Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

சொல்லுதல் யார்க்கும் எளிய


குறள் 664: அதிகாரம் : வினைத்திட்பம் 
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்"

விளக்கம்:
ஒரு செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் எனக் கூறுவது எல்லோருக்கும் எளிது.அனால் அதை சொல்லியபடி செய்து முடிப்பது மிகவும் கடினம். இக்குறளின் மூலம் இரு கிளை கருத்துகளை அறியலாம்.
1. செயல் திட்டம் தீட்டும் பொழுதே அதை நன்கு ஆராய்ந்து, செய்து முடிக்க கூடிய திட்டமாக தீட்ட வேண்டும். எளிதாக சொல்லி விட்டு பின்பு அதை முடிக்க சிரமப்படாமல் இருப்பதை தவிர்க்க.
2. மற்றவர்களின் செயலை எளிதாக விமர்சனம் செய்யாமல் ,அதை நாம் செய்தால் எவ்வளவு கடினம் ஆகா இருக்கும்..என்ன என்ன தடங்கல்களை சந்திக்க வேண்டும் என்று உணர்ந்து பேச வேண்டும்.

பிற இலக்கிய உதாரணங்கள்
நன்றி: அசோக் 
கம்பர் இராமயணத்தின் அரசியல் படலத்தில் இவ்வாறு கூறுகிறார்: “உரைசெயற் கெளிதுமாகி அரிதுமாம் ஒழுக்கில்”. புறநானூற்றுப் பாடலொன்றில், பாண்டியன் கீரஞ்சாத்தன் என்னும் குறுநில மன்னனின் வீரத்தைப் போற்றும் ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர், “எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின் கள்ளுடைக் உள்ளூர்க் கூறிய நெடுமொழி மறந்த சிறுபேராளர்” என்பார். வேலும் வாளும் வீசி விளையாடும் போர்களத்தில் ஊருக்குள் இருந்தபடி, மது உண்ட மயக்கத்தில் வீரம் பேசித் திரிந்தவர்கள், போர் வந்து விட்டபோது, பகைவரை எதிர்கொள்ள முடியாது பயந்து ஓட நினப்பவர்கள் என்று சிலரை இழந்து சொல்லுகிறார், இக்குறளின் கருத்தையொட்டி. (வெருவரு ஞாட்பின் – அச்சம்தரு போர்களத்தில்)

பரிமேலழகர் உரை
சொல்லுதல் யார்க்கும் எளிய - யாம் இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம் - அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம். (சொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின். 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.). 

No comments:

Post a Comment