Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

நெடும்புனலுள் வெல்லும் முதலை


குறள் 495: அதிகாரம்: இடன் அறிதல் 
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் 
நீங்கின் அதனைப் பிற.


புனல் - நீர் 
நெடும் புனலுள் - ஆழமான நீர் நிலையில் 
வெல்லும் முதலை - எளிதாக மற்றவற்றை வெல்லும் முதலை 
ஆடும் புனலின் நீங்கின்  - அந்த நீர் நிலை நீங்கினால் 

விளக்கம் :
முதலைக்கு பலம் நீரில் என கூறுவர். அதன் பலம் அறிந்து அது நீர் நிலையில், மற்ற உயிர்களை எதிர் கொள்ளும் பொழுது எளிதாக அவற்றை வெல்லும்.
அந் நீர் நிலையை விட்டு, வெளியே வந்தால் முதலையை மற்றவை எளிதாக வெல்லும். நாம் நம் பலம் அறிந்து,அதற்கு ஏற்ற  களம் அறிந்து ,எதிரிகளை எதிர் கொள்ள வேண்டும். களம் அறியாமல் , நமது பலத்தை வெளிக்காட்ட முடியாத இடத்தை தேர்ந்தெடுத்தால் அது பகைவருக்கு சாதகமாகவே முடியும் என குறிப்பால் உணர்த்துகிறார் வள்ளுவர் 



 பரிமேலழகர் உரை: 
முதலை நெடும்புனலுள்(பிற) வெல்லும் - முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின், பிறவற்றையெல்லாம் தான் வெல்லாநிற்கும்,
புனலின் நீங்கின் அதனைப் 'பிற' அடும் - அப்புனலின் நீங்குமாயின், அதனைப் பிற எல்லாம் வெல்லா நிற்கும். (
எனவே, 'எல்லாரும் தம்நிலத்து வலியர்' என்பது கூறப்பட்டது. 'பிற' என்பது முன்னும் கூட்டப்பட்டது. நிலைப்படா நீரின்கண் பிற நிற்றலாற்றாமையின்
 அவையெல்லாம் முதலைக்கு எளியவாம், அவை இயங்குவதற்குரிய நிலத்தின் கண் அஃது இயங்கலாற்றாமையின், 'அஃது அவற்றிற்கெல்லாம் எளிதாம்',
என்றது, மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றலாற்றா இடன் அறிந்து செல்வராயின், அவர் தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றா இடத்துச்
 செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம். அவரை அவர்
 நிற்றலாற்றாவிடத்துச் சென்று வெல்க என்பதாம்.). 

No comments:

Post a Comment