Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

உள்ளியது எய்தல் எளிதுமன்

குறள் 540
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் 
உள்ளியது உள்ளப் பெறின்
[பொருட்பால், அரசியல்,  பொச்சாவாமை]

பொச்சா -  பொச்சாப்பு - மறத்தல் - மறதி

பொச்சாவாமை  - மறவாமை - மறதி இல்லாமை - மறதியின்மை

உள்ளி  - மனதில் நினைத்து
உள் - உள்ளே - மனதில்
இ - demonstrative prefix, this, இந்த. As to combine. see, அ dem. Note இப்பால், இம்மாத்திரம், இத்தனை, இவ் வளவு, etc. -- are combinations; 2. a feminine appell, termination as, கூனி; 3. see any grammar for other terminations.
உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப் பெயர் காரியத்திற்காய ஆகுபெயர்.
உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். 

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.
எய் - எறி (cast, throw)

எளிது

மன் - part. 1. An expletive; ஓர் அசைநிலை. ஆயிருதிணையி னிசைக்குமன் (தொல். சொல். 1).2. Affix indicative of (a) future tense; எதிர்காலங்காட்டும் இடைநிலை. (தொல். சொல். 1, சேனா. கீழ்க்குறிப்பு.) (சி. போ. பா. 1, உரை.): (b) ellipsis;ஒழியிசைக்குறிப்பு. கூரியதோர் வாண்மன் (தொல்.சொல். 252, உரை): (c) greatness, abundance;மிகுதிக்குறிப்பு. சிறியோன் பெறினது சிறந்தன்றுமன்னே (புறநா. 75): (d) change or transformation; பிறிதொன்றாகைக்குறிப்பு. பண்டு காடுமனின்று கயல்பிறழும் வயலாயிற்று (தொல். சொல். 252,உரை): (e) prosperity; ஆக்கக்குறிப்பு. திருநிலைஇயபெருமன்னெயில் (பட்டினப். 291): (f) what ispast and gone; கழிவுக்குறிப்பு. சிறியகட் பெறினேயெமக்கீயு மன்னே (புறநா. 235): (g) permanence;நிலைபேற்றுக்குறிப்பு. (நன். 432.) 3. A personalsuffix, as in vaṭamaṉ; ஒரு பெயர்விகதி.- ஒழியிசை (ஒழிந்தபொருள்தருஞ் சொற்களைத் தருவது.)


மன் - n. மன்னு-. 1. King; அரசன்.மன்னுடை வேலினாய் (சீவக. 1200). 2. Kṣattriya;warrior; க்ஷத்திரியன். மன்னாகி மறையவனாய் (சேதுபு. சேதுபல. 69). 3. Lord, chief; தலைவன்.மன்னுயிர் நீத்தவேலின் (பு. வெ. 4, 23, கொளு). 4.Husband; கணவன். மன்னொடுங்கூடி . . . வானகம் பெற்றனர் (சிலப். 25, 59). 5. The 26thnakṣatra. See உத்தரட்டாதி. (பிங்.) 6. Greatness; பெருமை. (யாழ். அக.) 7. Meanness,inferiority; இழிவு. (சூடா.)

மன்  - n. manu. Mantra; மந்திரம்.(பிங்.)

மற்று - இல்லையென்றால்
part. 1. An expletive; ஓர்அசைநிலை. (தொல். சொல். 264.) 2. A disjunctive;வினைமாற்றுக் குறிப்பு. (நன். 433.) 3. A term meaning other, another; பிறிதுப்பொருட் குறிப்பு. (நன்.433.)--adv. 1. Again; மறுபடியும். (W.) 2.Subsequently, afterwards; பின். 3. See மற்றப்படி.

மற்றந்தான் - மற்ற எண்ணங்களில் கவனச்செலுத்தி கவனச்சிதைவு கொள்வது

உள்ளியது - மனதில் நினைத்து
உள்ளப் - உண்மையான,  மனம், ஊக்கம், ஆத்மா,

பெறின் - பெறுவர்

முழுப்பொருள்
மனதில் தான் அடைய வேண்டிய குறிக்கோளை அடைவது மிக எளிமையான் ஒன்று ஒருவனுக்கு (மன்னனுக்கு, தலைவனுக்கு). எப்பொழுது என்றால் - நாம் அடைய வேண்டுமென்று ஒரு செயலை உளமாற நினைத்துக்கொண்டு இருக்கும் பொழுது மற்ற சிந்தனைகளில் சென்று கவனம் இழந்துவிடுவது நடக்கக்கூடியது. அவ்வாறு இல்லாமல் சிந்தனைக்களையாமல் உள்ளத்தால் அடைய வேண்டி நினைத்தவற்றை உளமாற பின் தொடர்ந்து சென்றால் தான் எண்ணியவற்றை எளிதாக பெறுவார்.

இங்கு பொச்சாவமை அதிகாரத்தில் இது வருவதால் தான் எடுத்தக்கொண்ட செயலை ஒரு பொழுதும் மறவாமல் இருப்பது சிறந்தது. ஏன் என்றால் ஒரு செயலை துவங்கும் பொழுது ஒரு உத்வேகம் இருக்கும்.  ஆனால் சில நாட்களுக்குப்பின் அது குறைந்து மற்ற சிந்தனைகளில் மனம் சென்று எடுத்த செயலில் ஊக்கம் குறைந்து மறந்துவிடுவர்.

மேலும் - அஷோக்

பரிமேலழகர் உரை
தான் உள்ளியது எய்தல் எளிது மன் - அரசனுக்குத் தான் எய்த நினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம், மற்றும் உள்ளியது உள்ளப் பெறின் - பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின். (அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழி இசைக்கண் வந்தது. அதனையே நினைத்தலாவது: மறவி இன்றி அதன்கண்ணே முயறல். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மன் தான் உள்ளியது எய்தல் எளிது - அரசன் தான் கருதிய பொருளைத் தான் கருதியவாறே பெறுதல் எளிதாம் ; உள்ளியது மற்றும் உள்ளப் பெறின் - தான் எண்ணியதைப் பின்னும் விடாது எண்ணக் கூடுமாயின்.

உள்ளியதை யுள்ளுதலாவது தான் கருதியதைப் பெறும் வரை மறவாது அது பற்றி முயற்சி செய்தல் . 'மற்று' பின்மைப் பொருளில் வந்தது . 'மன்' என்பதை இடைச் சொல்லாகக் கொண்டு , அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின் , 'மன்' ஒழியிசைக் கண் வந்தது ,என்னும் பரிமேலழகர் இலக்கணக் குறிப்பு இவ்விடத்திற்கு ஏற்காமை யுணர்க.


மணக்குடவர் உரை
தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது; பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின். இனிப் பொருளின்கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்ததனை மறவாமை வேண்டுமென்றார். 

மு.வ உரை
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.

சாலமன் பாப்பையா உரை
நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.

No comments:

Post a Comment