Search This Blog

திருக்குறள்

அறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

குறள் பால்: அறத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kura...

Friday, February 14, 2014

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல

குறள் 151: அதிகாரம்: பொறையுடைமை 

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை 
இகழ்வார்ப் பொறுத்தல் தலை" 

அகழ் - தோண்டுதல்
இகழ் -பழிப்பது,அவமதிப்பது

விளக்கம்:
தன்னையே தோண்டும்  மனிதனைக் கூட  கீழே  விழுந்து விடாமல் தாங்கும் நிலம் போல , பழிப்பவர்க்லயும்,தூற்றுபவர்களையும் கூட பொறுத்து கொள்வது தலையாய பண்பாகும் .

இலக்கணம் 
உவமையணி
இங்கு,
 உவமானம்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்
உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்
உவமை உருபு: போல

பரிமேலழகர் உரை:
[அஃதாவது, காரணம் பற்றியாதல், மடைமையானாதல் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன்கண் செய்யாது பொறுத்தலை உடையராதல். நெறியின் நீங்கிய செய்தாரையும் பொறுக்க வேண்டும் என்றற்கு, இரு பிறன்இல் விழையாமையின் பின் வைக்கப்பட்டது.)

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம். (இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்).

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: அகழ்வாரை தாங்கும் நிலம் போல - (மண்வெட்டி கொண்டு தன்னைத்) தோண்டுவாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை - தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலையாய பொறுமை.

அகலம்: இகழ்வார் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. ‘தம்மை யிகழ்ந்தமை தாம் பொறுப்ப தன்றிமற், றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தா- லும்மை, யயரிவாய் நிரயத்து வீழ்வர்கொ லென்று, பரிவதூஉஞ் சான்றோர் கடன்’ - நாலடியார்.

கருத்து: தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலையாய பொறுமை.

No comments:

Post a Comment