Search This Blog

திருக்குறள்

அறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

குறள் பால்: அறத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kura...

Wednesday, September 10, 2014

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்


குறள் 645: அதிகாரம் : சொல்வன்மை 

"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை 
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து."

பொருள்:
சொல்லுக சொல்லைப் - நாம் பேச்சில் இடம் பெரும் சொல் ஆனது 
பிறிதோர்சொல் - வேறொரு சொல் 
அச்சொல்லை வெல்லுஞ்சொல் - அந்தச் சொல்லை வெல்லக்கூடிய வேறொரு சொல்
இன்மை அறிந்து -இல்லாததை அறிந்து .

முழுப்பொருள்:
நம் பேச்சில் பயன்படுத்த வேண்டியச் சொற்கள் ஆனது, அந்த சொல்லை வெல்லக் கூடிய திறமை உடைய மற்றொரு சொல் இல்லவே இல்லை என்னும் நிலையில் இருக்க வேண்டும். நாட்டை ஆள்பவர்க்கும் ,அமைச்சர்களுக்கும் சொல்வன்மை இவ்வாறு இருக்க வேண்டியது அவசியம் எனக் கூறுகிறார் வள்ளுவர்.

பேச்சாற்றலால் மக்களை கவர்ந்து ஆட்சியை பிடித்தவர்களும் உண்டு .

தலைவர்களில் உதாரணமாக கூற வேண்டும் எனில். அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சு மற்றும் மொழித்திறமை மிகவும் பிரசித்தி பெற்றது.
சரியான சமயத்தில் ,சரியான சொற்களை கொண்டு சரியான கருத்துகளை அனைவருக்கும் எளிதாக புரியும் வண்ணம் கூறும் ஆட்ற்றல் கொண்டவர் அண்ணா.


உதாரணமாக, ஒரு தேர்தல் பிரசாரத்தின் பொழுது , பிரச்சாரத்தை முடிக்க இரண்டு  நிமிடமே உள்ள பொழுது...
" காலமோ சித்திரை, நேரமோ பத்தரை, உங்களுக்கோ நித்திரை,போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை..." எனக் கூறி அழகாக ,இதை விட இந்த குறுகிய காலக்கெடுவில் திறமையாக பேச முடியாது என்னும் அளவில் இக்குரலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது அந்தப் பேச்சு. 

பரிமேலழகர் உரை: 
சொல்லைப் பிறிது ஓர்சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து - தாம் சொல்லக்கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை அறிந்து; அச்சொல்லைச் சொல்லுக - பின் அச்சொல்லைச் சொல்லுக. (பிறிதோர் சொல் - மாற்றாரது மறுதலைச்சொல். வெல்லுதல் - குணங்களான் மிகுதல், அதுவே வெல்லச் சொல்லுக என்பதாம். இனிப் 'பிறிதோர் சொல்', 'வெல்லும் சொல்' எனச் செவ்வெண்ணாக்கி, ஒத்த சொல்லும் மிக்க சொல்லும் உளவாகாமல் சொல்லுக என்று உரைப்பாரும் உளர். இது சொற்பொருட் பின்வரும் நிலை.). 



No comments:

Post a Comment