அனுபவிப்பர். இப்பாடல் சொல்லும் கருத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட உவமை நயக்குறைவாகவும், ஓரளவில் முகத்தைச் சுளிக்கச் செய்வதாயும் உள்ளது, ஒரு வீட்டில் பிறந்த பெண்ணை பிறர் வீட்டுக்கு மணமுடித்து அனுப்பவது உலக வழக்கு. கன்னித்தன்மை நீங்குவதும் திருமண உறவில் ஒர் அங்கம். இதைவிட, “ஈயார் தேட்டை தீயார் கொள்வர்” என்னும் பொருள் பட எழுதியிருக்கலாம்.

முழங்குகின்ற அருவிகளையுடைய, மூங்கில் முதிர்ந்து முத்துக்களைக்கொட்டுகின்ற மலையை யுடையவனே!, பிறர்க்கீதலும், தான் அடைதலும் முதலியன அறியாதவன் கொண்டிருக்கின்ற முழக்குகின்ற முரசினை உடைய செல்வம், நாய்பெற்ற தேங்காயை அஃது ஒக்குமல்லவா? என்கிறது பழமொழிப்பாடல். அதாவது நாய்க்குக் கிடைத்த தேங்காயை அது உருட்டிக் கொண்டே அலையும்; தாமாக உடைத்துத் தின்னவும் அறியாது, பிறர் எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்காது. அப்பாடல்.

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம், – தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம். (பழமொழி 151)

“படரும் பிறப்பிற்கொன் றீயார் பொருளைத் 
தொடரும்தம் பற்றினால் வைத்திறப் பாரே
அடரும் பொழுதின்கண் இட்டுக் குடரொழிய
மீவேலி போக்கு பவர்” (பழமொழி 379)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
வாய்சான்ற பெரும்பொருள் வைத்தான் அஃது உண்ணான் - தன் மனை அகலமெல்லாம் நிறைதற்கு ஏதுவாய பெரும் பொருளை ஈட்டி வைத்து உலோபத்தால் அதனை உண்ணாதவன்; செத்தான் செயக்கிடந்தது இல் - உளனாயினும் செத்தானாம், அதன்கண் அவனால் செயக்கிடந்ததோர் உரிமை இன்மையான். ('வைத்தான்' என்பது முற்றெச்சம், உண்ணுதல்: அதனான் ஐம்புலன்களையும் நுகர்தல். 'வாய் சான்ற பெரும் பொருளை வைத்தானொருவன் அதனையுண்ணாது செத்த வழி. அதன்கண் அவனாற் செய்யக்கிடந்ததோர் உரிமையில்லையாகலான், வையாது பெற்றபொழுதே நுகர்க', என்று உரைப்பினும் அமையும், இதற்குச் 'செத்தான்' என்பது எச்சம். இதனால் ஈட்டியானுக்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வாய்சான்ற பெரும்பொருள் வைத்தான் அஃது உண்ணான் - தன் மனையிட மெல்லாம் நிறைதற்கேதுவான பெருஞ்செல்வத்தை ஈட்டிவைத்தும் ,கஞ்சத்தனத்தால் அதை நுகராதவன் , செத்தான் உடம்போ டுளனாயினும் செத்தவனாவன்; செயக்கிடந்தது இல் - அதைக்கொண்டு அவன் செய்யக் கிடந்ததொரு செயலுமில்லை.

செல்வமிருந்தும் அதை நுகராமையால் , செத்தவனுக்கு ஒப்பாவன் என்பது கருத்து. ' வைத்தான் ' முற்றெச்சம்.

"உண்ணா னொளிநிற னோங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ
இழந்தானென் றெண்ணப் படும்."

(நாலடி.9)

மணக்குடவர் உரை
இடம் நிறைந்த பெரும்பொருளை ஈட்டிவைத்தானொருவன் அதனை நுகரானாயின் செத்தான்; அவன் பின்பு செய்யக்கிடந்தது யாது மில்லை. இஃது ஈட்டினானாயினும் தானொருபயன் பெறானென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை

சாலமன் பாப்பையா உரை
தன் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைத்திருந்தும், கஞ்சத்தனத்தால் அதை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயன் இல்லை. ஆதலால் அவன் இருந்தாலும் இறந்தவனே.

English Meaning - As I taught a kid - Rajesh
A person can save his earnings and build assets that is required for his living, for his needs, family. But if a person accumulates enormous amount of wealth yet does not help others, then that wealth is considered useless. Because he cannot eat the wealth and after his death he cannot get back his life using that wealth. Hence, no point in accumulating a wealth that is neither useful for him nor for others.

Questions that I ask to the kid
When is enormous amount of wealth considered useless? Why?

No comments:

Post a Comment