Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இறைகாக்கும் வையகம் எல்லாம்

குறள் 547
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்
[பொருட்பால், அரசியல், செங்கோன்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இறை - உயரம்; தலை; கடவுள்; தலைவன்; அரசன்; உயர்ந்தோன்; மூத்தோன்; பெருமையிற்சிறந்தோன்; கணவன்; பறவையிறகு; கடன்; வீட்டிறப்பு; மறுமொழி; மணிக்கட்டு; குடியிறை; சிறுமை; அற்பம்; காலவிரைவு; சிவன்; பிரமன்; மாமரம்.
காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்.
காக்கும் - பாதுகாக்கும், அரசாளும்
வையகம் - மண்ணுலகம்; விலங்கு இழுக்கும் வண்டி; கூடாரவண்டி; சிவிகை; ஊர்தி; உரோகிணிநாள்.
எல்லாம் - அனைத்தும், முழுதும்
அவனை - அந்த தலைவனை, அரசனை
முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள் மாறி மாறி வேலை செய்யும் நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவு முறைப் பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு.
முறை - ஊழ், நீதி
காக்கும் - பாதுகாக்கும்,
முட்டு - விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை; தடை; தட்டுப்பாடு; சங்கடம்; குறைவு; உட்சென்று கடத்தலருமை; கண்டு முட்டுக்கேட்டு முட்டு முதலிய தீட்டுகள்; மாதவிடாய்; கருவி:சில்லறைப் பொருள்கள்; பற்றுக்கோடு; முழங்கால், முழங்கை, விரல்கள்இவற்றின்பொருத்து; மேடு; குவியல்.

முட்டு  - s. Want, difficulty, straits, ex tremity, இடுக்கண். 2. Battering; butting of a beast, முட்டுகை. 3. A prop, a sup port, தாங்கல். 4. Utensil, as தட்டுமுட்டு. 5. A blockade, an impediment, அடைப்பு. 6. [in combin.] A musical instrument, as நட்டுமுட்டு. 7. A bridle, கடிவாளம். 8. The knee, முழங்கால். 9. The menses of women, தொடக்கு. 1. (R.) Rising ground, மேடு. முட்டுற்றபோழ்தின். In the time of adver sity. (நாலடி.) எனக்குவெகுமுட்டாயிருக்கிறது. I am in great straits (for money).

முட்டாட்டம் - முட்டுகை; முட்டாள்தன்மை; செருக்கு.

முட்டாச்செயின் - தங்கு தடையில்லாமல், குறைவில்லாமல் செய்தால்

முழுப்பொருள்
ஒரு நாட்டின் அரசருக்கோ நிர்வாகத்தின் தலைவருக்கோ குடும்பத்தின் தலைவருக்கோ அரச/ நிர்வாக/ குடும்ப நியதியின்/ நெறியின் படி பல கடமைகள் உண்டு. அந்நெறிகளின் படி தடையில்லாமலும் எவ்வித குறையில்லாமலும் அனைத்து மக்களையும் காத்தலே தலைவனின் கடமை. அப்படி காத்தால் காத்தலின் ஊழாக (பயனாக, முறையாக) அந்த நல்ல விளைவுகளே அவனை காக்கும் என்கிறார் திருவள்ளுவர். 

இதனை நமது வேலைக்கு ஒப்பிடலாம், நாம் நமது வேலையை ஒழுங்காக செய்தால் நமது வேலை பறிப்போகாமல் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. நம்மை வேலையில் இருந்து விரட்டமாட்டார்கள். இக்கட்டான நேரங்களிலும் நல்ல வேலையாட்களை காப்பாற்ற நிர்வாகம் முயற்சி செய்யும். ஆனால் வேலையில் அலாதியாக இருந்தால் அவர்களையே முதலில் விரட்டுவார்கள். 

நம் குடும்பத்தை எடுத்துக்கொண்டால் தலைவன் தன் பிள்ளைகளை முறையாக அன்புடன் வளர்த்தால் கல்வி கொடுத்து வளர்த்தால் பின்பு பிள்ளைகள் தங்கள் சொந்த கால்களில் நிற்பர். நல்ல பிள்ளைகள் பெற்றோரின் முதுமையில் அவர்களை பேணிக் காப்பர்.

இதனை "செய்வன திருந்தச் செய்" என்கிறார் ஒளவையார்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வையகம் எல்லாம் இறை காக்கும் - வையகத்தை எல்லாம் அரசன் காக்கும், அவனை முறை காக்கும் - அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், முட்டாச் செயின் - அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின். (முட்டாமல் செலுத்தியவாறு: மகனை முறைசெய்தான் கண்ணும்(சிலப் 20:53-55 )தன் கை குறைத்தான் கண்ணும் (சிலப்,23: 42-53)காண்க. 'முட்டாது' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின்.

இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர்  உரை
வையகம் எல்லாம் இறை காக்கும் - உலகம் முழுவதையும் அரசன் காப்பான் ; முட்டாச் செயின் அவனை முறைகாக்கும் - முட்டுப்பாடு நேர்ந்த விடத்தும் முட்டில்லாது ஆட்சி செய்வானாயின், அவனை அவன் செங்கோலே காக்கும்.

முட்டில்லாமற் செய்தல் மனு முறைச் சோழன் தன்மகனை முறை செய்ததும், கொற்கைப் பாண்டியன் தன்கை குறைத்ததும் , போல்வதாம் . இனி, சிக்கலான வழக்குக்களைத் தீர்க்கும் வழியை இறைவனிடம் மன்றாடிக் கேட்டறிந்ததும் , முட்டாது செய்தலின் பாற்படும் . 'வையகம்' முதலாகுபெயர் . 'முட்டா' ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.

மு.வ உரை
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி
செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.

சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.

நன்றி: ரிஷ்வன்
அறம்போற்றி குடிகளை
நெறிமுறை வழுவாமல்
தினம்போற்றி காப்பானாயின்
குறைபடாத நீதி
அவனின் ஆட்சியை
முறையோடு காக்குமாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
A king / family head / organization's head / team's head protects all the world by doing his duties promptly and diligently without dissatisfaction/mistakes. Such a king / leader is protected by the justice that he dispenses resolutely i.e., the results of his dharma/duties will protect him. 

W.r.t our jobs/career, If we do our work diligently, most likely we won't loose our jobs (unless there is mass layoffs or recession). In difficult situations also our organizations, our managers will try to save us. In case we lose our job, we can get another job by show casing (or prove) our work in previous jobs.

Questions that I ask to the kid
What does a king/leader protect?
How a king is protected?

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க

குறள் 491
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தொடங்கு - தொடங்கல் - n. தொடங்கு-.[Tu. toḍagelu.] 1. Beginning; ஆரம்பிக்கை 2.First creation; ஆதிசிருட்டி 3. Attempt; செய்யமுயலுகை.
அற்க - எதிர்மறை ஏவலைக் குறிக்கும் ஒரு கடைநிலை.
தொடங்கற்க -  செயலை தொடங்காதே / துவங்காதே
வினை - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னை வினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக் குறிக்கும் குழூ உக்குறி.
எவ் வினையும் -  எந்த ஒரு செயலையும் தொழிலையும்
எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.
எள்ளற்க - செயலின் தன்மையையும் தெரியாமல் இகழலும் செய்யாதீர்
முற்று - முழுமை; முழுமையானது; முதிர்ச்சி; முடிவு; வினைமுற்று; காண்க:முற்றுகை
முற்றும் - முழுவதும் அறிந்து; இச்செயலை இப்படி செய்தால் இறுதியில் என்ன விளைவு வரும் அறிந்து
இடம் - தானம்; வாய்ப்பு; வீடு; காரணம்; வானம்; விரிவு; இடப்பக்கம்; அளவு; ஆடையின்அகலமுழம்; பொழுது; ஏற்றசமயம்; செல்வம்; வலிமை; மூவகையிடம்; படுக்கை; தூரம்; ஏழனுருபு; இராசி.
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
கண்டபின் - அறிந்த பின், ஆராய்ந்த பின்
அல்லது - தீவினை; தவிர.

முழுப்பொருள்
எந்த ஒரு செயலையும் முழுமையாக ஆராயாமல், செயலின் விளைவு (மற்றும் பக்க விளைவு) அறியாமல், செயலுக்கு தேவையான ஆயுத்தப்பணிகளை செய்யாமல், செயல் செவ்வன செய்வதற்கான இடத்தை அறியாமல், இடத்தின் தன்மை அறியாமல், செயலிற்கு இடத்தின் தன்மையறியாமல் துவங்காதே என்கிறார் திருவள்ளுவர். இங்கே இடத்திற்கு புறவயமான இடம் மட்டும் அல்லாமல் நேரம், செயல் செய்வதற்கு தேவையான வலிமை, தன்னுடைய வலிமை, எதிரியின் வலிமை, செல்வம் ஆகியவற்றும் அடங்கும். 

அதுமட்டும் அல்லாமல் எந்த ஒரு செயலையும் சிறிதாயினும் இகழாதே. ஒரு சிறிய விஷயமும் பெரிதான ஆபத்துக்களை உருவாக்கக்கூடியது. உதாரணமாக ஒரு எறும்பு யானையின் காதில் நுழைந்தால் அது யானையினையே மாய்த்துவிடும்.  ஆதலால் எந்த ஒரு செயலையும் துச்சமாக எண்ணாதே என்கிறார் திருவள்ளுவர்.

உலகின் மிகப்பெரிய வலிமைமிக்க அரசர்கள் நிகழ்த்திய போர்களெல்லாம் எதிரிகளின் வலிமையையும், போர் நிகழும் களம், மற்றும் முடிவுறும் இலக்கும் இவை அறியாமல் மேற்கொண்டதால் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றன. புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலொன்று:

வெள்ளம்போல் தானை வியந்து விரவாரை 
எள்ளி உணர்தல் இயல்பன்று – தெள்ளியார் 
ஆறுமேல் ஆறியபின் அன்றித்தம் கைக்கொள்ளார் 
நீறுமேல் பூத்த நெருப்பு. (பு.வெ.166)

கடல் போல் பெரிய படையை உடையேம் என்று எண்ணிப் பகைவரை இகழ்தல் நல்ல இயல்பன்று. அறிவு மிக்கோர் நீறுபூத்த நெருப்பை அது ஆறிவிட்டது என உறுதிசெய்த பின்பே கையில் எடுப்பர். தம் வலிமையொன்றையே பெரிதெனக் கருதாது பிறர் வலிமையையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்; அப்போதுதான் வெற்றி கிட்டும் என்பது இதன் கருத்து. இடம்பற்றிய கருத்து இதுவல்லவென்றாலும், எள்ளுதலை தவறென்று உணர்த்தும் பாடலிது.

பொது வழக்கில் "ஆழம் தெரியாமல் காலை விடலாமா?", "இடம் பொருள் ஏவல் தெரிந்து செய்க"  என்று கூறுவது உண்டு. 

மேலும்: அஷோக் உரை
மேலும்: குறள் இனிது: இடம்... ரொம்ப முக்கியம் குமாரு! (தமிழ் இந்து)

ஒப்புமை
வெள்ளம்போல் தானை வியந்து விரவாரை
எள்ளி யுணர்தல் இயல்பன்று (பு.வெ.166)

பரிமேலழகர் உரை
[அஃதாவது ,வலியும் காலமும் அறிந்து பகைமேற்செல்வான் , தான் வெல்லுதற்கு ஏற்ற நிலத்தினை அறிதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும் . ]

முற்றும் இடம் கண்ட பின்அல்லது - பகைவரை முற்றுதற்கு ஆவதோர் இடம் பெற்றபின் அல்லது, எவ்வினையும் தொடங்கற்க - அவர்மாட்டு யாதொரு வினையையும் தொடங்காதொழிக, எள்ளற்க - அவரைச் சிறியர் என்று இகழாதொழிக. (முற்றுதல்: வளைத்தல். அதற்கு ஆம் இடமாவது: வாயில்களானும் நூழைகளானும் அவர் புகலொடு போக்கு ஒழியும் வகை அரணினைச் சூழ்ந்து. ஒன்றற்கு ஒன்று துணையாய்த் தம்முள் நலிவில்லாத பலபடை இருப்பிற்கும், மதிலும் அகழும் முதலிய அரண் செய்யப்பட்ட அரசிருப்பிற்கும் ஏற்ற, நிலக்கிடக்கையும் நீரும் உடையது. அது பெற்றால் இரண்டும் செய்க என்பதாம்.)

மணக்குடவர் உரை
முடியுமிடங் கண்டாலல்லது யாதொரு வினையுந் தொடங்கா தொழிக; எளிதென்றிகழாதொழிக.

இஃது இடமறிதல் வேண்டுமென்பது கூறிற்று

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
முற்றும் இடம் கண்டபின் அல்லது - பகைவரை முற்றுகை செய்வதற்கேற்ற இடம் பெற்ற பின்னல்லது ; எவ்வினையும் தொடங்கற்க - அவருக்கு மாறாக எவ்வினையையுந் தொடங்காதிருக்க ; எள்ளற்க - அவரைச் சிறியரென்று இகழாதிருக்க .

முற்றுதல் வளைதல் . அதற்கேற்ற இடமாவது , பெருவாயில் களாலும் திட்டிவாசல்களாலும் சுருங்கைகளாலும் பகைவர்க்குப் புகலும் போக்குமில்லாவாறு அவர் நகரரணைச் சூழ்ந்து , நால் வகைப்படைகளும் அவற்றின் நடுவே பாதுகாப்பாக அரசனும் தங்கியிருத்தற்குப் போதியதும் , உண்ணீர் அண்மையிலுள்ளதும் , சதுப்பல்லாததும் , படமாடங்களும் பரசறைகளும் ஒரேபகலில் அமைக்கக் கூடியதுமான நிலப்பரப்பாம் .

மு.வ உரை
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது

சாலமன் பாப்பையா உரை
பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா.

நன்றி: Indian Finance Bazaar
தேர்வு செய்து சரியான கட்டுபாட்டுக்குள் இருக்கும் முதலீட்டு சேவை புரிவோர்களை ஆராய்ந்து தேர்ந்து எடுத்து முதலீட்டு முறைகளை தெரிந்து கொண்டு செயல்படுத்தும் முதலீடு பாதுகாப்பானதாக அமையும். அவ்வாறு இல்லாமல் பேராசை பட்டு எந்தவோரு அரசாங்க கட்டுபாட்டுக்குள் வராத அமைப்பு அல்லது தனியார் நபரிடம் பெரும் வருவாய் கருதி செய்யும் முதலீடு பெரும் ஆபத்தில் முடியக் கூடிய சூழ்நிலை நிறைய உள்ளது. அரசாங்க அமைப்பு கொண்ட நிறுவனங்களுடன் பண பரிவர்த்தனை செய்யும் பொழுது அதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பற்ற சூழ்நிலையில் கட்டுபாட்டு அமைப்பு முதலீட்டாளருக்கு உறுதுணையாக இருந்து நிவாரணம் பெற்று தரும். ஆதலால் முதலீட்டாளர் எந்த முதலீட்டையும் தொடங்குவதற்கு முன்பு இதை கருத்தில் வைத்து கொண்டு செயல்படுவது பல நன்மைகளை தரும்.

நன்றி: ரிஷ்வன்
எதிரியை வெல்லும் இடமறிந்தபின்
அறிவுடன் செயலைத் தொடங்குக
அதுவரை... அவரை அற்பமாய்
இகழ்வதை மனதில் அகற்றுக.

Thirukkural - Management - Decision Making
A person's possibility to exercise his strength is influenced by the location. Kural 491 is an addition to Kural 495. Never think that a task is easy to execute before you start and never start a task before you find the right place to execute the task.

Don't despise your foe, nor start action
Till you find a place to hem in and finish him.

English Meaning - As I taught a kid - Rajesh
Do not venture into a task without doing the following 1) analyzing the work and 2) identifying the appropriate place to execute the task. Do not take for granted even a small task. 
Hence, Never think that a task is easy to execute before you start and never start a task before you find the right place to execute the task.

Analyzing a tasks means  1) research the task well, 2) understand the value of the task, 3) estimate the skills , strengths, tools, equipment's required 4) estimate the resources required, 5) plan the communication mechanism between the members and team etc.  , 6) analyze the best time to optimally execute the task and to reap the rewards

Identifying the appropriate place to execute the task means 1) a place where a task can be executed without any hurdles 2) a place where the required resources, equipment, human resources would be available 3) a place where executing the task is viable 4) nature of the place - such as demographic, climate, geo-politics, culture etc 

Questions that I ask to the kid
Why should you decide on the place of execution of task before starting the task?

ஆகாறு அளவிட்டி தாயினுங்

குறள் 478
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை 
போகாறு அகலாக் கடை
[பொருட்பால், அரசியல், வலியறிதல்]

பொருள்
ஆகு - III. v. i. become, happen, take place, see ஆ, irr. verb.
ஆறு - பெரிய அளவில் உயர்ந்த நிலப்பகுதில் இருந்து தாழ்வானா பகுதி நோக்கி ஓடும் நீர்வழி, வழி, பாதை
அளவு - வரையறை - s. Measure, degree, pro portion, quantity, magnitude, size, ca pacity, bound, limit, compass, number, standard, வரையறை
இட்டிது - சிறிது; அண்மை.
ஆயினும் - ஆனாலும்
கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.
இல்லை - உண்டு என்பதன் எதிர்மறை
போகு - நெடுமை; உயரம்; நீளம்
போகுதல் - காண்க:போதல்.
ஆறு - பெரிய அளவில் உயர்ந்த நிலப்பகுதில் இருந்து தாழ்வானா பகுதி நோக்கி ஓடும் நீர்வழி, வழி, பாதை
அகலம் - விரிவு; பரப்பு; இடம்; பூமி; மார்பு; விருத்தியுரை; வித்தாரகவி; பெருமை.
கடை - s. a shop, market bazaar, அங் காடி; 2. place, இடம்; 3. way, வழி; 4. gate, வாயில்; 5. termination of a verbal participle as in "ஈதலியை யாக்கடை" (குறள்); 6. a verbal prefix as in கடை கெட்ட; 7. a sign of the 7th case, எழனுருபு.
n. 1. Fatigue; சோர்வு.(அக. நி.) 2. Way; வழி. (யாழ். அக.) 3. Pudendum muliebre; பெண்குறி. (யாழ். அக.)
அகலாக்கடை - அகலாக்மாக பெரிதாக வாயில் இல்லாத வரை

முழுப்பொருள்
நாட்டிலோ நிர்வாகத்திலோ குடும்பத்திலோ தலைவனுக்கு வரவு இருக்கும். ஆனால் அது எல்லாருக்கும் தேவைக்கு ஏற்றவாரோ தேவைக்கு மேலாகவோ இருக்காது. பலருக்கு வரவு மிக சிறிதாகவே இருக்கும். அப்படி சிறிதாக இருப்பின் ஒரு கேடும் இல்லை. சிறிதான வரவு வறுமையும் இல்லை [கேடு என்ற சொல்லுக்கு அகராதியில் வறுமை என்ற பொருளும் உண்டு]. ஆதலால் வருத்த படுத்தவற்கு ஒன்றுமில்லை. 

ஆனால் வரவுக்கு அதிகமாக செலவு செய்தல் தவறு. வரவு ஈன்ற உழைத்த நாட்களை / நேரத்தை விட குறுகியகாலத்தில் மிக வேகமாக மின்னல் வேகத்தில் செலவு செய்தல் தவறு. அப்படி செய்தால் வறுமையை நோக்கியே சொல்வோம். அது அழகு இல்லை. அது கெடுதலே விளைவிக்கும். 

வள்ளுவர் சிறு வருமானம் ஈட்டுபவர்களுக்கு மட்டும் சொல்லவில்லை. எல்லோருக்கும் பொதுவாகவே வரவை விட செலவு அதிகமாக இருந்தால் கேடு என்றே சொல்லியிருக்கிறார்.

"விரலுக்கு ஏத்த வீக்கம்" என்று பொதுவழக்கில் கூறுவர். "குடிகிறது கூழ் கொப்பளிக்கற்து பன்னீரா?" என்றும் கூறுவர்.

இக்குறள் கீழ் காணும் ஔவையாரின் நல்வழிப் பாடலை ஒட்டிய கருத்தைக்கூறுகிறது:

ஆன முதலில் அதிகம் செலவானால் 
மானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு

அதாவது, ஈட்டும் பொருளினைவிட அதிகமாக செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும், உணர்வையும் இழப்பார்கள். அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர். எத்துனை பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போல நடத்தப்படுவர். இதை “முதலின் அதிகம் செலவானால்” என்று, அதாவது “முதலீட்டுக்கும் அதிகமாக செலவு செய்தால்” என்றும் பொருள் சொல்லலாம்.

ஔவையார் கடுமையாகச் சொன்னதையே நயமாகச் கூறியிருக்கிறார் வள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை - அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்: போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறிஅளவு அதனின் பெருகாதாயின். ('இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள்' என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.)

மணக்குடவர் உரை
பொருள் வரும்வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்; அது போம்வழி போகாதாயின்.

இது முதலுக்குத் தக்க செலவு செய்ய வேண்டுமென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் - அரசர்க்குப் பொருள் வருவாயின் அளவு சிறிதாயினும்; போகு ஆறு அகலாக்கடை - செல்வாயின் அளவு அதினும் மிகாதவிடத்து; கேடு இல்லை - கெடுதல் இல்லை.

இது சிக்கனத்தின் நன்மையை எளிய கணக்கு முறையால் விளக்குவது . அளவு என்பது பின்னுங் கூட்டியுரைக்கப் பட்டது. 'அகலாக்கடை 'என்றதனால், வரவுஞ்செலவும் ஒத்திருப்பினுங் கேடில்லை யென்பதாம் .

ஒரு குளத்திற்குள் நீர்வந்து விழும் வாய்க்காலினும் அதினின்று நீர்வெளியேறும் வாய்க்கால் அகன்றிராவிடின் அக்குளநீர் குன்றாது என்பதே, பிறிதுமொழிதற் குறிப்புக்கொண்ட இக்குறட்பொருள்.

மு.வ உரை
பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) 
விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை

சாலமன் பாப்பையா உரை
வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை

நன்றி ரிஷ்வன்
வரும் அளவு சிறிதாயினும் – பொருள்
செல்லும் அளவு பெரிதாகாத வரை
இல்வாழ்வில் தீங்கு என்றும் இல்லை

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்

குறள் 138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் 
என்றும் இடும்பை தரும்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.
நன்றிக்கு - நற்பயனுக்கு, அறத்திற்கு
வித்து - மரஞ் செடி கொடிகள் முளைக்கக் காரணமாயிருக்கும் விதை; விந்து; மரபுவழி; வழித்தோன்றல்; சாதனம்; காரணம்.
வித்து ஆகும் - விதை யாகும் (நன்மை மரஞ் செடி கொடி போன்றதாகும். சில விதைகள் (உதாரணமாக மூங்கில்) முளைக்க பல நாட்கள்/வருடங்கள் ஆகும்
ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம் ஓம்பிய நெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.
நல் ஒழுக்கம் - நல்ல நன்னடத்தை
தீ ஒழுக்கம் - தீய நடத்தை, தீய பண்புகள்
என்றும் - என்றுமே, எக்காலத்திலும்
இடும்பை - துன்பம்; தீமை; நோய்; வறுமை; அச்சம்.
இடும்பை தரும் - துன்பத்தை/ தீமை/ நோய்/ வறுமை/ அச்சம் தனையே தரும்

முழுப்பொருள்
ஒருவனுக்கு நல்லொழுக்கம் என்பது விதைக்கு பாய்ச்சும் நல்ல பசுமையான நீரைப் போன்றது ஆகும். நீரின் தன்மை விதைக்குள் சென்று வளர்ந்து நல்ல மரமாக வளரும். அதுப்போல் நல்ல குணங்கள் பழக்கவழக்கங்கள் நன்னடத்தைகள் ஒருவருள் வளர்ந்து உயர்ச்சி தரும். அறம் தனை நிலைநாட்ட உதவும். துன்பமான நேரங்களிலும் தவறான பாதையில் செல்வது தவறு என்று நம்மை அதில் இருந்து விலக்கி நல்வழியில் செலுத்தும் நல் ஒழுக்கம்.  இறுதியில் பல தடைகள் வந்தாலும் இன்பமே பயக்கும். 

ஆக இறுதியில் நன்மை பயத்தமைக்காகவும் வழியில் தவறான பாதையில் இருந்து தடுத்தமைக்காகவும் ஒழுக்கத்திற்கு நாம் நன்றியே சொல்லுவோம். [நன்றிக்கு நன்மை என்ற பொருளும் உண்டு]

ஆனால் தீய பண்புகள் தீய குணங்கள் தீய நடத்தைகள் தீய நட்புகள் நமக்கு நல்லது செய்யாது. கேடான நீரை விளைச்சலுக்கு பாய்ச்சினால் செழுமையாக செடிகள் வளராது. சிறிது நாட்களில் துவண்டுவிடும். மடிந்துவிடும். அதுப்போல தீய பழக்கங்கள் நமக்கு தீமையே தரும். சிலர் சில தீய பழக்கங்களை ரகசியமாக கொள்வர். அவர்களுக்கு மட்டுமே தெரியும். அது தனக்கு உடனே தீமை பயக்காவிட்டாலும் நெடுங்காலத்தில் தீமை பயக்கும். அதற்கும் திருவள்ளுவர் கூறியுள்ளார் தன்நெஞ்சே தன்னைச் சுடும் [குறள் 293: தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்].  

இங்கே திருவள்ளுவர் வித்து என்று சொல்லி இருக்கிறார். ஏன் என்றால் குழந்தை பருவத்தில் இருந்தே நல் எண்ணங்களை வித்திடுதல் வேண்டும். அதனுடைய பலன் நல்ல மரமாக வளரும். ஆனால் மரமாக வளர்ந்தப்பின் மரத்தின் தன்மையை மாற்றவே முடியாது. முடிந்தாலும் மிக மிக கடினம். செடிகளை பிடுங்கிநடலாம். மரங்களை எளிதில் பிடுங்கிநட்டுவிடமுடியாது. மண் அத்தனை வல்லமை மிக்கது.  உதாரணமாக நாம் இளமையில் உடற்பயிற்சி செய்யாவிட்டாலோ, நல்ல உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கா விட்டாலோ அதனை மாற்றுவது எவ்வளவு சிரமமாக உள்ளது. 

இவ்வொழுக்கம் என்பது எல்லாவற்றிற்கும் பொருந்தும். பேசும் சொல், வாழும் முறை, உண்ணும் உணவு, செல்வம் ஈட்டுவது, அறம் செய்வது, நிர்வாகம் செய்வது, நட்பு வைத்துக்கொள்வது என்று எல்லாவற்றிலும் ஒழுக்கம் வேண்டும்.

”விதைகறதெல்லாம் தப்பாம மொளக்கும்” என்பதை நினைவில் கொள்க. ஆதலால், நல்லொழுக்கத்தை வித்திடல் அவசியம் ஏனெனில் தீயொழுக்கத்தை விதைத்து துன்பத்தை அறுவடை செய்வவேண்டாதிருக்க

பொதுவழக்கில் வழங்கும் தொல்மொழி “விரையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்?” என்பதாம். “பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்” என்றது அதனால்தான். ஆத்திச்சூடியில் ஒளவையாரும் கூறியுள்ளார் நன்மை கடைப்பிடி, நேர்பட ஒழுகு, தீவினை அகற்று, சீர்மை மறவேல், கீழ்மை அகற்று, உத்தமனாய் இரு, மோகத்தை முனி என்று.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும். - ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும். ('நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும் 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம், ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்: தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும்.

தீயவொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தருமென்றவாறு. என்றும்- இருமையின்கண்ணுமென்றவாறு.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும் - ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந்தரும் ; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீயவொழுக்கம் எக்காலும் துன்பமே தரும் .

மறுமையில் விளையும் இன்பத்திற்கு இம்மையில் ஒழுகும் நல்லொழுக்கம் வித்துப்போன்றிருத்தலால் , 'வித்தாகும்' என்றார் . தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் என்பதால் , நல்லொழுக்கம் இம்மையிலும் இன்பந்தருதல் பெற்றாம் .

மு.வ உரை
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்

சாலமன் பாப்பையா உரை
நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: நல் ஒழுக்கம் நன்றுக்கு வித்து ஆகும் - நல்ல நடக்கை இன்பத்திற்குக் காரண மாகும்; தீ ஒழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய நடக்கை எஞ்ஞான்றும் துன்பம் தரும்.

அகலம்: நன்று என்பது இன்பம் எனப் பொருள் தருதலானும், எதுகை நயம் பயத்தலானும், முன் உரையாசிரியர்கள் பாடம், ‘நன்றிக்கு’.

கருத்து: நல்லொழுக்கம் இன்பத்தையும் தீ யயாழுக்கம் துன்பத் தையும் தரும்.

தி.பொ.ச. உரை
நன்மை என்னும் பயிர் விளைய நல்லொழுக்கம் என்னும் நல்லநீரைப் பாய்ச்ச வேண்டும். மாறாக, தீயொழுக்கம் என்ற கெட்டநீரைப் பாய்ச்சினால் கேடு எனும் பயிரே என்றும் விளையும். ( இங்கு வித்து = நீர். ' வித்தும் இடல் வேண்டும் கொல்லோ? ' ஆய்வுக் கட்டுரை காண்க. பயிர்களுக்கு நாம் பாய்ச்சும் நீரின் தன்மையைப் பொறுத்தே பயிரின் விளைச்சல் அமைகிறது என்பதை அறிவோம். நல்லநீரைப் பாய்ச்சாமல் கெட்ட நீரைப் பாய்ச்சினால் பயிர்கள் கெட்டு மடிந்து விளைச்சலற்றுப் போகும் என்பதையே கேடு விளையும் என்கிறார். இங்கு ஒழுக்கத்தினை நீருடன் ஒப்பிட்டிருப்பது சாலப் பொருத்தமாகவே படுகிறது. ஏனென்றால் இந்த இரண்டுமே ஒழுகும் தன்மை உடையவை என்பதுடன் இடத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளவும் வல்லவை. ) 

Thirukkural - Management - Personality Development - Self Discipline
Self-discipline leads to all beneficial outcomes in one's life. Beneficial outcomes include health, happiness, harmony, and professional success. Kural 138 affirms that a self-disciplined person will be grateful because of his positive habits.

Good conduct sows good, and from bad springs
Eternal trouble

Positive habit is possible as a person becomes grateful when he achieves significant success. Achieving significant success is possible with positive habits. Whereas, lack of self-discipline leads to a long lasting misery. Happiness and misery are the products of positive and negative habits respectively. Let us remember Aristotle's thought, “Excellence is not an act. It is a habit.”

சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

English Meaning - As I taught a kid - Rajesh
Good discipline will be the seed to good results. Whereas bad habits and indiscipline will always lead to difficulties in life. 

Questions that I ask to the kid
What is the seed for good results? What does indiscipline lead to ?
What gives you difficulties all the time?
Why indiscipline leads to difficulties? (indiscipline->distractions->unfocus->unproductivity->no wealth->difficulties)

எவ்வ துறைவது உலகம்

குறள் 426
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு 
அவ்வ துறைவ தறிவு
[பொருட்பால், அரசியல், அறிவுடைமை]

பொருள்
எவ்வது - எவ்விதம், எவ்வாறு, adv. id. How? inwhat manner? 
உறை - II. v. i. abide, live; தங்கு; 2. dwell or be in the natural element as fishes in water etc, இரு; 3. haunt, சஞ்சரி;
உறைவது - இயங்குகிறதோ
உலகம் -  இவ்வுலகம், இவ்வுலக மக்கள், நாம் சென்று வாழும் உலகம்
உலகம் - உலகிலுள்ள உயர்ந்தோர் ஒழுக்கம்; உயர்ந்தோர்; உயர்குணம்; வானம், உலகு, உலகப்பொது, பூமி; நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு; மக்கள்தொகுதி; 
உலகத்தொடு - அந்த உலகத்தோடு ஒன்று பட்டு
அவ்வது - adv. id. In that way;அவ்வாறு 
உறைவது - இயங்குவதே
அறிவு - சிறந்த அறிவு

முழுப்பொருள்
இவ்வுலகத்தில் உயர்குணம் கொண்ட உயர்ந்தோர் ஒழுக்கத்துடன் எவ்வாறு இயங்குகிறார்களோ வாழ்கிறார்களோ அவ்வாறு அவ்வழியில் நம்மை ஒன்று பட்டு இயங்குவதே வாழ்வதே கற்ற அறிவுக்கு சிறப்பாகும். இதில் நான் அரசன் நான் தலைவன் எனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் இல்லாமல் உயர்ந்தோர் வழி வாழ வேண்டும். 

அது மட்டும் இன்றி இவ்வுலகம் மாறிக்கொண்டே இருக்கும். புதிய புதிய வளர்ச்சிகள் புதிய புதிய தொழில்நுட்பங்கள் புதிய புதிய வியூக முறைகள் புதிய புதிய வாழ்வியல்கள் வந்துக்கொண்டே இருக்கும். அத்தகைய நல்ல மாற்றங்களை உதாசினப்படுத்தக்கூடாது. பாரதி கூறியது போல "பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை" ஆதலால் "திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்". ஆதலால் நற்புதிய மாற்றங்களை ஏற்று வாழ்வில் ஒழுகி வாழ வேண்டும். அதுவே அறிவுக்கு சிறந்ததாகும்.

(கீழ்காணும் பாடலின் பகுதி மகாகவி பாரதியின் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்" பாடலில் இடம்பெறும்)

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
      தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
      தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
      சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
      அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். 

அது மட்டும் எல்லாது ஒரு வெளிநாட்டிற்கு சென்றாலோ வெளி மாநிலத்திற்கு சென்றாலோ அங்கு இருந்து கற்க வேண்டும். அங்கு சென்று எங்க ஊர் எப்படி இருக்கும் தெரியுமா என்று நம்மூர் புராணம் பாடக் கூடாது. அந்த ஊர் மக்களை இழிவு செய்ய கூடாது. அங்கு உள்ளோர்க்கு படி வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். இது போர் புரிந்து நாட்டை ஆளும் அரசனுக்கும், வெளிநாட்டில் வந்து தொழில்/ வணிகம் செய்யும் மக்களுக்கும் பொருந்தும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று, உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு. ('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது.

அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உலகம் எவ்வது உறைவது - உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றாரோ; அவ்வது உலகத்தோடு உறைவது அறிவு - அவ்வாறே அவரொடு பொருந்தியொழுகுதல் அறிவுடைமையாம்.

உயர்ந்தோரைப் பின்பற்றுவது பொதுமக்கட்கு ஒழுக்கவுயர்வாம்; அரசர்க்கு அதனொடு புகழும் பதவிப்பாதுகாப்புமாம்.

மு.வ உரை
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்

சாலமன் பாப்பையா உரை
உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.

நன்றி: ரிஷ்வன்
எவ்வாறு உலகம் நடைபெறுகிறதோ
அவ்வாறே அதனுடன் ஒன்றி
தப்பாது தொடர்வதே அறிவாம்

நன்றி: கீற்று
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மொழியின் உருவாக்கம் பெரும் முதன்மைத்துவம் வாய்ந்தது. மரபனுக்களில் (டி.என்.ஏ) மட்டுமே சேமித்து வைக்கப்பட்டிருந்த வாழ்வதற்கான அறிவு, மொழியின் மூலமும் எழுத்தின் மூலமும் புதியதொரு வடிவம் பெற்றது. மனித சமூகத்தின் வளர்ச்சியில் எழுத்தின் பங்கும், மொழியின் பங்கும் மகத்தானது. கால மாற்றத்தில் 'எழுதுகோலின் முனை வாள்முனையை விட கூர்மையானது' என்ற நிலை ஏற்பட்டது. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சியைப் பெரும் பாய்ச்சல்களில் கொண்டு சென்றன இலக்கிய மற்றும் விஞ்ஞான நூற்கள். ஆனால் காலப்போக்கில் பல்வேறு மொழிகள் தோன்றியும் அழிந்தும் போயின. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்  வழுவள கால வகையின நானே' என்ற நன்னூல் கூற்றுக்கேற்ப,   எவ்வளவு பழமை மிக்க செறிவு கொண்ட மொழியாயினும், காலத்துக்கேற்றவாறு தம்மை தகவமைத்துக் கொள்ளாமல் இருப்பவை அழிந்து போயின, போகின்றன. மொழியுடன் சேர்ந்து அதனூடாக வளர்க்கப்பட்ட மரபார்ந்த அறிவும், கலாச்சாரமும், வரலாறும் அழிந்து போகின்றன. 

'எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு'.

என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க பல்வேறு மாற்றங்களை செரித்து ஆயிரமாண்டுகளாக மக்களின் மொழியாக மக்களுடன் பீடு நடை போட்டு வரும் தமிழ் மொழி, கணினி எனும் உலகை ஆளும் அசுர இயந்திரத்திற்குள்ளும் தன்னைப் பொருத்தி கொள்வதன் மூலமே இனி வரும் தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்க முடியும்.

'மறைவாக பழங்கதைகள் நமக்குள்ளே சொல்வதிலோர் மகிமையில்லை
திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்' என்று பாரதி கூறியது போல,

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை

குறள் 435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும்
[பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வரும் முன்னர்க் - வருங்காலத்தில் / எதிர்க்காலத்தில் நிகழும் முன் (ஒரு செயலின் விளைவாகவோ அல்லது ஏதேர்ச்சையாகவோ)
கா - பாதுகாப்பு, காப்பாற்ற, 
காவாதான் - பாதுகாப்பாக இருத்தல்
வாழ்க்கை 
எரி - வால் நட்சத்திர வகை, நெருப்பு, அக்நி, நரகம்
முன்னர் - முன்பாக

வைத்தூறு - வைக்கோற் குவை, Straw-stack, வைக்கோற்போர், வைக்கோல்
போல - போன்று
கெடு - கேடு, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; அழகின்மை.
கெடும் - அழியும்

முழுப்பொருள்
வைக்கோலின் முன் நெருப்பு / தீ இருந்தால் அனலினாலோ, காற்றினாலோ தீ பற்றி வைக்கோல் எரிந்து விடும். இதற்கு வைக்கோலின் மேல் தீ வைக்க வேண்டும் என்றில்லை வைக்கோலின் அருகே தீ இருந்தால் கூட பற்றிக்கொள்ளும். வைக்கோலில் தீ மிக வேகமாக பரவிக்கொள்ளும். அருகே உள்ள மற்ற வைக்கோல்களுக்கும் பரவி விடும். கட்டுப்படுத்த முடியாது (அதற்கு நேரமே இருக்காது). ஆதலால் வைக்கோலை தீ அருகே வரவிடாமல் எச்சரிக்கையாக இருந்து காத்தல் வேண்டும். இல்லையேல் சர்வ நாசமாகிவிடும். 

அதுப்போல அரசன் நாட்டிற்கு வரும் கேடுகளில் இருந்து மக்களை அவை வரும் முன் காக்க வேண்டும். அதுவே சிறந்ததாகும். 

இங்கே வைக்கோலை உவமையாக கூற பல காரணங்கள் இருக்கிறது. கீழே காண்போம்.

1.வைக்கோலின் மேல் யாரும் தீயினை போட தேவையில்லை. அருகே இருந்தால் காற்றினாலேயே பற்றிக்கொண்டு அழிந்து விடும். அதுப்போல ஒரு தனி நபருக்கு கெட்ட பழக்கங்கள், அதர்ம குணங்கள் ஒரு தவறான சூழலில் இருந்தாலே வந்து விடும். ஆதலால் நம் (நட்பு, மக்கள்) சுற்றத்தை நன்கு வைத்துக்கொள்ள வேண்டும். சிறு சிறு தவறுகளும் செயல்களும் நம் வாழ்வை நாசமக்கிவிடும்.

2.வைக்கோலில் தீ பற்றிக்கொண்டால் சுற்றியுள்ள அனைத்து வைக்கோலுக்கும் மிக வேகமாக பரவி விடும். அதுப்போல தவறுகள் நம்மை சுற்றி உள்ளவர்களை பாதிக்கும். கெட்ட வழக்கங்கள் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் பரவும், பாதிக்கும்.

3.பெரிய வைக்கோலின் மீது சிறிய தீப் பொறி பட்டாலும் வைக்கோலை அழித்துவிடும். சிறிய தீ பெரிய தீ என்ற பேதமே கிடையாது. அதுப்போல சிறிய தவறு பெரிய தவறு என்பதே கிடையாது. அவை அனைத்து செல்வங்களையும் (பொருள், உடல்) ஒரு நிமிடத்தில் அழித்துவிடும்.

4.மரக்கட்டை என்றுக்கூட திருவள்ளுவர் சொல்லி இருக்கலாம். ஆனால் வைக்கோல் என்கிறார். ஏன் எனில் மரக்கட்டை என்றால் போராடி தண்ணீர் ஊற்றி அனைக்கலாம். தீயும் சற்று மெதுவாக பரவும். எரியாத இடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் வைக்கோல் அப்படி அல்ல தீ கொண்ட உடன் பரவி விடும். கட்டுப்படுத்த முடியாது. ஒரு வேளை தீயினை அனைத்தால் கூட அந்த வைக்கோலை ஆடு மாடு கூட உண்ணாது ஏனெனில் தீயின் வாடை அதன் மேல் உண்டு. அதுப்போல நம்மில் கெட்ட பழக்கம் இருந்தால் நம்மில் அந்த சுவடு இருந்துக்கொண்டே இருக்கும். நம் மீது மதிப்பை மக்கள் இழந்துவிடுவர். 

சின்ன தவறுகள், சின்ன குற்றங்கள், சின்ன எதிரிகள் எல்லாம் சின்ன நெருப்பு பொறி மாதிரி.

குற்றங்களும், தவறுகளும் நிகழா வண்ணம் உங்களை காத்துக் கொள்ளுங்கள். ஒரு பிரச்சனை வந்தால் அதனை எதிர்க்கொள்ளவேண்டும். ஆனால் எல்லாவற்றிற்க்கும் “பிரச்சனை வந்தால் பார்த்துக் கொள்ளலாம்” என்று நினைப்பது பின்பற்றுதலுக்குரியதல்ல. இவை தனி நபர் வாழ்வில் எல்லாவற்றுக்கும் பொருந்தும். அதுவும் உடல் நலத்திற்கும், ஒழுக்கத்திற்கும் மிக பொருந்தும். 

பழங்குடிகள் நோய் வந்து சிகிச்சை பெறுவதைவிட நோய் வராமலேயே தடுப்பதற்கு முன்னுரிமை தருகிறவர்கள். எனவே, அவர்களுடைய சாப்பாட்டிலேயே மூலிகைகளின் பயன்பாடு இருக்கிறது. 

ஒப்புமை
வருமுன்னர்க் காவாதான் “மேல்வர வறியாதோன் தற்காத்தல் பொய்” (முதுமொழி. 7.)

மேலும்: அஷோக் உரை
மேலும்: Interesting Tamil Poems

பரிமேலழகர் உரை
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குற்றம் வரக்கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை, எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும் - அது வந்தால் எரிமுகத்து நின்ற வைக்குவை போல அழிந்து விடும். ('குற்றம்' என்பது அதிகாரத்தான் வந்தது. முன்னர் என்றதன் ஈற்றது பகுதிப்பொருள் விகுதி, 'வரும்' என்னும் பெயரெச்சம் 'முன்னர்' என்னும் காலப்பெயர் கொண்டது; அதனால் காக்கலாம் காலம் பெறப்பட்டது. குற்றம் சிறிதாயினும், அதனால் பெரிய செல்வம் அழிந்தே விடும் என்பது உவமையால் பெற்றாம்.)

மணக்குடவர் உரை
துன்பம் வருவதன்முன், அதற்குத் தக்கது அறிந்து காவல் செய்யானது செல்வம் எரிமுன்னர்க்கிடந்த வைத்திரள் போலக் கெடும்.

இது முந்துற்றுக் காவல் செய்வன செய்யாமையும் குற்ற மென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குற்றம் நேர்வதற்கு முன்பே அதையறிந்து தடுக்காத அரசனது வாழ்க்கை; எரி முன்னர் வைத்தூறுபோலக் கெடும் -அது நேர்ந்தவுடன் நெருப்பு முகத்து நின்ற வைக்கோற்போர்போல அழிந்து விடும்.

குற்றம்என்பது அதிகாரத்தால் வந்தது. முன் - முன்னம் -முன்னர். குற்றத்தை அது வருமுன் காக்கவேண்டு மென்பதும் குற்றஞ் சிறிதாயினும் அதனாற் பேரிழப்பு விரைந்து நேருமென்பதும், உவமையாற் பெறப்பட்டன.

மு.வ உரை
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை
தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.

Thirukkural - Management - Personality Development - Being Proactive
Both heredity (already built in) and environment (an external factor) influence a person's  personality. 

However, proactive approach, self- discipline and personal responsibility are internal factors that are more powerful than external factors. There is an age-old saying, “Prevention is better than cure.” Valluvar presents that view in Kural 435 through a simile. 

A life that does not guard against faults
Is a heap of straw before fire.

If a person does not protect his life from dangerous consequences, his life will be similar to a pile of hay kept closer to fire. The hay will burn out soon as there is no protection from fire. A person has to take proactive approach related to: health, education, finance, career, family, and society. A person has to be proactive in all these areas to make his life on earth meaningful and purposeful. Prevention is protection.  The saying, “Forewarned is forearmed” is very much a follow up to the warning given by Valluvar.

English Meaning - As I taught a kid - Rajesh
An age-old saying, “Prevention is better than cure.” That is what this kural says too. If a person does not protect his life from dangerous consequences, his life will be similar to a pile of hay kept closer to fire. The hay will burn out soon as there is no protection from fire. 

Proactive approach, self- discipline and personal responsibility are internal factors that are more powerful than external factors. A person has to take proactive approach related to: health, education, finance, career, family, and society. When doing a work, one is doing work one has to also plan, think and research about any hurdles or problems in advance so that one can prevent it and one can have a mitigation plan to do the damage control. A person has to be proactive in all these areas to make his life on earth meaningful and purposeful. Prevention is protection. 

Questions that I ask to the kid
What happens when you keep fire in front of haywire? What can you learn from it?
Proactive approach / protection / Prevention is better than cure. Describe

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்

குறள் 415
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே 
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
[பொருட்பால், அரசியல், கேள்வி]

பொருள்
இழுக்கல் - வழுக்குகை; வழுக்குநிலம்; தளர்வு; தவறுதல்
உடை - ஆடை; செல்வம்; உடைமை; குடைவேலமரம்:சூரியன்மனைவி.
உழி - இடம்; பக்கம்; ஏழனுருபு; பொழுது; அளவு.  3. A particle of place, a form of the seventh case, ஏழனுருபு. (p.) அவன்வந்துழி. Where he came- நான்நடப்புழி. Where I shall walk- மரபுழியுய்த்து. Conducting (him) with de corum- என்னுழிவா. Come to me.
ஊற்றுக்கோல் - ஊன்றுகோல்
அற்றே - அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.
ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.
உடையார் - உடையவர்கள்

வாய்ச் சொல் - சொல்லும் வாய்ச் சொல்லை கேட்பது (கற்றாலும் கல்லாத போதும்). இங்கே வாய்மையான சொற்கள், சிறப்பு; சிறப்புடையபொருள்

முழுப்பொருள்
வாழ்வில் நன்னடத்தை மூலம் உலகம் ஓம்பிய நெறியினை பின்பற்றி உயர்ச்சி அடைந்த மக்கள் பலர் (சிறு சதவிகிதம் எனிலும் கூட). அத்தகையவர்கள் கூறும் சொல்லானதோ பேச்சுரைகளோ வாழ்க்கையை நல்வழியில் வாழவே பயன்படும். அவர்கள் பலவற்றை கற்று ஆராய்ந்து பின்பற்றியவர்கள். அவர்களிடம் இருக்கும் ஞானம் நாம் கற்கும் கல்வியை விட மேலானதாக இருக்கும் என்று தீர்க்கமாக சொல்ல முடியாவிட்டாலும் அவை நடைமுறைக்கு ஏற்றார் போல் இருக்கும் என்று சொல்ல முடியும். ஆகவே அவற்றை முழு கவனுத்துடன் ஆர்வமுடன் கேட்டு உள்வாங்க வேண்டும். அத்தகைய கேள்விச்செல்வம் மிகுந்த பயனுள்ளது என்று கீழே திருவள்ளுவர் சொல்கிறார்.

ஒருவர் தரையில் நடக்கும் பொழுதோ, மலையில் ஏறும் பொழுதோ வழுக்கி விழும் அபாயங்கள் உண்டு.  அத்தகைய அபாய நிலையில் நாம் சிந்தனை செய்ய சில நொடிகள் கூட இருக்காது. நம் கால்களும் கைகளும் ஊன்ற எதையாவது தேடும். அத்தகைய நிலைகளில் ஒரு ஊன்று கோல் கையில் இருந்தால் அவை பயனுள்ளதாக அமைந்து உயிரை காத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். நம் பயணத்தை தொடர முடியும்.

அதுப் போன்று வாழ்வில் சறுக்கும் பொழுது தளரும் பொழுது துன்பங்களை சந்திக்கும் பொழுது சவால்களை சந்திக்க நேரிடும் பொழுது மூத்தோர் ஒழுக்கமுடையோர் சொல் ஊன்று கோல் போல மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

இங்கே கற்றவர் என்றும் கூட கூறியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி கூறவில்லை. கற்றும் ஒழுக்கம் இல்லை என்றால் என்ன பயன் என்று ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறியுள்ளார். கல்லாதவர் ஆக இருப்பினும் ஒழுக்கம் உடையவர்களே சான்றோர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்று = வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல உதவும்; ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் - காவற்சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள். (அவாய்நிலையான் வந்த உவமையடையால் பொருள் அடைவருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல் போல உதவுதல் -தளர்ந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்' 'வாய்'என்பது தீச்சொல்அறியாமையாகிய சிறப்புணர நின்றது. 'அவற்றைக் கேட்க' என்பதுகுறிப்பெச்சம்.)

மணக்குடவர் உரை
வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள்.

இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் - ஒழுக்க முடைய பெரியோர் வாய்ச் சொற்கள்; இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே -வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவது போல, உலகில் வாழ்க்கை நடத்துவோர்க்கும் ஆட்சிசெய்வோர்க்கும் துன்பக்காலத்தில் உதவுந் தன்மையவே.

ஒழுக்கமில்லாதார் கல்வியுடையாரேனும் அன்பில ராதலின். அவர்வாய்ச்சொல் பயன்படாதென்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்' என்றார். வாய் என்றது தீச்சொல் வந்தறியாமை யுணர்த்தி நின்றது. இனி, வாய்ச்சொல் என்பது தப்பாது பயன்படும் வாய்மைச்சொல் எனினுமாம். ஏ கா ர ம் தேற்றம்.

முந்தின குறளிற் பொதுப்படக் குறிக்கப்பட்ட கேள்வியறிவைப் பெறுமிடம் இங்கு வரையறுக்கப்பட்டது.

மு.வ உரை
கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.

சாலமன் பாப்பையா உரை
கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.

வழுக்குகிற நிலத்தில் ஊன்றுகோல் போல ,நம்மை சான்றோரின் சொற்கள் தாங்கிப் பிடிக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்”.

அந்த வரிகள் நினைவின் அடுக்குகளிலிருந்து வருபவையல்ல..ஆகாயத்தின் அடுக்குகளிலிருந்து அனுப்பப்படுபவை

நன்றி: ரிஷ்வன்
ஒழுக்கம் உடைய கற்றவரின் நற்சொல்
வழுக்கும் நிலத்தில் ஊன்று கோலாய்
தடுத்து நிறுத்தி துன்பத்தைப் போக்கும்.

உளரென்னும் மாத்திரையர் அல்லால்

குறள் 406
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் 
களரனையர் கல்லா தவர்
[பொருட்பால், அரசியல், கல்லாமை]

பொருள்
உளர் - உடந்தை; உடையவர்; வாழ்கின்றோர்.
உளர் என்னும் -  உடலோடு வாழ்கின்றோர் 
மாத்திரை - அளவு, கணம், காலவிரைவு, எழுத்தினளவு, குளி கை (medicinal pill)
மாத்திரையர் - மாத்திரையார் - எதற்கு சமம் என்றால்
அல்லால் - மற்றபட்டி, அக்குணம் உள்ளவர்களை தவிர வேறு எவரிடம்
பயவாக் - பிறருக்கு பயன் தரக்கூடிய தன்மைய இல்லாத
களர் - உவர்நிலம், களர்நிலம், உப்புமண்; பயிரிட உதவாத நிலம்.
அனையர் - They are like. அன்னர்--அன்னார். Such persons
கல்லாதவர் - கல்வி கற்காதவர்கள்

முழுப்பொருள்
கல்வி கல்லாதோர் உயிர் உடமில் ஒட்டிக்கொண்டுள்ள ஒரு மிக சாதாரணமான/ கேவலமான உடம்பு என்கிறார் திருவள்ளுவர். இவர்கள் எதற்கு ஒப்பாவர்கள் என்றால் பயனே தராத விளைச்சலே தராத களர் நிலத்திற்கு. கல்வி இல்லாதவர்கள் மற்றவர் யாருக்கும் எவ்வித பயனையும் தர மாட்டார்கள். [அத்தகைய நிலம் இவ்வுலகத்திற்கு பாரம் போன்றே இந்த மனிதர்களும் உலகிற்கு பாரம்]. அதனையே திருவள்ளுவர் கூறுகிறார். 

திருவள்ளுவர் இதனை ஏன் நிலத்திற்கு உவமை படுத்துகிறார்? நிலம் என்பது ஒரு தடவை மட்டும் பயன் தரக்கூடியது அல்ல. பல முறை பல நூற்றாண்டுகள் பயன் தரக்கூடியது. அதுப்போலவே கல்வியும் பல முறை பல நூற்றாண்டுகள் பயன் தரக்கூடியது. ஆகவே கற்க வேண்டிய அவசியத்தை சொல்லாமல் சொல்கிறார்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கல்லாதவர் - கல்லாதவர், உளர் என்னும் மாத்திரையர் அல்லால் - காணப்படுதலான் இலரல்லர் உளர் என்று சிலர் சொல்லும் அளவினர் ஆதல் அன்றி; பயவாக் களர் அனையர் - தமக்கும் பிறருக்கும் பயன்படாமையால் விளையாத களர் நிலத்தோடு ஒப்பர். (களர் தானும் பேணற்பாடு அழிந்து உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது போலத் தாமும் நன்கு மதிக்கற்பாடு அழிந்து, பிறர்க்கும் அறிவு முதலிய உதவார் என்பதாம். இதனான் கல்லாதாரது பயன்படாமை கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
உளரென்னும் அளவினையுடையாரல்லது, பயன்படாத களர் நிலத்தை யொப்பர் கல்லாதவர்.

இது, பிறர்க்குப் பயன்படாரென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கல்லாதவர்-நூல்களைக் கல்லாதவர்; உளர் என்னும் மாத்திரையர் அல்லால் - உடம்போடுள்ளனர் என்று பிறர் சொல்லும் அளவினராதலன்றி; பயவாக்களர் அனையர்-பிறர்க்குப் பயன் படாமையால் ஒன்றும் விளையாத உவர்நிலத்தையே ஒப்பவராவர்.

"களர்நிலத்துப் பிறந்த வுப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
கடைநிலத்தோ ராயினுங் கற்றுணர்ந் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும்."

என்று நாலடியார்(133) கூறுவதால், இங்குக் களர் என்னுஞ் சொற்குக் "காலாழ்களரின் நரியடும்" (500) என்னுங் குறளிற் போல் உளைநிலம் என்று பொருள் கொள்ளினும் பொருந்தும். உளை நிலையான சேற்றுநிலம். கல்லாதான் பயவாமையாவது அறிவாற் பிறர்க்குதவாமை.

"பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவுங்
கல்லாதார் வாழ்வ தறிதிரேற்-கல்லாதார்
சேதன மென்னுமச் சேறகத் தின்மையாற்
கோதென்று கொள்ளாதாங் கூற்று."

என்னும் நாலடிச் செய்யுள்(106) இங்குக் கவனிக்கத்தக்கது. மாத்தல் அளத்தல். இவ்வினை இன்று வழக்கற்றது. மா என்பது பல்வேறு அளவுகுறித்த சொல். மா+அனம்=மானம்=அளவு, படி. (மேலை வடார்க்காட்டு வழக்கு). மா+திரம்=மாத்திரம்=அளவு. அவன் எனக்கு எம்மாத்திரம் என்பது நெல்லைவழக்கு. இதன் விலை எம்மாத்திரம் (எம்மாத்தம்) என்பது மேலைவடார்க்காட்டு வழக்கு. வௌவினன் முயங்கு மாத்திரம் (கலித் 47:22). மா+திரை=மாத்திரை (மருந்தளவு அல்லது எழுத்தொலியளவு). அளவு-அளபு=மாத்திரை.

"மாத்திரை எழுத்தியல் அசைவகை எனா அ"(தொல்.செய்.1.)
"கண்ணிமை தொடியென அவ்வே மாத்திரை".(எழுத்-7),
மா என்பது தொன்று தொட்டு வழங்கி வரும் தமிழ்க் கீழ்வா
யெண்ணுப்பெயர்களுள் ஒன்று. அதன் அளவு(1/20) (1/30)
மா (ம.), மாவு (தெ.).

அரைமா, ஒருமா, ஒருமாவரை (ஒருமாரை), இருமா, மும்மா, நான்மா, மாகாணி என்பன அவ்வளவால் எற்பட்ட எண்ணுப் பெயர்கள்.

ஒரு வேலியில் இருபதிலொன்றான நில அளவு மா எனப்படும்.
"மாநிறை வில்லதும் பன்னாட் காகும் "(புறம். 184)-
ஓர் எடையில் இருபதிலொன்றான நிறையும் மா எனப்படும் (தொல்.180, உரை).

இங்ஙனம் பல்வேறு அளவு குறித்த மா என்னும் முதனிலைத் தொழிலாகுபெயர், ஆரியர் வருகைக்கு முற்பட்ட குமரிநாட்டு முழுத்தூய்மைத் தமிழ்ச்சொல். ஆதலால் இருக்குவேதத்தில் மா, மாத்ரா என்னும் சொற்கள் ஆளப்பட்டிருத்தல் நோக்கி மயங்கற்க. மா என்னும் முதனிலை போன்றே, அதனின்று திரிந்த மாத்திரம், மாத்திரை என்ற சொற்களும் தூய தமிழ் என அறிக. இன்றும் அது மாத்திரம், கேட்டமாத்திரத்தில், மாத்திரைக்கோல் (வரையிட்ட அளவுகோல்) எனப்பொது வழக்காக வழங்குதல் காண்க.

அளபு, மாத்திரை என்னும் இருசொற்களும் தமிழின் சொல் வளத்தையே காட்டும். "மாத்திரையின்றி நடக்குமேல்" (நாலடி242) என்பதனால், மாத்திரை என்பதன் அடிப்படைப்பொருள் அளவு என்பதேயென்று அறிந்து கொள்க. மாத்திரம்-மாத்ர(வ.), மாத்திரை-மாத்ரா (வ.) metrum (L.), metron(Gk.), meter(E.) metre, (E.) என்னும் மேலையாரியச்சொற்கள் mete (மதி=அளவிடு) என்னும் முதனிலையினின்று திரிந்தவை.

மு.வ உரை
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்

சாலமன் பாப்பையா உரை
படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்

நன்றி: ரிஷ்வன்
உயிரோடு இருந்தாலும்
பயிர் விளையாத
களர் நிலத்துக்கே
கல்லாதவர் ஒப்பாவர்.

நன்றி: மழலைகள்
உவர் நிலம் ஒன்றுக்கும் உதவாது. விளையாத உவர் நிலம் ஒன்றுக்கும் பிரயோசனமில்லை. அதேபோல் கல்லாதவர் உயிரோடு இருப்பதால் ஒருவருக்கும் பிரயோசன்மில்லை, அவரால் பயனில்லை என்கிறார் வள்ளுவப் பெருமான். ஆகையால் இளைஞர்களே, மாணவர்களே, பல தடைகள் வந்தாலும் மனச்சக்தியினால் படிப்பை முடிக்க வேண்டும். கல்விக்கு அளவே கிடையாது, படித்துக்கொண்டே போகலாம், யாருக்காவது எதாவது கேட்க வேண்டுமா?"

தூங்காமை கல்வி துணிவுடைமை

குறள் 383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் 
நீங்கா நிலனான் பவர்க்கு
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இறைமாட்சி - அரசியல்; அரசனின் நற்குண நற்செயல்கள்.
தூங்காமை - செயலில் சோர்வில்லாமை; செயல்கள் ஆற்றுவதில் சோர்ந்து நில்லாது, காலம் தாழ்த்தாது, விரைந்து முடிக்கும் தன்மை

கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி, நூல் அறிவு, திறம்பட ஆட்சி செலுத்தும் வகைமுறைகளைக் கற்றுத் தெளிந்த அறிவுடைமை

துணிவு - n. துணி¹-. 1. Confidence,boldness, daring, bravery; ஆண்மை. தூங்காமைகல்வி துணிவுடைமை யிம்மூன்றும் (குறள், 383). 2.Strength of mind; மனத்திட்பம். செய்க துணிவாற்றி (குறள், 669). 3. Presumption, temerity,audacity; துணிச்சல். 4. Ascertainment, certainty; நிச்சயம். 5. Determination, decision;நிச்சயவறிவு. நெஞ்சத்துத் துணிவில்லோரே (புறநா.214, 3). 6. Conclusion; முடிவு. 7. Opinionfounded on facts, knowledge or evidence;கொள்கை. நல்லறிவாளர் துணிவு (ஆசாரக். 18). 8.Belief, trust; நம்பிக்கை. (யாழ். அக.) 9. Branch,department; பகுதி. கலைகளின் றுணிவும் (மணி. 2,29). 10. Purpose, design, aim; நோக்கம். (W.)11. (Mus.) Time-measure; தாளம். தூக்குந் துணிவும் (மணி. 2, 19). 12. (Akap.) Theme in whichthe hero of a poem who meets the heroine forthe first time in a lonely place and doubts thatshe must be a celestial nymph, resolves hisdoubts and finally realises that she is but amortal; தனியிடை எதிர்ப்பட்ட தலைவன்

துணிவுடைமை  - மனத்திட்பத்துடன் முடிவு எடுக்கும் ஆற்றல், முடிவெடுக்கும் திறன், எதைக் கண்டும் உறுதி குலைந்து விடாமல் துணிவுடன் நன்மை செய்கின்ற தெளிவு 

இம் மூன்றும் - இம் மூன்று பண்புகளும், ஆற்றல்களும், குணங்களும் உடையவர்

நீங்கு - III. v. i. leave, depart, go off, wear off, பிரி; 2. come off, get out, be released from, விலகு; 3. be expiated, removed, கழி; 4. be turned away, be warded off, மாறு.
நீங்காமை, neg. v. n. that which is inseparable; 2. unchangeableness.
நீங்கா -நீங்காமை, பிரியாமை
நிலன் - நிலம்
ஆள் - ஆண்மகன்; திறமையுடையோன்; வீரன்; காலாள்; கணவன்; தொண்டன்; ஆட்செய்கை; வளர்ந்தஆள்; ஆள்மட்டம்; அரசு; தொட்டால்வாடி; பெண்பாற்பெயர்விகுதி; பெண்பால்வினைமுற்றுவிகுதி..
ஆள்பவற்கு - அரசருக்கு, வீரருக்கு

முழுப்பொருள்
நிலத்தை / நாட்டை / மக்களை / நிர்வாகத்தை ஆளும்  மன்னருக்கு மூன்று பண்புகள் எக்காலத்திலும் நீங்காமல் இருத்தல் வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அவை யாதெனின் பார்ப்போம்.

தூங்காமை - காலம் தாழ்த்தாது விழிப்புடன் செயல்களை செய்தல். அதாவது பருவத்தே பயிர் செய், சோம்பித் திரியேல் என்று ஒளவையார் சொன்னது போல். ஏன் என்றால் காலம் தாழ்த்தினால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் அல்லது யாருக்கும் பயனில்லாமல் போகும் அதனால் நேரமும் வளமும் விரையம் தான் ஆகும்.  இதனை Bias for Action என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். 

கல்வி - நாட்டையோ / நிர்வாகத்தையோ ஆள பல தளங்களில் அறிவு வேண்டும் உதாரணமாக மக்கள் நலன், கல்வி, போர், படை, நிதி, நீதி, சூழல் (குறள் 742 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்), வெளிநாட்டு உறவு, வர்த்தகம், கலை, இலக்கியம் ஆகிய வற்றில் அடிப்படையைத் தாண்டி அவை மக்களின் நலனுக்கு எவ்வளவு முக்கியம். அவை வாழ்வில் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று உடன்பட்டுள்ளது, பிணைக்கப்பட்டுள்ளது என்று அறிந்து இருத்தல் வேண்டும். கலை இலக்கியம் மக்களை முன்னேற்ற மனதளவில் மேம்படுத்த எவ்வளவு முக்கியம் என்பதனை உணர்ந்திருத்தல் வேண்டும். ஆக நாட்டை ஆள பல கல்வி அறிவு முக்கியம்.

துணிவுடைமை - துணிவு என்றால் மனத்திட்பம். மனத்திட்பம் என்பது பல தளங்களில் வேண்டும். நாம் இச்செயலை முடித்துவிட முடியும் என்ற தன்னம்பிக்கை மிக அவசியம். அதுவே துணிவு. அத்தன்னம்பிக்கை தெளிவில் இருந்து வரும். அத்தெளிவு நாம் ஒரு செயலினை செய்வதற்கு முன்பு செய்யும் ஆராய்ச்சியாலும், திறத்தாலும், அறிவாலும் வரும். இக்கட்டான மோசமான சூழ்நிலைகளில் (போர், இயற்கை பேரழிவு, வர்த்தக சரிவு, நோய்களின் அபாயம்) அதனை கண்டு அஞ்சாமல் இருக்கும் ஊக்கம் வேண்டும். இக்கட்டான நிலை மட்டும் அல்லாது நாட்டின் நலத்திற்கும் வளத்திற்கும் தேவையான முக்கிய முடிவுகளை அச்சமின்றி தீர்க்கமாக முடிவு எடுக்கும் திறன் ஒர் அரசனுக்கு தேவை.

இம்மூன்று பண்புகளும் ஆள்வோருக்கு எக்காலத்திலும் நீங்காமல் இருத்தல் வேண்டும்.

மேலும்: அஷோக் உரை
மேலும்: கோவை வணிகம்
மேலும்: பெட்டகம்

பரிமேலழகர் உரை
நிலன் ஆள்பவற்கு - நிலத்தினை ஆளும் திருவுடையாற்கு; தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும் நீங்கா - அக்காரியங்களில் விரைவுடைமையும், அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடமையும், ஆண்மை உடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா. (கல்வியது கூறுபாடு முன்னர்க் கூறப்படும். ஆண்மையாவது, ஒன்றனையும் பாராது கடிதில் செய்வது ஆகலின்,அஃது ஈண்டு உபசார வழக்கால் 'துணிவு' எனப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவற்றுள் கல்வி ஆறு அங்கத்திற்கும் உரித்து. ஏனைய வினைக்கு உரிய. 'நீங்கா' என்பதற்குமேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க)

மணக்குடவர் உரை
மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியை யாள்பவனுக்கு நீங்காமல் வேண்டும்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நிலன் ஆள்பவற்கு - நாட்டையாளும் அரசனுக்கு; தூங்காமை கல்வி துணிவுடைமை இம் மூன்றும் நீங்கா - அரசக்கருமங்களை விரைந்து செய்யுந்தன்மையும் அவற்றை யறிதற்கேற்ற கல்வியறிவும் அவற்றைச் செய்து முடிக்கும் மனத்திட்பமும் என்றும் நீங்காதிருத்தல் வேண்டும்.

கல்வியறிவினால் வினை வெற்றியாக முடியும் வகை தீர்மானிக்கும் திறமும், துணிவினால் தீர்மானித்ததை நெஞ்சுரத்துடன் நிறைவேற்றுவதும், தூங்காமையால் உரியகாலத்தில் தொடங்கி முடிப்பதும், கூடும் என்பதாம். இவற்றுட் கல்வி ஏழுறுப்புக்களையும் நோக்கியது. ஏனையிரண்டும் வினைக்குரியன. உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.

மு.வ உரை
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை

சாலமன் பாப்பையா உரை
செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.

நன்றி: தினமணி
சோம்பல் கொள்ளக் கூடாது
காலம் தாழ்த்தக் கூடாது
தூங்கும் ஆசை இல்லாமல்
விழிப்பான செயல்கள் வேண்டுமே

கல்வி அறிவு வேண்டுமே
துணிந்து வாழ வேண்டுமே
நாட்டை ஆளும் மன்னருக்கு
மூன்றும் முக்கியத் தேவையே
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்

நன்றி: Indian Finance Bazaar.com
காலம் தாழ்த்தாமல் வேகமாக முடிவெடுக்கும் குணம், துணிவு, முதலீட்டை பற்றிய தேர்ந்த கல்வி ஞானம் இந்த மூன்று பண்புகளும் அதிக இடர்பாடுகள் நிறைந்த முதலீட்டில் முதலீடு செய்யும் பொழுது இந்த குணங்கள் நீங்காமல் இருத்தல் வேண்டும்.

அதிக இடர்பாடுகள் நிறைந்த முதலீட்டில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் வரும், எவ்விதமான சங்கடங்கள் ஏற்படும் என்று உணர்ந்து தயார் நிலையில் இருத்தல் வேண்டும். அது மட்டுமல்லாமல், விரைவாகத்  தீர்மானங்களை இயற்றி அவற்றை செயல்படுத்தவும் வேண்டும். ஆகையால் ஓர் முதலீட்டாளாருக்கு விழிப்புணர்வு, விரைவாக முடிவுகள் எடுக்கும் திறமை இவை கட்டாயமாக இருத்தல் வேண்டும்.

Thirukkural - Management - Leadership
Leadership is more than and beyond these qualities. A leader is known for his actions. A leader should never delay in action. Kural 383 presents three actions of a leader.

A ruler should never lack these three:
Diligence, learning and boldness.

A leader must: 1) never delay in taking actions,  2) continue to possess the right knowledge to take actions, and 3) take decisions courageously.  An inspiring leader is known by and for his decision- making skill. The ability to take right decisions at the right time makes a leader an everlasting ruler. 

English Meaning - As I taught a kid - Rajesh
Not being lethargic or not procrastinating, education, courage are three things a king / leader should always posses. 
1. Lethargy is the root for procrastination. If one is lethargic, one does things late. A work will not have desired impact if not started and completed on appropriate time. 
2. Education is an important things in learning about various stuffs, planning and executing things. Only then a work can be done effectively. Only then one can prevent bad things
3. Courage is essential because if one fears then it leads to inaction which impacts the results. Courage comes form learning and researching about stuffs. I.e. courage comes from being prepared.

Questions that I ask to the kid
What are three things a king / leader should always posses?

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்

குறள் 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
[அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பிறவி - பிறப்பு, சன்னத்துவம், புனர்சென்மம் (Transmigration, subjection of the soul to births)

பிறவிக்கடல் - பிறவியாகிய சமுத்திரம்

பிறவிப் பெருங் கடல் - பிறவியாகைய மிகப்பெரிய சமுத்திரம்

நீந்துதல் - நீரில் மிதந்து செல்லுதல்; கடத்தல்; பெருகுதல்; வெல்லுதல்; கழித்தல்.

நீந்துவர் - (பிறவியில் / வாழ்வில்) வெல்லுவார்

நீந்தார் - கடக்க மாட்டார்கள்  / வெல்ல மாட்டார்கள். கடக்க முடியாமல் மாண்டுவிடுவார்கள்

இறைவன் - தலைவன்; கடவுள்; சிவன்; திருமால்; அரசன்; பிரமன்; குரு; மூத்தோன்; கணவன்; சிவனார்வேம்பு.

அடி - கடவுள்; தலைவி; மூத்தோன்; பெரியோர்பெயருடன்வழங்கும்மொழி; முனிவர்; சுவாமி; குரு; பெருமாட்டி.

சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

சேர்ந்தார் - அடைந்தார்

சேராதார் - சேராதவர்கள்

ஏகதேச உருவக அணி
ஒரு பொருளை உருவகப்படுத்தி அதனோடு தொடர்புடைய மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணியாகும்

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்".
இங்க, பிறவியை கடலாக உருவகப் படுத்தியிருக்கார். ஆனால், 'இறைவனடி சேராதவ'ர உருவகப் படுத்த வில்லையே!!

முழுப்பொருள்
ஒருவரது பிறவியினை வாழ்வினை கடலிற்கு ஒப்பிடுகிறார். மலை, காடு, பாலைவனம் போன்ற வற்றிற்கு ஒப்பிடாமல் கடலிற்கு ஒப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. மலை, காடு, பாலைவனம் ஆகியவற்றில் களைப்பு அடைந்தால் சிறிது நேரம் இளைப்பாற முடியும். ஆனால் கடலில் அப்படி முடியாது. நீந்திக்கொண்டே இருக்க வேண்டும். அது போலவே வாழ்வும். நீந்திக்கொண்டே இருக்க வேண்டும். கடல் என்பது பல இன்ப துன்பங்களை கொண்டது.  மிருகம், சுனாமி, சுழல் போன்றவற்றின் ஆபத்துக்கள் நிறைந்த இடம். எங்கே எது வரும் என்று தெரியாது. ஆனால் வரும். அதனை கடக்கவில்லை என்றால் கடலில் மூழ்கி இறக்க வேண்டும். அதுப்போலவே வாழ்வும். அதில் பல ஏற்ற தாழ்வுகள் வரும். அதனை கடக்க வேண்டும்.

பெருங்கடல் என்று கூறியது, கடலில் நீந்தப்போகும் ஒருவருக்கு கரையென்பது காணாமலே போய்விடுமோ என்னும் களைப்பும், சோர்வும் ஏற்பட்டுவிடும் என்பதால். கடல் என்று ஒன்றிருக்கும் போது, கரையிருக்கத்தானே வேண்டும். அந்தக் கரையென்பதே பிறந்திறக்கும் பேரவத்தை நீங்கிய பெருநிலை. இறைநிலையை அடைந்த உணர்வு!

ஆனால் கடலை கடக்க மனமும் உடலும் இலகுவாக இருக்க வேண்டும். தைரியமாகவும். அதற்கு ஒரு பிடிப்பு வேண்டும். அதுவே கடவுள். வாழ்வில் இறைவனிடம் சரணடைந்தால் பிறவி என்னும் பல இன்ப துன்பங்களை கொண்ட பெரும் சமூத்திரத்தை கடக்க முடியும். அப்படி செய்வோர் இவ்வாழ்வை கடப்பர். இல்லையே வாழ்வில் தோற்று இறப்பர்.

இறைச்சிந்தனைக் கொண்டோர்க்கு மனவுறுதியும், அதனால் கடந்துவிடலாம் என்னும் நம்பிக்கையும் உண்டாகுமாதாலால், அவர்க்கு அது கடக்க எளிதாகிறது. பிறர்க்கு அது முடிவில்லாததும், கரையே இல்லாததைப் போன்ற தோன்ற மாயத்தையும், அயர்வையும் உண்டாக்குகிறது.

முதலில் படிக்கும் போது இக்குறள் எட்டாவது குறள் போலுள்ளதே என்ற ஐயம் ஏற்பட்டது. ஊன்றிப் படிக்கும் போது நுண்ணிய வித்தியாசம் புலப்பட்டது. அந்த மயக்கத்துக்குக் காரணம், “ஆழி” என்ற சொல்லுக்கு பெரும்பாலான உரையாசிரியகள் கூறியிருக்கும் பொருளால்தான்.

எட்டாவது குறளில் “ அறவாழி”, “பிறவாழி” என்ற சொற்களின் விகுதிச் சொல்லான “ஆழி” கடல் என்ற பொருளில்தான் கோர்க்கப்பட்டதா என்கிற ஐயம் ஏற்படுகிறது. “அறக்கோட்பாடுகளின் படி வாழுகின்ற அந்தணன் அல்லது இறைகுணத்தான்” என்ற பொருளிலும், அவ்வாறு அறக்கோட்பாடுகளின் படி வாழவில்லையானால், “பிறவாழி” என்கிற “பொருள்”, “இன்பம்” என்னும் கடல்களைக் கடத்தல் (அவற்றின் உண்மை நிலையுணர்ந்து) அரிதாகும் என்றும் இருக்கலாம்.

“நீந்தல்” என்பது “கடத்தல்” என்ற பொருளைக் கொண்டதாக எடுத்துக்கொண்டால், “ பிற வாழ் முறைகளான, பொருள், இன்பம் (அறக்கோட்பாடுகளின் படி வாழ வேண்டியவை) இவற்றை கடத்தல் கடினம் என்றுதான் கொள்ளவேண்டும்.  கடல் என்றே பொருள் கொண்டாலும், “அறமாகிய கடலை” என்றது, அதுபோல் வாழுதல் மிகவும் கடினம் என்பதை உணர்த்துவதாகவும் இருக்கலாம்.

மேலும் : அஷோக் உரை
மேலும் : சரணாகதி மகத்துவம் (தமிழ் இந்து)


பிறவிப்பெருங்கடல் நீந்துவது பற்றி வள்ளுவர் சொல்வதன் பொருள் என்ன? சமண , இந்து மரபுகளின்படி இந்தப் பிறவியில் அறம் பொருள் இன்பம் ஆகியவற்றை அடைந்து நிறைவுறுபவர் வீடுபேறு அடைகிறார். வீடுபேறு என்பது மறுபிறவி என்னும் சுழலில் இருந்து விடுபடுவது. அதையே பிறவிப்பெருங்கடல் நீந்திக் கடத்தல் என்கிறார்.

அதாவது இங்கே அறம் நிறைந்து, அவ்வறம் செய்வதற்கான பொருள் அடைந்து, இன்பமும் நிறைந்து வாழ்ந்து செல்வதையே வள்ளுவர் குறிப்பிடுகிறார். அதுவே வீடுபேறு.

ஒருவர் வாழ்வின் இறுதியில் இவ்வாழ்வில் நிறைவுற்றேன் என அகத்தே உண்மையாக உணர்வார் என்றால் அவர் வீடுபேறு அடைகிறார். குறையுடன் உணர்கிறார் என்றால் அவர் விடுதலை அடையவில்லை.

அதற்கு வாழ்ந்து நிறைவது முக்கியம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று அதையே வள்ளுவர் சொல்கிறார்.

வள்ளுவர் வாழ்வைத் துறக்கச் சொல்லவில்லை. சிறக்க வாழும்படிச் சொல்கிறார். வாழாது செல்லச் சொல்லவில்லை. வாழ்ந்து நிறையவே அறிவுறுத்துகிறார்.

ஜெ

நூல் எட்டு – காண்டீபம் – 32நூல் எட்டு – காண்டீபம் – 33
பிறவியை பெருங்கடல் என்று வள்ளுவன் சொல்வது அதன் நீள அக ஆழத்திற்காக மட்டும்தானா? பூமி பெரியது பூமியைவிட கடல்பெரியது கடலைவிட வான் பெரியது. கடலைவிட பெரிய வானத்தோடு ஏன் பிறவியை வள்ளுவன் ஒப்பிட வில்லை?  கடலில் உள்ள அலைகள் வானில் இல்லை அதனால் பிறவியைக் கடல் என்றான் வள்ளுவன் மற்றும் வான் தனது இன்மையாலேயே இருப்பதுபொலவும் தோன்றக்கூடியது. அலைகள் கடலில் உள்ள முத்துக்களை அள்ளிவந்து கரைசேர்க்கும். கரையில் உள்ள முத்துக்களை இழுத்துச்சென்று கடலில் வைக்கும். இந்த ஓயாத விளையாட்டு கடலின் பிறவிக்குணம். இந்த அலைகடலின் குணம் பிறவிக்கும் இருப்பதால் பிறவியும் கடலும் ஒன்று. முத்துக்கள் என்றால் முத்தியர்கள், முத்தியர்களையும் பிறவிப்பெருங்கடல் விடுவதில்லை.

பூமிப்பெரியது, பூமியைவிட அலைகடல்பெரியது, அலைகடலிலும் வான்பெரியது. பூமியை கடலை வானை அளந்த நாராயணன் பாதம்பெரியது. நாராயணன் பாதத்தை  தாங்கும் பக்தன் இதயம் பெரிதினும் பெரியது. இது கதை, இதை நம் அன்னை ஔவை பெரியது கேட்கும் முருகனிடம் கதையாக சொல்லாமல் பாட்டாகவே பாடிவிடுகிறாள்.

வானளந்த நாராயணன் பாதம் பெரியதாகவே இருக்கட்டும் அல்லது ஆலிலையில் துயிலும் அவன் அவன் சின்னஞ்சிறு உடம்பின் சிறுபாதம் சின்னதாகவோ இருக்கட்டும், எதுவும் ஆச்சரியப்பட வைக்கவில்லை, ஆனால் பிறவிப்பெருங்கடலின் அலை மடிப்புகள்  ஆச்சரியப்படவைக்கின்றன. அச்சப்பட வைக்கின்றன.

ஒரு துளியவு விழைவு பெரும் அலைகளாகி, சுனாமிபோல் சுருட்டி உயிர்களை கரையில் அல்ல இந்த உலகத்திற்கு அப்பால் உள்ள உலகத்திற்கு வீசுவதை நினைத்து திகைக்கிறேன். துளியளவு பொன்னில் ஏற்பட்ட விழைவால் தோழிகளுடன் வர்கை காமினி காஞ்சனம் என்னும் அலைகளால் தூக்கி குபேரபுரியில் கரை ஒதுக்கப்படுகிறார்கள். உண்பதும்பொன், உடுத்துவதும்பொன், சுவாசிப்பதும்பொன், முகர்வதும்பொன், கேட்பதும்பொன் என்று பொன்னாகிய உலகத்தில் ஏற்படும் சலிப்பால், நிழல் இல்லா  உலகில் நிழலை உண்டாக்கி தனது நிழலில் தானே அமர்ந்து  வாழ்கிறார்கள். தேவர் உலகில் எது விழைவாக இருந்ததோ அதுவே குபேரபுரியில் சலிப்பாகமாற அந்த சலிப்பே ஒரு அலையாகி அவர்களை அங்கிருந்து சுருட்டி எடுத்து புவியில் மானிடராய் விழச்செய்கிறது. மண்ணில் கன்னியாய், மனைவியாய், அன்னையாய் வாழவேண்டியவர்கள். மலரோடு ஆடியும். பாடியும், விளையாண்டும் துயின்றும் வாழவேண்டியவர்கள் அப்படி வாழாமல் ஐயத்தின் அலைகரங்களில் சிக்கி, வினாக்களாய் உருண்டு சுருண்டு,   இன்மையின் விளிம்பில் ஐயத்திற்கு அப்பால்  நிற்கும் பூரணரை இன்மையில்   இருந்து இழுத்து வந்து இருப்பில் வைத்து ஐயத்தில் நிலைக்க வைத்த பாவ அலை அவர்களை அடித்துச்சென்று  எப்போது விண்ஏறுவோம் என்று அறியா பெரும் ஐயத்தில் கண்ணீர் அலையில் முதலையின் பிறவிக்கடலில் அவர்களை தள்ளிவிட்டு செல்கிறது. இதுவரை இருந்த பிறவிகள் எல்லாம் அவர்களை ஒரு உலக வாழ்க்கையை உடையதாக இருந்தது. இந்த வாழ்க்கை மண், நீர் என்று ஈருலக வாழ்க்கையாக இமைந்த கொடுமைதான் பிறிவிப்பெரும் அலையின் சுழற்சியின் அதிசயம். ஓயாத கண்ணீர் வாழ்க்கை.

வர்கை மற்றும் அவளின் தோழிகள் வாழ்க்கை பிறவிப்பெருங்கடலாகி அலைக்கழிப்பதைப்பார்க்கும்போது உள்ளம் பதறுவது ஒரு எல்லைக்குள் என்றாலும், ஐயத்திற்கும் அப்பால் இன்மையின் வெளியில் கரும்புள்ளியே இல்லாத ஒளிவெளியில் நின்ற பூரணர் தனது சடைகளை தன்கையாலேயே பிய்த்துக்கொண்டு அலைந்து திரிந்து இறந்து மீண்டும் மறு பிறவியில் விழுகிறார் என்றால் பிறவிப்பெருங்கடலில் அலைவேகத்தை உலகளந்தான் பாதம் அன்றி மானிடப்பாதம் தடுக்கவல்லதோ!

““தவம் முதிரும்தோறும் முனிவரை வெல்வது எளிதென்று உணர்க!”  என்ற நாரதரின் வார்த்தையில் முனிவனும் விழைவின் பிடியில் அன்றி தனித்திருக்க முடியாதவன் ஆகின்றான் என்பதை உணர்கின்றேன். காமம் என்றாலும் தவம் என்றாலும் அது விழைவின் பேரலையே! அந்த பேரலை சுழற்றி யாரை எங்கு எறியும் என்பதை அந்த பிறவிப்பெருங்கடல் நீந்தவைக்கும் ஓடக்காரன் அன்றி வேரு யார் அறியமுடியும்.


அன்புள்ள ஜெ, வர்கையின் கதை வழியாக எத்தனை பெரிய பிறவியின் கடலை காட்டி அதன் சுனாமைி அலையை அள்ளிவந்து கொட்டி மூழ்கடிக்கின்றீர்கள். மூழ்கடிக்கின்றீர்கள் என்பதை விட அலையாகி சுருட்டி இழுத்து மூச்சுமுட்ட வைக்கின்றீர்கள். ஐந்து முதலையின் கதை என்ற புரணத்திற்குள் மறைந்து இருக்கும் வாழக்கையின் அலைகளை காட்டும்போது பிறவின் சுமையை உணரமுடிகின்றது. மீண்டும் தொடங்கிய திருக்குறளிலேயே வந்து நிற்கின்றேன்.   (--- ராமராஜன் மாணிக்கவேல்.)

ஒப்புமை
”மறுபிறப் பறுக்கும் மாசில் சேவடி” (பரி 3:2)
“அறவியங் கிழவோன் அடியிணை யாகிய
பிறவி யென்னும் பெருங்கடல் விடூஉம்
அறவி நாவாய்” (மணி 11:23-5)

“பிறவியுமற விசிறுவர் ... மணிமிடறன தடியிணை தொழுமவரே” (சம்பந்தர்.சிவபுரம் 4)
“உமதடி தொழும் இயலுளார் மறுபிறப் பிலரே” (சம்பந்தர்.சின்னம்பர் 9)

“அம்மை யேபிற வித்துயர் நீத்திடும்.....
இடைமரு தன்கழல்” (அப்பர் இடைமருது 4)

“........... அடியார்பால்
இணையில் பவங்கிளர் கடல்கள் இகந்திட இருதாளின்
புணையருள் அங்கணர்”   (பெரிய.திருஞா 83)

“புணைவன் பிறவிக் கடல்நீந்து வார்க்கே” (திருவாய் 2.8:1)

“ஆழ்கடற் புணையி னன்ன அறிவரன் சரண்” (சீவக 380)

“.......பிறவிக் கடலகத்துள்
பாத கமலம் தொழுவேங்கள் பசையாப் பவிழப் பணியாயே” (சீவக.1242)

”அற்றார் பிறவிக் கடல்நீந்தி ஏறி” (சுந்தரர். நெல்வாயில் 3)

“தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்
தடந்திரையா லெற்றுண்டு” (திருவா.31)

“பிறப்பென்னும் பெருங்கடல்”(கோயில்நான் 16)

“பிறப்பெனும் பெருங்கடல்” (கம்ப.மந்திரப் 21)

”இல்லை பிறவிக் கடலேறல்....
சடையானைச் சாராதார் தாம்” (சிவபெருமான் இரட்டை 5)

“சுருக்கிடை யுன்னொரு துணைவன் தூயதாள்
ஒருங்குடை யுணர்வினார் ஓய்வில் மாயையின் 
பெருங்கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல்
கருங்கடல் கடந்தனன் காலி னால்என்றான்” (கம்ப.உருக்காட்டு 97)


பரிமேலழகர் உரை
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.).

மணக்குடவர் உரை
பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இறைவன் அடி (சேர்ந்தார்) - இறைவன் திருவடியாகிய புணையைச் சேர்ந்தவர்; பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - பிறவியாகிய பெரியகடலைக் கடப்பர்; சேராதார் நீந்தார் - அப்புணையைச் சேராதவர் அக்கடலைக் கடவாதவராய் அதனுள் அழுந்துவர்.

வீடுபேறுவரை கணக்கில் கழிநெடுங்காலம் விடாது தொடர்ந்து வருவதாகக் கருதப்படுதலின், பிறவியைப் பெருங்கடல் என்றார். பிறவி வாழ்வு எல்லையில்லாது தொடர்ந்துவரும் துன்பம் மிகுந்த நிலையற்ற சிற்றின்பமேயாதலால், அதனின்று விடுதலைபெற்று நிலையான தூய பேரின்பந்துய்க்கும் பிறவாவாழ்வைப் பெறும்வழியை இக்குறள் கூறுகின்றது.

சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். பிறவியைப் பெருங்கடலாக உருவகித்து இறைவனடியைப் புணையாக உருவகியாதுவிட்டது ஒருமருங்குருவகம். புணை யெனினும் கலம் எனினும் ஒக்கும்.

மு.வ உரை
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

பிறப்பு இறப்பிலான் பதமலர்ப் பற்றுவார்
பிறவிப் பிணியெனும் பெருங்கடல் நீந்துவர்
பிறப்பு இறப்பிலான் பதமலர்ப் பற்றிலார்
பிறவிப் பிணியெனும் வினையுளே யாழ்வரே! 

நன்றி: Interesting Tamil Poems
இந்த குறளுக்கு பொதுவாகப் பொருள் சொல்லும் போது பிறவியாகிய பெருங்கடலை நீந்துபவர்கள் இறைவனின் திருவடியை அடைவார்கள். மற்றவர்கள் அடைய மாட்டார்கள் என்று கூறுவார்கள்.

பரிமேல் அழகர் உரையும் அப்படித்தான் இருக்கிறது 

இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் = இறைவன் அடி என்னும் புணையைச்சேர்ந்தார் பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்;
சேராதார் நீந்தார் = அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்.

இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்திப்போமே.

ஒரு பரிட்ச்சை இருக்கிறது. அதை எழுதினால் தேர்ச்சி பெறலாம் என்று சொன்னால் அர்த்தம் இருக்கிறது. எழுதாவிட்டால் தேர்ச்சி பெற முடியாது என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும் ?

"நீந்தார் இறைவனடி சேராதார்" என்று சொல்லுவதன் மூலம் வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் ?

நீந்தாதவர்கள் கட்டாயம் இறைவனடி சேர முடியாது. அதாவது பரீட்ச்சை எழுதாவிட்டால் கட்டாயாம் தேர்ச்சி பெற முடியாது. அதில் ஒண்ணும் சந்தேகம் இல்லை.  

சரி பரிட்ச்சை எழுதியவர்கள் எல்லோரும் தேர்ச்சி பெறுவார்களா என்றால், அதுவும் இல்லை. நன்றாகப் படித்து, ஒழுங்காக எழுதினால் ஒரு வேலை தேர்ச்சி பெறலாம். 

இந்த பிறவியான பெருங்கடல் ஆழமானது, அகலமானது, ஆபத்து நிறைந்தது, நிற்க இடம் இல்லாதது, ஒதுங்க நிழல் கிடையாது....எந்நேரமும் நீந்திக்கொண்டே இருக்க வேண்டும். நிறுத்தினால் மூழ்கி விடுவோம். 

பிறவியை பெரிய மலை என்றோ, அடர்ந்த காடு என்றோ சொல்லி இருக்கலாம். நிலத்தில் நடந்து போனால், சற்று நேரம் நின்று இளைப்பாறிக் கொள்ளலாம். கடலில் இளைப்பாற முடியாது. 

எந்நேரமும் அவன் திருவடி நோக்கி நீந்திக் கொண்டே இருக்க வேண்டும். கை வலிக்கிறதே, கால் வலிக்கிறதே என்று நிறுத்தி விட்டால், உள்ளே போக வேண்டியதுதான். 

நீந்தார் இறைவனடி சேராதார். 

நீந்துங்கள்.

திருவடியை உணராமல் அடியவர் என்னும் பெயர்ப் பொருளை உணர்வது அரிதினும் அரிதாகும். உடம்புடைய உயிர் கட்குப் பெரும்பாலும் அவ்வுடம்பின் அடிப்பகுதியை அடி என்பது வெளிப்படை. உருவம், அருவம், அருவுருவம் மூன்றும் இல்லாத கடவுளுக்கு அடி உண்டு என்றால், உருவத்தில் கொள்ளும் அடி அல்லாத வேறு அடியே அங்குக் கொள்ளற்பாலது.

உருவத்தில் உள்ள அடி அருவுருவத்திலும் அருவத்திலும் இருத்தல் கூடாது. இருப்பின், அருவம் என்றும் அருவுருவம் என்றும் சொல்லப்பெறுமோ? உருவம் என்றே கொள்ளப்படும். அம் மூவகை வடிவங்களையும் கடந்த பெருநிலையில், உணர்ந்து வழிபடப் பெறும் அடி உண்டு. அத் திருவடியை அடையும் பொருட்டே, உருவத் திரு வடியைக் கொள்ளல் வேண்டும். திருக்கோயில்களில் திருவுருவத்தில் திருவடியை வழிபடும்போதும் முடிவான திருவடியை நினைந்து போற்றுவதே வீடுபேற்றிற்குத் தலைசிறந்ததொன்றாகும். அத் திருவடியைச் சேராதார் பிறவிப் பெருங்கடலை நீந்திப் பேரின்பக் கரையை எய்தார்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடி சேரா தார்"

என்பது பொய்யா மொழி. அத்திருவடிச் சேர்வும் அதனால் எய்தும் பேரின்ப வாழ்வும் திருக்கோயில் முதலியவற்றில் உருவத் திருமேனி களில், வைத்து வழிபடப்பெறும் திருவடியை மறவாது போற்று வார்க்கே கிடைக்கும். ஏனையோர் எத்தனை பிறவியெடுக்கினும் போற்றார் ஆயின் வீடு பெறல் அரிதே.

தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கே மனக் கவலை மாற்றல் எளிது. மற்றையோர்க்கு அரிது. அத்தாள் சேர்ந்தாரே நிலமிசை (பேரின்ப வீட்டில்) நீடுவாழ்வார். மும்மலமும் நீங்கிய உயிரின் அறிவில் தங்கி நின்று உணர்த்தும் முதன்மை யுடையவனை நம்மைப்போல ஒரு வடிவுடையனென்று மட்டும் கொண்டு, அவனது உணர்வுருவை மறந்தால் நமக்கு உய்யும் வழியே இல்லையாம். அதுவே (சத்திரூபம்) அருளுருவம். அதுதான் மலம்நீங்கிய உயிர்கட்கு நிறையுணர்வு (வியாபக ஞானம்) விளைப்பது. அத்தகைய நிறையுணர்வு தான் உயிர்கள் அடையும் பேரின்பத்துக்கு உருவம். அப்பேரின்ப நுகர்ச்சியே `சிவாநந்தாநுபூதி' எனப்படும். அச் சிவாநந்தாநுபூதியைத் திருவடி என்பது சைவ மரபு. "முதல்வன் திருவடியாகிய சிவாநந்தாநுபூதியைத் தலைப்படும்" என்பது சிவஞானபோதமாபாடியம் ( சூ. 11.) வசனம் "மலவாசனை நீங்கினால் அன்றி முதல்வனது திருவடியாகிய சிவாநந்தத்தை அநுபவித்தல் கூடாது" (௸ சூ.10. அதி 1.) `திருவருளான திருவடி' என்று அத்திருவருளுருவையும் கூறுதல் உண்டு. குண குணிகட்குப் பேதம் கொள்ளாத நிலையில் அது வழங்கும்.

`யான் எனது என்று அற, உயிரில் பரை (சிவசத்தி) நின்றது அடியாம்' என்பது உண்மை நெறிவிளக்கம். "என்னது யான் அற்றால் இறைவனடி தானாகும்" என்பது அநுபோக வெண்பா. அத்தகைய உண்மையில். `யான்' `எனது' என்னும் இருவகைப் பற்றும் அற்றுத் திருவருளாய்ச் சிவாநந்தத்தை நுகரும் அன்பரே அடியார் என்னும் திருப்பெயர்க்கு உரியவர். அதுபெறமுயலும் உண்மையாளர்க்கும் உபசாரத்தால் `அடியார்' என்னும் அருட்பெயர் உரித்தாயிற்று.

நன்றி: ஆன்மீகம் (குங்குமம்)
இப்பிறவியில் இறைவனைச் சரணடைந்து வாழ்ந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம். இது விஞ்ஞான பூர்வமாகவும் உண்மைதான். இறைவனிடம் நாம் நம்மைப் பற்றிய பொறுப்பை முழுமையாக ஒப்படைத்துவிட்டு வாழும்போது மனத்தில் நிம்மதி தோன்றும். எனவே கவலை ஒழியும். ரத்த அழுத்தம் சமனப்படும். ஆரோக்கியம் மேலோங்கும். அப்போது ஆயுள் நீடிப்பது இயல்புதானே? 

கவலைப்படுபவர் எல்லாம் நாத்திகரே!’ என இதையே அழகாகச் சொன்னார் மகாத்மா காந்தி. கடவுளை முற்றிலும் நம்பி நம்மை ஒப்படைத்தால் கடவுள் எப்படியும் நம்மைக் காப்பாற்றுவார் என்ற திடசித்தம் தோன்றும். அப்போது கவலையே வராது; வரக்கூடாது. வள்ளுவருக்கும் ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் இருந்த அத்தகைய பக்தி நமக்கு இருக்கிறதா? இருந்தால் அடுத்த பிறவியில் நமக்கு `இடும் - பை’ கிடையாது. 

ஏனென்றால் நமக்குப் பிறவியே இனிக் கிடையாது. இறைவன் சரணங்களை இறுகப் பற்றிக் கொண்டால்தான் இந்த நிலை தோன்றும். இறைவன் அடியைச் சேர்ந்தவர்களே பிறவி என்கிற பெரிய கடலைக் கடப்பார்கள் என்பதை இன்னொரு குறளிலும் வலியுறுத்துகிறார் வள்ளுவர். 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவனடி சேரா தார்!’ 

- என்கிறது கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் கடைசிக் குறள். இறைபக்தியின் இறுதி இலக்கு என்பது பிறப்பற்ற நிலைதானே? எனவேதான் அதிகாரத்தின் இறுதிக் குறளில் இந்தக் கருத்தை மீண்டும் வள்ளுவர் சொன்னார் போலும். பிறவிகள்தான் எத்தனை வகை! மனிதப் பிறவி மட்டும் தானா, இன்னும் எத்தனையோ ஆயிரங்கோடிப் பிறவிகள் உண்டே? ஒரு காலில் வாழும் தாவரங்கள்! இருகாலில் வாழும் பறவைகள்! நான்கு கால்களில் வாழும் விலங்கினங்கள்! காலே இல்லாமல் வாழும் கடலுயிர்கள்! மாணிக்கவாசகர் தாம் எப்படியெல்லாம் பிறந்து பிறந்து இளைத்திருக்கக் கூடும் என்பதைப் பட்டியலிடுகிறார்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் மிருகமாய்ப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அரசர் ஆகி முனிவராய்த் தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எலலாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்...’

- என மாணிக்கவாசகர் அடுக்கும்போது கல்லையும் கூடப் பிறப்பில் ஒன்றாய்ச் சேர்த்துக் கொள்கிறார்.

நன்றி: அக்கினிக்குஞ்சு (சங்கர சுப்பிரமணியன்)
திருவள்ளுவப் பெருமான் கடைசியாக பத்தாவது குறளில் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க வேண்டும் என்ற கருத்தை வழுவாது உரைக்கிறார்.

 “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்” என்று நீதி சொல்கிறது குறள்.

பிறவி என்பது பிறந்தபின் வாழ்வது என்றாலும் அது அவ்வளவு சுலபமானது அல்ல. அதனால்தான் அதைப் பிறவிப் பெருங்கடல் என்றார் வள்ளுவனார். அதற்காக பிறவி கடினமானது, அது ஒரு மாயை, அம்மாயையிலிருந்து விடுபடவேண்டுமானால் அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்று எண்ணி பயப்பட வேண்டிய அவசியமுமில்லை. பிறவியைப் பெருங் கடலுக்கு ஒப்பிட்டு அது எவ்வளவு சீற்றமும் சிக்கலும் கொண்டது என்றும் அதன்

பேராற்றலை உணர்த்துவதுடன் அதனால் ஏற்படும் மன நிலையையும் அழகாக விளக்கியுள்ளார். பெருங்கடல் அமைதியாயும் இருக்கும் சீறிச் சீற்றமடைந்து ஆழிப் பேரலையையும் உண்டு பண்ணும். அதில் சிறு மீன் இனங்களும் இருக்கும் சுறா திமிங்கலங்கள் போன்ற பெரிய உயிரினங்களும் இருக்கும். இதுபோல்தான் வாழ்க்கையும் எப்போதும் இன்பமாகவே இருக்காது, துன்பமும் இருக்கும். வறுமையும் செழுமையும், பிறப்பும் இறப்பும், நோயும் நலனும் கலந்ததுதான் வாழ்க்கை. பிறப்பு என்றால் கட்டாயம் இறப்பும் இருக்கும். நம் குடும்பத்தில் ஒருவர் இறக்கும்போது துக்கமும் ஒரு குழந்தை பிறக்கும்போது மகிழ்ச்சியும் உண்டாவதில்லையா? 

வறுமை மிகவும் கொடியது. வறுமை வந்தால் அதிலிருந்து மீள்வதற்கு வழி தேடவேண்டும். வாழ்வில் தோல்வியைச் சந்திக்கும்போது துவண்டு விடக் கூடாது. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்ற் புரட்சிக்கவி பாடியதை நினைவில் கொண்டு வறுமையிலும் செம்மை காணவேண்டும். இவ்வாறெல்லாம் இருக்கும் இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கையை வாழவேண்டும்.

இப்போது இறைவன் என்றால் யார் என்று பார்ப்போம். இங்கு இறைவன் என்றால் தலைவன் என்றே எடுத்தாள வேண்டும். தலைவன் என்றால் ஒரு நாட்டின் அரசன். அந்த அரசன் எப்படி இருக்க வேண்டும்? அவன் நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும். தன் நாட்டின் மீது பகைவர் படையெடுத்தால் அவர்களை எதிர்த்துப் போரிட வேண்டும். போர்வீரர் போர்க்களத்தில் மடிதல் கண்டு கலங்கக் கூடாது. அதேபோல நாட்டில் கொடிய நோய் பரவினால் அதைத் தடுக்க என்னென்ன வழிமுறைகள் உண்டோ அத்தனையையும் பின்பற்ற வேண்டும். தன் நாட்டு மக்கள் செழிப்பாக வாழ எல்லா வழிகளையும் ஆய்ந்து அறிய வேண்டும். நீர் நிலைகளை பேணிக்காத்து வானம் பொய்க்கும் காலத்தில் எப்படி சமன்செய்வது என்பதில் தேர்வு பெற்றிருத்தல் வேண்டும்.

ஒரு நாட்டின் அரசன் நாட்டு மக்களுக்கு நன்மையையே செய்யும் செங்கோலனாகவும் அல்லது நாட்டு மக்களின் மேல் அக்கறையற்ற அதிக வரியிட்டி மக்களை கொடுமைப் படுத்தும் கொடுங் கோலானாகவும் இருக்கலாம். எப்பவும் நாட்டை விரிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே போர் போரென்று போரில் ஈடுபட்டு தன் படை அதனால் அழிவதைப் பற்றிக் கூட கவலை கொள்ள மட்டான். இன்னும் சில அரசர்கள் சிற்றின்ப கேளிக்கைகளில் ஈடுபட்டு எப்பொழுதும் அந்தப்புரமே கதியென்றும் கிடப்பார்கள். அதனால் தான் அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்று சொன்னார்கள்.

பிறவியில் வரும் இன்ப துன்பங்களை ஏற்று நீந்த முடியாதவனால் அதாவது வாழ முடியாதவனால் ஒரு நாட்டின் தலைவனின் கீழ் வாழமுடியுமா? நிச்சயமாக சிரமமான இவ்வுலக வாழ்க்கையை வாழ முடியாதவனால் ஒரு நாட்டு அரசனின் கீழ் வாழவே முடியாது.

இதைத்தான் திருவள்ளுவர் இன்ப துன்பங்கள் நிறைந்த பிறவியாகிய பெருங்கடலெனும் வாழ்க்கையை நீந்திக் கடக்க முடியாதவர்களல்  ஒரு நாட்டின் தலைவனின் கீழ் வாழ முடியாது என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். இதன் மூலம் இப்புவியில் வாழ வேண்டுமானால் இன்ப துன்பங்களை கடக்க வேண்டிய

அவசியத்தை உணர்த்துவதுடன் அப்படி கடப்பவர்கள் ஒரு நாட்டின் தலைவன் எப்படிப் பட்டவனாக இருந்தாலும் அத்தலைவன் கீழ் வாழ முடியும் என்பதையும் தெளிவு படுத்துகிறார். திருவள்ளுவர் எவ்வளவு தூரம் முன்னமே உணர்ந்து நாம் இன்று எப்படிப் பட்ட தலைவரின் கீழெல்லாம் வாழ்ந்து வருகிறோம் என்பதைக் கூறியிருக்கிறார் என்பதை எண்ணும்போது உண்மையிலேயே வியப்பாய் உள்ளது.   
–சங்கர சுப்பிரமணியன்.


ஆத்மா அழிவற்றது. அது அழியும் உடலில் புகுந்து இயக்கம் பெருகிறது. ஒரு பிறவியில் வாழ்ந்து, உடல் அழிந்து, விடுபட்டு மீண்டும் வேறொரு உடலில் புகுந்து வாழ்ந்து கொண்டே இருக்கும் தன்மையுடையது. இது இறைவனின் திருவடியை அடைந்த பின்னரே அமைதியுறும். அதுவரை சுழன்று கொண்டே இருக்கும். பிறவி அல்லலுற்றது. பிறவி துன்பகரமானது. ஒருவன் மீண்டும் மீண்டும் பிறவாது இறைவன் அடி சேர வேண்டும். அதற்கு அவன் இறைவனை நாடி அவன் அருள் பெற வேண்டும். புண்ணியம் செய்ய வேண்டும். அந்த இறைவனே நம் பிறப்பறுக்க உதவுகிறான். ஆகவே, தன் வாழ்நாளில் ஒருவன் தூய்மையாக வாழ்ந்து இறைவனை நாடி அவன் திருவருள் பெற்று மீண்டும் பிறவாத வரம் பெற்று அவனின் திருவடி சேர்வதையே நோக்கமாக கொள்ள வேண்டும். இதையே வள்ளுவரும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்.

என்கிறார்.

English Meaning - As I taught a kid - Rajesh
One's life is compared with an ocean. Not with mountain, forest, desert. Because in mountains, forest, desert when we feel tired, we can take rest. But in ocean, we cannot stop for little while. We have to continuously swim. Ocean has both happy zones and sad zones. Animals, tsunamis, whirlpools are the dangers in it. We can't predict when and where it can come from. But it will come. If we don't cross it, we will sink and die. So is life. There will be lots of ups and downs in life. We have to cross it. Or else, we will sink in the desires. 

When we talk of mighty ocean, we might get a doubt about the shore. But, when there is a sea, there is a seashore.  When we reach that shore, we reach that highly spiritual level of Godliness. Satisfaction. 
But to cross the ocean, our body and mind has to be light. We have to be courageous. We have to have faith. That faith is God. When we surrender to God, we have cross the mighty ocean successfully. Else, the person without faith will fail.

In Jainism, the belief is, when one does his work, earns money, enjoys happiness and attain moksha. One has to cross each stage to attain that shore/moksha. At the end of life, one would be able to say that he had lived his fully/satisfactorily only when he feels inside his heart that he crossed every stage doing his duty, earning and enjoying. Otherwise, if one feels unsatisfied due to not doing his duty or not earn or not enjoying then he is not going to attain that satisfaction/moksha.

Living life fully to ultimate satisfaction is important. Such a fulfilled person will be kept on the ranks of god. Valluvar doesn't say to renounce. He says one to live life excellently. Have a fulfilled life not an empty life. 

Questions that I ask to the kid
Relate life to ocean. What do you think you need? 
Should we life a fulfilled life or renounce desires in order to not have disappoints and pains?